எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, May 22, 2018

உணவே மருந்து-- அரைக்கீரை!

Image result for அரைக்கீரை

சுமார் 40, 45 வகைக்கீரைகள் இருப்பதாகத் தெரிய வருகிறது. ஆனால் எனக்குத் தெரிந்தவை அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, புளிச்சகீரை, குப்பைக்கீரை, பசலைக்கீரை, பாலக் கீரை, தண்டுக்கீரை, அகத்திக் கீரை போன்ற சில மட்டுமே. இவற்றில் முள்ளங்கிக்கீரை, புதினாக்கீரை, கொத்துமல்லிக்கீரை போன்றவற்றைச் சேர்க்கவில்லை.

அரைக்கீரை மலச்சிக்கலுக்கு மிகவும் நல்லது. குத்துச் செடியாகப் படர்ந்து இருக்கும் அரைக்கீரை இலைகளைப் பறித்தாலும் மீண்டும் வளரும் இயல்பு கொண்டது. ஆகவே அறுத்து எடுக்கும் கீரை என்பதே நாளாவட்டத்தில் அரைக்கீரை என மாறி இருக்கலாம். அதிக உயரம் வளராது. தண்டுக்கீரை இனத்தைச் சேர்ந்தாலும் இதன் தண்டைப் பெரும்பாலும் சமைப்பதில்லை. ஒரு முறை வந்துவிட்டால் தொடர்ந்து ஒரு வருடம் வரை பலன் கொடுக்கும். இலை பச்சையாக இருந்தாலும் கீழ்ப்பாகத்தில் லேசாகச் செவ்வரி ஓடி இருக்கும். இதன் விதைகள் கூடச் சாப்பிடலாம் என்கின்றனர்.
அந்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும்,

கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்.”

எனத் திருமந்திரத்தில் சொல்லி இருப்பதாக இயற்கை வேளாண்மையில் பிரபலமான திரு நம்மாழ்வார் கூறுகிறார். இது பத்திய உணவுகளுக்குச் சிறந்தது. இதில் தங்கச் சத்தும், இரும்புச் சத்தும் நிறைந்திருப்பதாகச் சொல்வார்கள். சிறந்த சத்துணவான இதை எல்லோரும் தாராளமாகச் சாப்பிடலாம். எவ்விதக் கெடுதலையும் உண்டு பண்ணாது. '
இதில் நீர்ச்சத்து 87 சதவீதமும் புரதம் 2.8 சதவீதமும் கொழுப்புச் சத்து 0.4 சதவீதமாகவும், 2.4 தாது உப்புக்களும், மாவுச் சத்து 7.4 சதவீதமும் உள்ளன. இதை உண்டால் 44 கலோரிகளே பெறுவோம். தினமும் உண்ணத் தக்கக் கீரை வகையில் இது மிக முக்கியமானது.

மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். பித்தத்தைத் தணிக்கும். நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும். தோல் வியாதியைத் தடுக்கும். ஆரம்ப மனோ வியாதிக்குச் சிறந்த மருந்து. தலை முடி வளரும் தன்மை உடையது. புளியுடன் சேர்த்துச் சமைக்கையில் ருசி அதிகம் இருக்கும்.

9 comments:

 1. என்னடா இது.. ஹெர்பல் கேர் அல்லது சித்த மருத்துவத் தளத்துக்கு வந்துவிட்டோமோன்னு நினைத்தேன்.

  நிறைய விவரங்களோடு எழுதியிருக்கீங்க. எனக்குப் பிடித்த கீரை. அந்தக் காலத்துல 5 பைசா 10 பைசாவுக்கு முறத்துல வாங்கிவருவேன்.

  என்ன என்ன செய்முறைகள் எழுதறீங்கன்னு பார்க்கறேன். ஒருவேளை மத்த கீரைகளுக்குச் சொன்னதையே இதை வைத்தும் பண்ணலாமோ?

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :) நெ.த. எல்லாக் கீரைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித் தானே பண்ணியாகணும்! அதான் செய்முறை எதுவும்போடப் போறதில்லைனு முன்னாடியே சொல்லி இருக்கேனே! ரிவிஷன் ஒழுங்காக் கொடுங்க! :))))

   Delete
 2. அவ்வப்போது இது சமைப்பதுண்டு. இப்பல்லாம் கீரை சமைப்பதே அபூர்வமாகிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், இங்கே தினம் வாங்கச் சொன்னால் கூட ரங்க்ஸ்வாங்கிடுவார். செலவழிக்கிறது தான் கஷ்டம். பத்து ரூபாய்க்கு கீரைக்கட்டு வாங்கினால் இரண்டு நாள் வைச்சுக்கறாப்போல் இருக்கு! :) மார்க்கெட் போனால் பிரிச்சு ஐந்து ரூபாய்க்குக் கொடுப்பாங்க. இங்கே கடைகளில் எல்லாம் அப்படிக் கொடுக்கிறதில்லை!

   Delete
  2. கீசா மேடம்... திருவரங்கத்தில் காய்கறிகள் கொள்ளை மலிவு. இப்போ சென்னைல பழமுதிர்ச்சோலைல புதிய காய்கறி பழங்கள் பார்க்க (விலை கொஞ்சம் ஜாஸ்தி) மகிழ்ச்சியா இருக்கு

   Delete
  3. சென்னையில் எல்லா ஊர்களில் இருந்தும் காய்கள் வரும். ஆகவே இன்னும் விலை குறைவாத் தான் இருக்கணும். புறநகர்களில் ஓரளவு குறைவா இருக்கலாம்.

   Delete
  4. நம்ம ரங்க்ஸ் கறிகாய் வாங்கப் போனாலே எனக்கு திக், திக், திக் தான்!

   Delete
  5. அவர் மட்டுமல்ல. நானும்தான் (அங்க இருந்தபோது). நல்ல காய்கறிகள் அளவில்லாமல் வாங்கிடுவேன், வீணாகவும் செய்யும். இங்கு மறுநாள் காய், முந்தின நாள்தான் வாங்குவது, ஃப்ரிட்ஜில் வைப்பதில்லை என்று செய்ய ஆரம்பித்திருக்கிறேன். இரண்டு நாள் முன்பு அம்மாவைப் பார்த்துவிட்டு வரும்போது தாம்பரம் மார்கெட்டில் 3 நாளைக்குத் தேவையானதை வாங்கிட்டேன். ஆண்களுக்கு பச்சைக் காய்கறிகள் அதிகமாகப் பிடிக்குமோ?

   Delete
  6. ஹெஹெஹெ இருக்கும். ஆனால் அடிக்கடி மார்க்கெட் போக வேண்டாம்னு செய்யறாப்போல் எனக்குத் தெரியும். :)))))

   Delete