கம்பு!
சிறு தானியங்களில் முதல் இடம் கம்புக்குத் தான். ஆனாலும் இது ஆஃப்ரிக்காவில் இருந்து வந்தது எனக் கூறப்படுகிறது. ஆனாலும் இப்போது சுமார் 40 நாடுகள் கம்பைப் பயிரிடுவதாய்க் கூறுகின்றனர். மானாவாரியாகவும் விளையும் கம்பு நீர்ப் பாசனத்திலும் விளையும். என்றாலும் பெரும்பாலும் புஞ்சை நிலப் பயிர்தான்! இந்தியாவில் அதிகம் பயிரிடும் உணவுப் பொருட்களில் கம்புக்கு முக்கிய இடம் உண்டு. வட மாநிலங்களில் Baபாஜ்ரா என அழைக்கப்படும் கம்பு. இந்த Baபாஜ்ரா மாவில் ரொட்டி செய்து பச்சை மிளகாயை எலுமிச்சைச் சாறில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து ஊற வைத்து எண்ணெயில் வதக்கித் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். கம்பு மாவோடு கோதுமை மாவும் சேர்த்துக்கொண்டு மிளகாய்ப் பொடி, உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடியோடு கசூரி மேதி எனப்படும் உலர்ந்த வெந்தயக்கீரையைச் சேர்த்துச் சப்பாத்தி, பூரி செய்து சாப்பிடுவார்கள். பூரியை மொறுமொறுவென எடுத்தால் சில நாட்களுக்கு வைத்துக் கொள்ளலாம்.
கம்பில் தான் அதிக அளவு புரோட்டீன் இருப்பதாய்ச் சொல்லப்படுகிறது. தோலுக்கும் நன்மை பயக்கும் என்கின்றனர். கண்பார்வைக்கு முக்கியமான பீட்டா கரோட்டின் கம்பில் அதிக அளவு இருப்பதால் வைடமின் ஏ நிறைய இருக்கிறது. இதைத் தவிரவும் கால்சியம், இரும்பு, ரிபோஃப்ளேவின், நயாசின், வைடமின்கள் ஆகியவை அடங்கியது கம்பு. எண்ணெய்ச் சத்து இருப்பதால் உடலுக்கு உகந்த நல்ல கொழுப்புக் கிடைக்கும் என்பதோடு உடல் சதையைக் குறைத்து உடலை இளைக்க வைக்கும். இந்தக் கம்பு இந்தியா வந்து சுமார் 2000 வருடங்களுக்கும் மேல் இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதிகமான தட்ப, வெப்பத்தையும் பொறுத்துக்கொள்ளும் கம்புப் பயிர் வறட்சியான நிலங்களிலும் வளரும் இயல்பு கொண்டது. நிலத்தில் ஊட்டச் சத்துக் குறைவாக இருந்தாலும் கம்பு நன்றாகவே வளரும் இயல்பு கொண்டது.
கம்பை அறுவடை செய்ததும் நன்கு உலர வைப்பார்கள். இது 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை வரும். அப்படியும் மிகுதி இருக்கும் தானியத்தை மீண்டும் உலர வைத்துப் பயன்படுத்தலாம். விரைவில் வீணாகாது. நொச்சி இலைகளைக் காய வைத்துக் கம்போடு கலந்து வைத்தாலும் பூச்சிகள் தாக்காது. (நான் எல்லாவற்றிலும் வசம்பு போட்டு வைத்திருக்கேன்.) கம்பின் தொன்று தொட்டுச் செய்து வருவது கம்புச் சோறு ஆகும். இது விரைவில் வீணாகாது. கம்பில் கூழும் செய்யலாம். கம்பை ஊற வைத்த நீரும் உடலுக்கு நன்மை பயக்கும். உடல் உஷ்ணம் அடைவதைக்குறைத்து வயிற்றுப் புண், மலச் சிக்கல் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கிறது. இனி கம்பில் செய்யும் உணவு வகைகளைப் பார்க்கலாம்.