சூரி சார் உ.கி. பொடிமாஸ் பத்தி கூகிள்+இல் கேட்டிருந்தார். நேத்துத் தான் பார்த்தேன். :))) அப்புறமா நேத்தி இணையமும் இல்லை. விருந்தினரும் வருகை தந்திருந்ததால் உடனடியா எதுவும் எழுத முடியலை. ஊரிலே இருந்து வந்த அலுப்பு வேறே! இன்னிக்கு எழுதிடறேன்.
நான்கு பேருக்கான செய்முறைக்குறிப்பு:-
அரை கிலோ உருளைக்கிழங்கு, தேங்காய் மூடி ஒன்றின் துருவல், பச்சை மிளகாய் நான்கு, இஞ்சி ஒரு துண்டு, உப்பு, தாளிக்க கடுகு, உபருப்பு, க.பருப்பு, பெருங்காயத் தூள், கருகப்பிலை, கொத்துமல்லி, எலுமிச்சை மூடி ஒன்று. தாளிக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்.
உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோலை உரித்துக்கொண்டு (ஹிஹிஹி) உதிர்த்துக் கொள்ளவும். உப்புப் பொடி சேர்த்துக் கிளறிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, ப.மிளகாய், இஞ்சி, கருகப்பிலை போட்டுத் தாளித்துக் கொண்டு, உப்புப் போட்டுக் கலந்த உருளைக்கலவையைக் கொட்டிக் கிளறவும். தேங்காய்த் துருவல் சேர்க்கவும். நன்கு கிளறி விட்டுக் கீழே இறக்கிக் கொத்துமல்லிப்பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். சற்று ஆறியதும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். வத்தல் குழம்போடு அருமையான துணை!
நேத்திக்கு உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்தேன். நல்லவேளையா சாப்பிடும் முன்னர் படம் எடுக்கத் தோணித்து. உடனே படம் எடுத்துப் போட்டிருக்கேன். எங்கே? யாரும் கண்டுக்கிறதே இல்லை. :))))
ஆஹா.... என்ன சுவை..என்ன சுவை...
ReplyDeleteஅது சரி...உருளைக்கிழங்கு தோலிய எப்ப சீவறது?
வேகவைக்கறதுக்கு முன்னாடியா....வெந்தப்பறமா...
சொல்லவேண்டாமா...
அப்படியே வேகவிட்டு, அதையும் எல்லாத்தையும் போட்டு, என்னடா
தோலி தோலி மாதிரி இருக்குன்னு பார்த்தா,
ஆஹா...தோலிய உரிக்க மறந்து போயிட்டேனே....
ஆத்துக்காரிய கூப்பிட்டு அவ பாத்தா
என் தோலிய உரிச்சுடுவா..
என் உத்யோகமும் போயிடுமே....
என்னதான் இருந்தாலும் உருளைக்கிழங்கு பொடிமாஸ் ஜோர்..
அதுவும் ராம நவமின்னு ...
அது சரி கடாயிலே அப்படின்னா என்ன...?
கடா அப்படின்னா எங்க திருச்சிலே ஆட்டுக்கடா எருமைக்கடா அதுக்குத்தான் சொல்வோம்.
இந்த கடா என்ன கடா ?
என்னன்னு கேட்டுகினே கிழவி வந்துட்டா.
அவசர அவசரமா போஸ்ட் பண்ணிடறேன்.
சுப்பு தாத்தா.
pl come here to have a taste of Rasam.
www.subbuthatha.blogspot.in
சூரி சார், சேர்த்துட்டேன். தோலை உரிக்கணும்னு சொல்ல வேண்டாம், அதான் தெரியுமேன்னு நினைச்சேன். :)))))
Deleteமிக்க நன்றி...
ReplyDeleteசுப்புத் தாத்தா இப்படி கிளப்புவார் என்று எதிர்ப்பாக்கவேயில்லை... ஹா...ஹா..
வாங்க டிடி, ஹிஹிஹி, நானும் பதிவிலே திருத்திட்டேன். :))))
Deleteமற்றதெல்லாம் ஓகே. எலுமிச்சை ரசம்?
ReplyDeleteஆனால் ரொம்பச் சுலபம்!
வாங்க ஸ்ரீராம், எது சுலபம்? எலுமிச்சை ரசமா? அடையோடு சேர்த்துச் சாப்பிட ரொம்பப் பிடிக்கும். :)))))
Deleteஇதற்கு ஏன் பொடிமாஸ் என்று பெயர் வந்தது?
ReplyDeleteவேக வைத்து உதிர்த்துச் செய்யும் கறிவகைகளைப் பொடிமாஸ்னு சொல்றாங்க அப்பாதுரை. வாழைக்காய்ப் பொடிமாஸ் தெரியுமா? தென் மாவட்டங்களில் பிரபலம். தஞ்சாவூர்க்காரங்களுக்குச் சரியாப் பண்ண வராது. வாழைக்காயை நல்லாக் குழைய வேக வைச்சுட்டுத் திண்டாடுவாங்க. ஹிஹிஹிஹி
Deleteநல்ல குறிப்பு! :)
ReplyDeleteதுரை கேட்ட கேள்வி எனக்குள்ளும்!
வாங்க வெங்கட், பதில் சொல்லி இருக்கேன் பாருங்க.
Deleteஇதற்கு ஏன் பொடி மாஸ் என்று பெயர் வந்தது ? அப்படின்னு அப்பாதுரை ஸார்
ReplyDeleteஅமெரிக்காவிலிருந்து கேட்டிருக்கிறார். சரியான கேள்வி.
அதற்கு இந்த அவசரக்குடுக்கு உடனடியான பதில்.
மாஸ் க்ளாஸ் என்று இரண்டு வெரைட்டி உண்டு .
மாஸுக்காக ஒரு தினுசாகவும்
களாசுக்காக இன்னொரு தினுசாகவும்
செய்வார்கள்.
நீட்லஸ் டு சே , மாஸுக்காக பண்ரது கொஞ்சம் விலை குறைச்சலா இருக்கும்.
காரி ஓவர் நல்ல எண்ணைலே பண்ணலாம். இல்லே கிழங்கு புதுசா இல்லாம இருக்கலாம்.
கொஞ்சம் ஓவர் ஃப்ரைடு ஆகவும் இருக்கலாம். இதெல்லாம் செகன்டு ஹான்டு குட்ஸ் மாதிரி.
செகன்டு சேல்.
க்ளாஸுக்காக பண்றது சீஃப் குக்கே நேரே பண்ணுவார். ஆத்து மாப்பிள்ளை சாப்பிடப்போறார் அப்படின்னா
எத்தனை கவனத்தோட பண்ணனும்... அது மாதிரி.
இதே உருளைக்கிழங்கு பொடி மாஸிலே கடைசி ஸ்டெப்பா , கொஞ்சம் 200 கிராம் மிந்திரி பருப்பு, கொஞ்சம் 100 கிராம் பாதம்பருப்பு, 50 கிராம் பிஸ்தா நெய்யிலே வருத்து கருகப்பிலையை நெய்யிலே ஃப்ரை பண்ணிப்போட்டு பாருங்கோ... அது சுவையே தனி தான்.
சுப்பு தாத்தா.
ரொம்ப காஸ்ட்லியான பொடிமாஸா இருக்கே? கட்டுபடி ஆகாது சார்! :)))
Deleteநன்றி சூரி சார் :)
ReplyDeleteபடம் சேர்த்திருக்கேன், பாருங்க.
Delete