பிடிச்சால் சாப்பிடுங்க. இப்போ எங்க வீட்டிலே கஞ்சி சீசன். :))) புழுங்கலரிசிக் கஞ்சி போடறேன். ஐய னு சொல்றவங்க கொஞ்சம் பொறுமையாகக் கேட்டால் கஞ்சியைப் பத்தித் தெரிஞ்சுக்கலாம்.
அரை கிலோ புழுங்கலரிசி, இட்லி அரிசியானாலும் பரவாயில்லை. அதோடு நூறு கிராம் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்துக் களைந்து நீரை வடிகட்டிக் கொள்ளவும். வெறும் வாணலியில் இரண்டையும் வறுக்கவும். வாசனை வரும்வரை வறுக்கலாம். ஆற வைத்து மிக்சி ஜாரில் போட்டுக் குருணை அல்லது ரவை பதத்துக்குப் பொடித்து ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ளவும். இந்தக் குருணை அல்லது ரவை ஒருத்தருக்கு ஒரு கரண்டி வீதம் எடுத்துக்கொள்ளவும்.
அதுக்கு முன்னால் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து முளைகட்டிக்கொள்ளவும். வெந்தயம் ஊறிய மஞ்சள் நீரைக் கொட்ட வேண்டாம். பச்சைக்காய்கள் புடலை, வெள்ளரிக்காய், காரட், பீன்ஸ், கீரை போன்றவை பொடிப்பொடியாக நறுக்கி ஒரு கிண்ணம். தேங்காய் கீறியது(விருப்பமானால்) ஒரு டேபிள் ஸ்பூன், பால் ஏதேனும் ஒரு பால் 200 கிராம். அல்லது விருப்பமிருந்தால் தேங்காய்ப் பால் ஒரு மூடித் தேங்காயில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். உப்பு தேவையான அளவு, பெருங்காயம், மிளகுத் தூள், பச்சை மிளகாய் ஒன்று, ஒரு துண்டு இஞ்சி. தாளிக்க நெய் ஒரு டேபிள் ஸ்பூன், ஜீரகம், கருகப்பிலை. கொத்துமல்லி, புதினா பொடிப் பொடியாக நறுக்கிக் கடைசியில் மேலே தூவ வைத்துக்கொள்ளவும். முழுப்பயறு இருந்தாலும் ஊற வைத்து முளைகட்டிச் சேர்க்கலாம்.
புழுங்கலரிசி ரவையை வெந்தயம், முளைகட்டிய பயறோடு இரண்டு கிண்ணம் நீரில் நன்கு கரைய விடவும். நன்கு வெந்து கெட்டியாக ஆகும் சமயம் நறுக்கிய காய்களைச் சேர்த்துக் கொஞ்சம் நீரும் பாலும் சேர்க்கவும். காய்கள் வெந்து வரும் சமயம் உப்பு, மிளகுத்தூள், பச்சைமிளகாய், இஞ்சி(சிதைத்துக் கொண்டு) சேர்க்கவும். நன்கு கெட்டியாகக் குழைவாக வெந்து வந்ததும், மீதம் இருக்கும்தேங்காய்ப் பால்/ பாலையும் சேர்க்கவும். கஞ்சி ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல், நீர்க்கவும் இல்லாமல் கையால் எடுத்துச் சாப்பிடும் பதத்தில் இருக்க வேண்டும். நெய்யில் ஜீரகம், கருகப்பிலை தாளித்துக் கொண்டு கொத்துமல்லி, புதினா தூவிவிட்டுக் கஞ்சியை எலுமிச்சை ஊறுகாய் அல்லது பொடிப்பொடியாக நறுக்கிய மாங்காய் ஊறுகாயோடு சாப்பிடலாம்.