எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, January 18, 2014

டும், டும் மேளம் "கொ"ட்டும் ரசம்!

ஹிஹிஹி, "கொ"ட்டு ரசம்னால் நான் என்ன அது டும் டும்னு மேளமா கொட்டுதுனு கிண்டல் பண்ணுவேன்.  "Ghottu" என்றே பலரும் உச்சரிக்கையில் எங்க வீட்டில் என் அம்மாவோ அதை "good" ரசம் என்பார்.  ஆனால் இதை வைக்கையில் எரிச்சலாக வரும். அதாவது அந்தக் கால கட்டத்தில்!  இதைப் பொதுவாக மூன்று முறைகளில் வைக்கலாம்.

முதல் முறை:  நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்.

ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுக்குப் புளி(ஶ்ரீராம் குறைச்சுட்டோமுல்ல)

உப்பு,

பெருங்காயம்

ரசப்பொடி இரண்டு டீஸ்பூன் அல்லது ஒன்றரை டீஸ்பூன்

தக்காளி சின்னது ஒண்ணு இல்லைனா பாதி

கருகப்பிலை, கொத்துமல்லி

தாளிக்க

எண்ணெய்

கடுகு

இந்த ரசத்துக்குப் புளியை அப்படியே உருட்டியும் போடலாம்.  புளியைக் கரைச்சுக்கவும் கரைச்சுக்கலாம். உங்க செளகரியப் படி போட்டுட்டு, உப்பு, பெருங்காயம், தக்காளி,ரசப் பொடி, கருகப்பிலை, கொத்துமல்லி போட்டு நல்லாக் கொதிக்க வைங்க.  பொடி வாசனை, புளி வாசனை போகக் கொதித்ததும், தேவையான அளவுக்கு நீர் விட்டு விளாவவும்.  எண்ணெயில் கடுகு தாளிக்கவும். கருகப்பிலை, கொத்துமல்லித் திரும்பச் சேர்க்க வேண்டாம். கொதிக்கையில் சேர்த்தால் இந்த ரசத்தில் அதன் வாசம் மூக்கைத் துளைக்கும்.

இன்னொரு முறை மேற்கண்ட சாமான்களோடு ஒரு ஸ்பூன் துவரம்பருப்பை அப்படியே போட்டு ரசத்தைக் கொதிக்க வைப்பது. பெரும்பாலும் அந்தப் பருப்பு வீணாகித் தான் போகும் என்பதால் அரைத்தும் விடுவது உண்டு.

அதற்கு ஒரு ஸ்பூன் பருப்பையும் ஒரு ஸ்பூன் தனியாவையும் ஊற வைக்கவும்.  ஊறியதும் அம்மியில் (ஹிஹிஹி, இத்தனூண்டை மிக்சியில் அரைக்கிறது கஷ்டம்!) அரைத்து நீர் சேர்த்து ரசத்தில் விளாவலாம்.  பருப்பை மட்டுமே அரைத்து விடுபவர்களும் உண்டு.   நான் என்ன செய்வேன் என்றால் பருப்பு உசிலி பண்ணுகையில் கடைசியில் மிக்சி ஜாரை அலம்புகையில் அதில் இரண்டு டீஸ்பூன் அளவுக்கு அரைத்த மாவை மிச்சம் வைத்துக் கொண்டு அதில் நீர் விட்டுக் கரைத்து ரசத்தில் ஊற்றிவிடுவேன்.  ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்போமே!

{இன்னும் சிலர் ரசம் வைக்கும்போது ஒரு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் து.பருப்பை எண்ணெயில் வறுத்து ரசத்தில் சேர்ப்பார்கள்.  எல்லா முறைகளையும் முயன்று பாருங்கள். :)}

10 comments:

  1. கொட்டு ரசம் good ஆகா இருக்கிறதே. அவசரத்திற்கு செய்யலாம் போல் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜலக்ஷ்மி, ஆமாம் அவசரத்திற்கு மிகப் பயன்படும். :)

      Delete
  2. புளி அளவைக் குறைத்ததற்கு நன்றி... நன்றி... நன்றி!

    நாங்களும் செய்வோம்ல... பெயர் பற்றிக் கவலைப் பட மாட்டோம். தி.க்கு செய்யும் ரசம் போலவும் சாதா நாட்களில் செய்து விடுவோம்! ஜீ. க்கு நல்லது இல்லே!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, ஜீக்கு நல்லதுனு சொல்றீங்களா, இல்லைனு சொல்றீங்களா? :)))

      Delete
    2. நல்லதுன்னுதான் சொல்றேன்!

      Delete
  3. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்... இது சூப்பர் அம்மா...!

    ReplyDelete
  4. கொட்டு ரசம் செய்முறை தெரிந்து கொண்டேன்.. நன்றி மாமி..

    ReplyDelete
  5. வாங்க ஆதி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete