எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, June 13, 2020

(எங்க வீட்டு) பாரம்பரியச் சமையலில் சர்க்கரைப் பாயசங்கள்! 2

carrot payasam recipe, how to make carrot payasam | carrot kheer ...

காரட் பாயசம்: காரட்டிற்கே தித்திப்புச் சுவை உண்டு. அதிலும் வட மாநிலங்களின் சிவப்புக் காரட் நம்ம தென் மாநிலங்களின் ஆரஞ்சு நிறக் காரட்டை விடச் சுவையாக இருக்கும். பச்சையாக அப்படியே சாப்பிடலாம். இதில் அல்வா, பாயசம், கீர் போன்றவை பண்ணுவார்கள். முதலில் வெறும் காரட் மட்டுமே போட்டுப் பண்ணும் பாயசம் பார்க்கலாம். நான்கு பேருக்கான அளவு கீழே:-

காரட் 100 கிராம் கழுவித் துருவிக் கொள்ளவும்

சர்க்கரை 100 கிராமில் இருந்து 200 கிராம் வரை அவரவர் ருசிக்கு ஏற்ப

சுண்டக் காய்ச்சிய நல்ல கொழுப்புச்சத்துள்ள பால் இரண்டு கிண்ணம்

ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன்.

முந்திரிப்பருப்பு இரண்டு மேஜைக்கரண்டி, நெய் இரண்டு மேஜைக்கரண்டி.

அடி கனமான பாத்திரத்தில் அல்லது உருளியில்  நன்கு கழுவித் துருவிய காரட்டை ஒரு மேஜைக்கரண்டி நெய்யை ஊற்றிக் கொண்டு நன்கு வதக்கவும். காரட் நன்கு சுருள வதங்க வேண்டும். காரட் நன்கு வதங்கியதும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை சேர்த்ததும் நீர் விட்டுக்கொள்ளவும். கவலைப்படாமல் கிளறுங்கள். காரட்டும் சர்க்கரையும் நன்கு சேர்ந்து வரும்போது ஏற்கெனவே சுண்டக் காய்ச்சி வைத்திருக்கும் பாலைச் சேருங்கள். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும். ஏலப்பொடி சேர்த்து மீதம் உள்ள நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்துச் சேர்க்கவும். இதே போல் பறங்கிக்காய், வெள்ளைப் பூஷணிக்காயிலும் பாயசம் பண்ணலாம். இதோடு கொஞ்சம் பாதாம், முந்திரியை ஊற வைத்து அரைத்துச் சேர்க்கலாம். சர்க்கரை கரைந்ததும் அரைத்த பாதாம், முந்திரி விழுதைச் சேர்த்து விடலாம். பின்னர் இறக்கும் முன்னர் பாலைச் சேர்க்கலாம்.

காரட், தேங்காய், அரிசி, பாதாம், முந்திரி அரைத்துச் செய்த பாயசம். 

இதற்குக் காரட் கொஞ்சமாக இருந்தால் போதும். நிதானமாக ஒரு பெரிய காரட் எனில் அதைக் கழுவித் துருவிக் கொள்ளவும்.

தேங்காய்த் துருவல் இரண்டு மேஜைக்கரண்டி, நெய் இரண்டு மேஜைக்கரண்டி

அரிசி ஒரு சின்னக் குழிக்கரண்டி கழுவி நீரில் ஊற வைக்கவும். இதோடு சேர்த்து ஏலக்காயையும் ஊற வைத்துக் கொள்ளலாம். பாதாம், முந்திரி வெந்நீரில் ஊற வைக்கவும் தனித்தனியாக.

