புதினாவும் கீரை வகைகளில் ஒன்றே. ஏற்கெனவே பாலக் கீரை செய்முறைகள் பார்த்தோம். மற்றக் கீரைகளிலும் கிட்டத்தட்ட அப்படியே செய்ய வேண்டும் என்பதால் அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை போன்றவை பற்றி எழுதவில்லை. எனினும் அவற்றின் சிறப்பை மட்டும் தனியாகக் குறிப்பிட நினைக்கிறேன். அது பின்னால் வரும். இப்போப் புதினாவைப் பார்ப்போம். புதினாவுக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. அதன் மணத்துக்காகவே அதைச் சாப்பிடுபவர் உண்டு எனில் அதற்காகவே புதினாவை ஒதுக்குபவர்களும் அதிகம். புதினா நான் சின்ன வயசில் இருந்தே சாப்பிட்டு வந்திருக்கேன். ஆனால் புக்ககத்தில் முதலில் எல்லாம் புதினா என்றாலே தெரியாது. பின்னர் சென்னை வந்தவுடனே அறிந்து கொண்டாலும் அவர்களிடையேபெருமளவு வரவேற்பு கிடையாது. ஆனாலும் இதில் உள்ள மருத்துவ குணங்களுக்காக நான் நிறையவே வாங்குவேன்.
இதில் வைடமின் பி சத்தும் இரும்புச் சத்தும் இருக்கிறது. காய்ச்சல், காமாலை, வயிற்றுச் செரிமானப் பிரச்னைகள், கீல் வாதம், தலைவலி போன்றவற்றை குணமாக்கும் புதினாக்கீரை! பற்களில் ஈறுகள் சம்பந்தமான பிரச்னைகளைப் புதினாவில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் குணப்படுத்தும். புதினாவையே ஆய்ந்து கழுவிச் சுத்தம் செய்து காய வைத்துப் பொடியாக்கி ஈறுகளில் படும்படியாகத் தினம் தேய்த்து வந்தால் ஈறுகளினால் ஏற்படும் பிரச்னைகள் குறையும் வயிற்றில் அஜீரணம் ஏற்பட்டால் புதினா இலைகளோடு தனியா விதைகள், சோம்பு, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டி எலுமிச்சைச் சாறும் சேர்த்துக் கொண்டு கருப்பட்டி, அல்லது வெல்லம் போட்டுக் குடித்தால் வயிற்றுத் தொந்திரவுகள் தீரும்.
புதினா செடி வகையாக இருந்தாலும் நாம் சந்தையில் வாங்கும் புதினாவின் ஒரு தண்டை ஓர் தொட்டியில் நட்டுத் தினம் முறையாகப் பராமரித்து வந்தால் புதினாச் செடிகள் புதியதாக வர ஆரம்பிக்கும். தேவைப்படும்போது இலைகளை மட்டும் பறித்துக் கொள்ளலாம். அறுபது சென்டிமீட்டர் வரை வளரும் புதினாச் செடிகளின் இலைகள் ஐந்து சென்டிமீட்டர் வரை இருக்கும். இலைகளின் ஓரங்கள் பற்கள் இருப்பதைப் போல் இருக்கும். காம்புகள் மிகச் சிறியவை! சிவப்பு நிறமான இதன் பூக்களும் சிறியவை! புதினா முழுக்க முழுக்க மருத்துவப் பயன் கொண்டது. இதிலிருந்து பெப்பெர் மின்ட் எனும் ஒரு வகை மிட்டாய் தயாரிக்கின்றனர்.
மருந்து மாதிரி, மருந்து மாதிரின்னு சொல்லியே புதினா மேல ஒரு பெரிய விருப்பம் இல்லாம செஞ்சுட்டாங்க!
ReplyDelete:)))
பலருக்கும் பிடிக்காது. எங்க வீட்டிலேயும் அப்பாவுக்குத் தெரியாமல் தான் செய்து சாப்பிடுவோம். அதைத் தெரியாமல் ஒளித்து வைப்பது ஒரு த்ரில். மாட்டிக் கொண்டால் வேறு வகை த்ரில்! :)))))
Deleteஎனக்கு என்னவோ இந்த புதினாவைப் பிடிக்காது. என் வீட்டில், எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் புதினா போட்டு குனுக்கு பண்ணுவார்கள். எனக்கு மட்டும் புதினா கூடாது.
ReplyDeleteஆனால், புதினா உடம்புக்குக் குளிர்ச்சி.
புதினா மட்டுமில்லை, வெந்தயக்கீரை, கடுகுக்கீரை, பாலக், வடக்கே கிடைக்கும் ஒருவித சிவப்புக்கீரை எல்லாத்திலேயும் கடலைமாவு, உப்பு, காரம் சேர்த்துக் கொண்டு கறுப்பு உப்பும் சேர்த்துக் கொத்துமல்லி போட்டுப் பமிளகாயும் நறுக்கிச் சேர்த்துப் போடுவதன் பெயர் பஜியா! அல்லது பகோடா! வட இந்தியாவில் இதைத் தான் பகோடா என்பார்கள்.
Deleteபல வருடங்களுக்கு ஒரு முறை இடுகை போட்டால், பின்னூட்டம் எழுதுனவங்களுக்கு மறுமொழி கொடுக்க மறந்துடும். (அல்லது இது வயசானதாலா? ஹா ஹா ஹா)
ReplyDeletegrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
Delete