இன்னும் சில கீரை வகைகள் இருந்தாலும் அவற்றைச் சமைத்துப் பார்க்காமல் எப்படிச் சொல்வது? ஆகவே சொல்லவில்லை. அவற்றில் கல்யாண முருங்கை, புண்ணக்கீரை, தும்பைக்கீரை, மணலிக்கீரை, காசினிக்கீரை, (சிலர் புளிச்ச கீரை தான் காசினி என்கின்றனர்!) அதே போல் சக்கரவர்த்திக்கீரை(பருப்புக்கீரை தான் அப்படி அழைக்கப்படுகிறது என நினைக்கிறேன்.)சாணக்கீரை, வெள்ளைக்கீரை, விழுதுக்கீரை, ஆரக்கீரை, துத்தி, குப்பைக்கீரை (குப்பைமேனி அல்ல) போன்றவை அடங்கும். இவற்றில் க்ளாவர் போன்ற அமைப்புடன் இருக்கும் ஆரக்கீரை நீரிழிவு நோய்க்குச் சிறந்த மருந்து எனச் சொல்லப்படுகிறது. பொதுவாகவே பச்சைக்காய்களும், கீரை வகைகளும் உடல் நலத்துக்கு ஏற்றவை. கிடைக்கும் கீரைகளை வாங்கிச் சாப்பிட்டாலே போதும். கீரை வகைகள் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகின்றன.

ஆரக்கீரை
மேற்சொன்ன கீரைவகைகளைச் சமைத்தது இல்லை. ஆகவே சொல்லவில்லை. இப்போச் சில திப்பிச வேலைகளைச் சொல்றேன். முந்தாநாளைக்கு இட்லிக்குத் தேங்காய்ச் சட்னி அரைச்சேன். மிஞ்சிப் போச்சு. சரினு நேத்திக்குக்கொஞ்சம் போல் கொ.வி. க.ப.து.ப. நனைச்சு வைச்சுக் கொஞ்சூண்டு தேங்காயோடு அரைச்சுச் சட்னியில் கொஞ்சம் எடுத்துக் கலந்துகொண்டு தயிரில் கலந்தேன். உப்புப் பார்த்துப் போடணும். ஏனெனில் சட்னிக்கு உப்புப் போட்டு அரைச்சிருக்கோமே! தயிரில் கலந்தது நிறைய இருக்கவே அவ்வளவு செலவாகாதுனு கொஞ்சம் எடுத்து வைச்சுட்டு மிச்சம் இருக்கும் கலவைக் குழம்பில்,மஞ்சள் பொடி, பெருங்காயத் தூள், தயிருக்குத் தேவையான உப்பு மட்டும் போட்டு சேப்பங்கிழங்கை வேகவைத்துக் கலந்து அடுப்பில் வைத்துச் சூடு பண்ணினேன். நன்கு கொதித்து வந்ததும் கீழே இறக்கித் தே.எண்ணெயில் கடுகு, வெந்தயம், கருகப்பிலை, பாதி மி.வ. தாளித்தேன். மோர்க்குழம்பு ரெடி. இன்னொரு நாளைக்குக் குளிர்சாதனப் பெட்டியில் உப்புச் சேர்க்கப்படாமல் கொதிக்க வைக்கப்படாமல் தயார் ஆகக் காத்துட்டு இருக்கு.