காரட் துருவலோடு, தேங்காய்த் துருவலைச் சேர்த்து வைக்கவும். பாதாம் தோலை உரித்து வைக்கவும். பாதாமை முதலில் போட்டுக் கொஞ்சம் அரைத்த பின்னர் முந்திரியைச் சேர்த்து அரைத்துக் கொண்டு அரிசி+தேங்காய்+காரட் துருவலை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுக் கொண்டு கொரகொரவென அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்ததும் அந்த மிக்சி ஜாரில் நல்ல நீர் விட்டு நன்கு அலம்பி அந்த ஜலத்தையும் அரைத்த விழுதோடு சேர்க்கவும். அடுப்பில் உருளியை வைத்து//அல்லது கடாயை வைத்துக் கொண்டு நெய் ஒரு மேஜைக்கரண்டி ஊற்றவும். அரைத்த விழுதை அதில் போட்டு நன்கு வதக்கிக் கொண்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நீரைச் சேர்க்கவும். கட்டி தட்டாமல் கைவிடாமல் கிளறவும். நீரை விடும்போதே கட்டி தட்டிவிடும். ஆகவே கவனமாகச் செய்யணும். தேவையான நீரைச் சேர்த்துக் கொண்டு போதும் என்று தோன்றும்போது நிறுத்திவிட்டு அடுப்பை நிதானமாக எரிய வைத்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். மெல்ல மெல்ல கெட்டிப்படும்போது இந்த அளவுக்குத் தேவையான ஒன்றரைக் கிண்ணம் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை சேர்த்ததும் மறுபடி நீர்த்துக் கொள்ளவும். கவலைப்படாமல் கிளறவும். பின்னர் சேர்ந்து வரும். தேவையானால் மில்க் மெயிட் அல்லது சுண்டக்காய்ச்சிய பாலைச் சேர்க்கலாம். இதில் மேலே பொடியாக நறுக்கிய பருப்பு வகைகளைத் தூவலாம். அல்லது கிஸ்மிஸ் மட்டும் நெய்யில் வறுத்துப் போடலாம்.

வெறும் அரிசி+தேங்காய் அரைத்துச் செய்த பாயசம்

சின்னக்கிண்ணம் அரிசியை எடுத்துக் களைந்து கொள்ளவும். அடுப்பில் அடி கனமான உருளி அல்லது கடாயைப் போட்டு ஒரு மேஜைக்கரண்டி நெய்யை ஊற்றவும். காய்ந்ததும் களைந்த அரிசியைப் போட்டுச் சிவப்பாக வறுக்கவும். பின்னர் அடுப்பை அணைக்கவும். வறுத்த அரிசி ஆறியதும் தேங்காய்த் துருவல் ஒரு மேஜைக்கரண்டி சேர்த்து ஏலக்காய் நாலைந்தும் உரித்துப் போட்டு நன்கு கொரகொரவெனப் பொடி செய்யவும். அல்லது நீர் விட்டும் அரைக்கலாம். மிக்சி ஜாரில் நீர் விட்டு அலம்பி அதையும் அரிசி தேங்காய்க் கலவையோடு சேர்க்கவும். அடி கனமான உருளியில் நெய் ஊற்றிக் கரைத்து வைத்திருக்கும் அரிசி+தேங்காய் விழுதைப் போட்டுக் கொஞ்சம் நீர் விட்டுக் கை விடாமல் கிளறவும். அரிசி கட்டி தட்டாமல் பார்த்துக் கொள்ளவும். அரிசி நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். இந்த அளவுக்கு ஒரு கிண்ணம் சர்க்கரை போதும். சர்க்கரை சேர்த்து நன்கு கரைந்து கெட்டியானதும் கீழே இறக்கி முந்திரிப்பருப்பு நெய்யில் வறுத்துச் சேர்க்கலாம். அல்லது தேங்காய்க் கீற்றுகளை மட்டும் நெய்யில் வறுத்துச் சேர்க்கலாம். வெல்லப்பாயசம் பண்ணும் அதே முறை. ஆனால் இங்கே சர்க்கரை போட வேண்டும்.


22 comments:

  1. கேரட் பாயசமா?  இதுவரை சாப்பிட்டதில்லை.  ஆமாம், மழை பெய்ததா?

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்கும். அதிலும் நான் வைக்கும் பாயசம் காரட்+பாதாம்+முந்திரி+தேங்காய்+அரிசிப் பாயசத்துக்குப் பல ரசிகர்கள் உண்டு. :)

      மழை பெய்யலை. மூன்றரை மணிக்குப் பின்னர் வெயில் வந்தது. மறுபடி யார் மொட்டை மாடிக்குப் போறது! அதுங்க ரெண்டையும் படம் எடுத்து வைச்சிருக்கேன். அப்புறமாப் போடறேன்.

      Delete
    2. இங்கி மழை மட்டுமல்ல... குளிர்காலம் ஆரம்பித்ததுபோலவே ஒரு வாரமா இருக்கு.

      Delete
    3. இன்னிக்குக் காலம்பர வைச்சதுமே மோடம் போட்டது. விடாமல் வாயு பகவான் வேறே! இப்போக் கொஞ்சம் காற்று நின்று வெயில் அடிக்கிறது.

      Delete
    4. இங்கு சிலு சிலுன்னு இருக்கு!! நெல்லை சொல்றாப்ல...

      ஃபேன் போடாமலேயே. பகலிலும் சரி, இரவிலும் சரி.

      கீதா

      Delete
    5. காற்றும் வெயிலுமாய் இருக்கு. என்னோட கொத்தவரை வற்றல் என்ன ஆச்சுனு போய்ப் பார்க்கணும். :)))))

      Delete
  2. கேரட் பாயசம் ஒருமுறை கேரட் மிஞ்சினபோது செய்திருக்கேன். உங்க மெதட் மாதிரி இல்லை. நீங்க சொல்லியிருக்கும் மெதட் சரியான ஒன்று.

    செய்துபார்க்கணும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லையாரே, சிலர் காரட்டைக் குக்கரில் வேகவைத்துக் கொண்டு பாலோடு சேர்த்து அரைத்துச் சர்க்கரை போட்டுப் பண்ணுவாங்க. அது எனக்கு/எங்களுக்கு அவ்வளவாப் பிடிக்கலை. சுசிருசியா இருக்கணும் கொஞ்சம் போல் சாப்பிட்டாலும் போதும்.

      Delete
    2. நானும் நெய்யில் வதக்கித்தான் செய்வது.

      நெல்லை தில்லி காரட், ஊட்டி கேரட்னு சூப்பரா நல்ல ஆழ்ந்த ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் கிடைக்கும். நீளமா..இங்கு பங்களூரில் பார்த்திருப்பீங்களே. அந்தக் கேரட் கிடைச்சா வீட்டுல அந்த கேரட்தான் செமையா இருக்கும். மற்ற ஆரஞ்சு கேரட்டும் நல்லாத்தான் இருக்கும்னாலும் கூட இந்த சிவப்பு செமையா இருக்கும்.

      கீதா

      கீதா

      Delete
    3. இங்கே ஆரஞ்சு காரட் தான் கிடைக்கும். சிவப்பு காரட் எனில் தித்திப்பு அதிகம்.

      Delete
  3. எனக்கென்னவோ, பாகிஸ்தானி கேரட் என நான் சொல்லும் சிவப்பு கேரட்டில் அவ்வளவாக விருப்பம் இருந்ததில்லை. ஆஸ்த்ரேலியன் கேரட்டில்தான் எல்லாம் பண்ணுவேன்.

    இந்த ஊரில் சென்றவருடம் நீங்க சொல்லும் கேரட் கிலோ 20 ரூபாய்னு கிடைத்தது. வாங்கி கூட்டு செய்தால் இனிப்பு அதிகம்போல் தெரிந்தது. அதை அப்போது கேரட் அல்வா பண்ணியிருக்கணைம் என இப்போ நினைத்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழரே, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பாகிஸ்தானி காரட்டெல்லாம் இல்லை. வடமாநிலங்களில் விளையும் காரட்டே நல்ல சிவந்த நிறத்தோடு தித்திப்பு அதிகமாக இருக்கும். அதே போல் உருளைக்கிழங்கும் அங்கே தித்திப்பாக இருக்கும். உருளைக்கிழங்கை வேக வைத்தால் மாவாக வெந்து விடும்.