அப்படியும்கொஞ்சம் சட்னி மிச்சம் தான்! எல்லாம் இந்த ரங்க்ஸை நம்ப முடியறதே இல்லை. ஒரு நாளைக்குப் போட்டுப்பார். ஒரு நாளைக்குப் போட்டுக்க மாட்டார். அதுக்காகக் கொஞ்சமா அரைச்சாப் பாத்திரத்தைத் தடவவா முடியும்! மிஞ்சின சட்னியை என்ன செய்யறதுனு ம.கு. இன்னிக்கு மத்தியானம் சாப்பாடுக்குக் காய் என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ 2 நாள் முன்னர் பீன்ஸ், காரட் கறிக்கு நறுக்கி மிஞ்சி இருந்த பீன்ஸ், காரட் துண்டங்கள் நினைவில் வந்தன. ஒரு சின்னத் துண்டு பறங்கிக்காயும் இருந்தது. அதையும் நறுக்கி அவற்றோடு சேர்த்து நன்கு நீர் விட்டுக் கழுவி வடிகட்டி வைத்துக் கொண்டேன். சின்னக்குக்கரில் இரண்டு டீஸ்பூன் பாசிப்பருப்பைக் கழுவிச் சேர்த்தேன். ஒரு தம்பளர் நீர் ஊற்றினேன். அலம்பி வைத்திருந்த காய்களையும் அதில் சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி போட்டு இரண்டு விசில் கொடுத்து இறக்கினேன். பின்னர் திறந்து அதில் மிச்சம் இருக்கும் சட்னி விழுதைக் கலந்து அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு இறக்கினேன். தே.எண்ணெயில் கடுகு, உபருப்பு, மி.வத்தல் பாதி, கருகப்பிலை தாளித்துக் கொஞ்சம் துருவிய தேங்காயை இரண்டு டீஸ்பூன் போட்டு வறுத்துக் கூட்டில் சேர்த்தேன். கூட்டு நன்றாக இருந்தது. என்னோட அம்மா பொரிச்ச கூட்டுப்பண்ணுவது எனில் காய்களை வேகவைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து, அரை ஸ்பூன் சாம்பார்ப் பொடி போட்டு வெறும் தேங்காயும், அரிசியும் மட்டும் அரைச்சு விடுவார். அநேகமாக நான் தான் அம்மியில் அரைத்துக் கொடுப்பேன் என்பதால் நன்றாகத் தெரியும். பொரிச்ச கூட்டில் பருப்பு இருக்காது. அநேகமா என் பிறந்த வீட்டில் பொரிச்ச கூட்டு எனில் பருப்பு இல்லாமலே செய்வாங்க. புளி விட்ட கூட்டு எனில் கொஞ்சமாகத் துவரம்பருப்பு குழைய வேக வைத்துச் சேர்ப்பார்கள். பொரிச்ச குழம்பு என்றால் தான் பாசிப்பருப்போ, துவரம்பருப்போ போடுவார்கள்.
இது போலத் தான் முன்னர் ஒரு நாள் மோர்க்குழம்பு வைத்தது மிஞ்சிப் போயிற்று. அதிலிருந்தே இப்போல்லாம் மோர்க்குழம்புக்கு அரைத்துக் கலக்கும்போதே கொஞ்சமாக் கலக்கிப்பேன். நிறைய இருந்தா எடுத்துத் தனியே வைச்சுடுவேன் இன்னொரு நாளைக்கு ஆகட்டும் என! ஆனா அன்னிக்கு என்ன செய்யறது, இவ்வளவு நல்ல மோர்க்குழம்பைனு நினைச்சப்போ தஹி ஆலூ நினைவில் வர, உ.கி. வேகப் போட்டுத் துண்டங்களாக எடுத்துக் கொண்டேன். கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி, ப.மி. போட்டு, வெங்காயம் போட்டு நன்கு வதக்கிக் கொண்டு உ.கி. போட்டு வறுத்து மி.பொடி, த.பொடி.ம.பொடி சேர்த்து நன்கு வதக்கினேன். பின்னர் கொஞ்சம் கரம் மசாலாவும் போட்டு நன்கு வதக்கினேன். மோர்க்குழம்பை எடுத்துச் சூடாக்கி வதக்கிய உ.கி. மசாலாவை அதில் போட்டு மேலே கொஞ்சம் போல் அன்று எடுத்த புது க்ரீமைச் சேர்த்தேன். க்ரீம் இல்லைனா வெண்ணெய் போட்டுக்கலாம். கசூரி மேதி சேர்த்துக் கீழே இறக்கிப் பச்சைக் கொ.மல்லி தூவினேன். அன்றைய இரவுக்குச் சப்பாத்திக்கான சைட் டிஷ் தயார்.

படங்களுக்கு நன்றி கூகிளார் வாயிலாக தினகரன்!
இப்போத் தான் இந்த உ.கி. சாப்பிடவே பயம்மா இருக்கே!