      Delete
  4. இரண்டாவது வகை, அரிசி தேங்கா பாயசத்தில் கேரட் சேர்க்கும் முறை மாதிரி இருக்கு. இதையும் ருசித்ததில்லை. விரைவில் செய்யணும்.

    ReplyDelete
    Replies
    1. அரிசி+தேங்காய்+பாதாம்+முந்திரி+காரட் சேர்க்கணும். செய்து பாருங்க. நல்லாக் குறுகினதும் பாலைச் சேர்த்து(பாலும் கெட்டியாகச் சிவந்த நிறத்தில் குறுக்கிய பாலாக இருந்தால் நல்லது.) ஒரு கொதி விட்டு இறக்கிடணும்.

      Delete
  5. அரிசி தேங்காய் பாயசம் நல்லாவே இருக்கும். நாக்கில் ருசியை வரவழைக்கறீங்க.

    வித வித பாயச செய்முறைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் சொன்னால்/பாராயணத்துக்குப் பாயசம் நிவேதனம் செய்வாங்களே! அப்படிப் பண்ணிக்கலாம்! :)

      Delete
  6. காரட் பாயசம், அரிசி தேங்காய்ப் பாயசம் இரண்டுமே வெகு சுவையாகச் செய்திருக்கிறீர்கள் கீதாமா.
    செய்முறையுஇல் அளவுகள் திட்டமாகக் கொடுத்திருக்கிறீர்கள்.
    இதோ ஆடி வந்து பண்டிகைகளும் வந்துவிடும்
    அப்பொழுது இந்தப்
    பாயசப் பதிவுகள் மிகவும் உபயோகமாக இருக்கும்.
    நன்றி கீதா மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி, பாயசம் பிடிக்காதவங்க உண்டா? எங்க வீட்டில் அநேகமாக இந்த எல்லாப் பாயசங்களுமே செய்திருக்கேன்.பாராட்டுக்கு நன்றி.

      Delete
  7. விதம் விதமாக பாயசம். கேரட் பாயசம், பரங்கிக் காய் பாயசம் சுவைத்ததுண்டு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், பறங்கிக்காயிலும் இப்படிப் பாயசம் பண்ணலாம். அல்வாவும் பண்ணலாம். உங்களுக்குத் தெரியாமல் இருக்காது.

      Delete
  8. கேரட் கீர், பரங்கி, பூஷனி கீர்/பாயாசம் அம்மா செய்திருக்காங்க பாட்டி செய்யமாட்டாங்க அம்மாதான் கொஞ்சம் புதுசா எல்லாம் செய்வது அப்போ. கார்ட், அரிசி தேங்காய் பருப்புகள் சேர்த்து அரைச்ஹ்கு செய்யறது என் நாத்தனார்களிடம் தெரிந்து கொண்டேன். பருப்புகள் எல்லாம் புகுந்த வீட்டில்தான் அவங்கதான் நிறைய பயன்படுத்துவாங்க. அப்படித் தெரிந்து கொண்டது.

    புகுந்த வீட்டில் குங்குமப்பூவும் பயன்படுத்துவாங்க. பிறந்த வீட்டில் ஏலக்காய், முந்திரி மட்டுமே.

    நல்லாருக்கு அக்கா உங்கள் குறிப்புகளும் குறித்துக் கொண்டேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, நான் குங்குமப்பூவெல்லாம் பயன்ப்டுத்தியது இல்லை. எங்கே போவது? :))))) பாதாம், முந்திரி கூடச் சமீப காலங்களில் தான்! மற்றபடி காரட்+அரிசி+தேங்காய்+முந்திரி போட்டுப் பாயசம் உண்டு. பாதாம் எல்லாம் இப்போ ஓர் இருபது வருடங்களாய்த் தான்! :)))))

      Delete