எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, August 29, 2013

பாதாம், முந்திரிப் பாயசம்

ஹிஹிஹி, பாதாம்பருப்பு என்றாலே ஶ்ரீராம் நினைவில் வரார். :)) முன்னொரு தரம் பாதாம் அல்வா பண்ணினதை எழுதி இருந்தப்போ அவர் டிஃபனுக்கு பாதாம் அல்வா கேட்டது குறித்துச் சொல்லி இருந்தார்.  முந்தாநாள் கிருஷ்ணனுக்கும் பாதாம், முந்திரி போட்டுப் பாயசம் பண்ணினேன்.  மத்தவங்க எப்படிப் பண்ணுவாங்களோ தெரியலை.  நாம தான் எல்லாத்திலேயும் தனி ஆச்சே! இங்கே நம் செய்முறை கொடுக்கிறேன். ரொம்பவே சுலபம் தான்.

நான்கு பேருக்குப் பாயசம் செய்ய:

பால் 250 கிராம்

பச்சரிசி  ஒரு சின்னக் கிண்ணம் அல்லது ஐம்பது கிராம்

தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்

ஒரு நடுத்தர அளவு  காரட் ஒன்று

பாதாம் ஐம்பது கிராம்

முந்திரி பத்து

ஏலக்காய்,

குங்குமப் பூ(தேவையானால்) ஒரு டீஸ்பூன் பாலில் ஊற வைக்கவும்.

நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்

கிஸ்மிஸ் பழம்  ஒரு டேபிள் ஸ்பூன்

சர்க்கரை  150 கிராம் அல்லது இரண்டு கிண்ணம்


பாதாம், முந்திரியைக் கழுவி  ஏலக்காய், அரிசி சேர்த்து ஊற வைக்கவும்.  குறைந்தது 2 அல்லது மூன்று மணி நேரம் ஊற வேண்டும்.  ஏலக்காயை அதில் போடவில்லை எனில் தனியாகப் பொடி செய்து ஓரமாக வைக்கவும்.   காரட்டைப் பொடியாகத் துருவவும், அல்லது நறுக்கவும்.  ஊறிய அரிசி, பாதாம், முந்திரி, தேங்காய்த் துருவல், காரட் துருவல் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். ரவை மாதிரி இருத்தல் வேண்டும்.  நன்கு ஜலம் விட்டுக் கரைத்து வைக்கவும்.

அடுப்பில் அடி கனமான பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றிக் கரைத்து வைத்த மாவுக்கரைசலை ஊற்றிக் கொண்டே இன்னொரு கையால் கரண்டியால் கிளறவும்.  சிறிது நேரம் கைவிடாமல் கிளற வேண்டும்.  அடிப்பிடித்துவிட்டால் ருசியே போயிடும்.  நீர் தேவை எனில் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம்.  பாயசம் கெட்டியாக வேண்டுமா, நீர்க்க இருக்க வேண்டுமா என்பது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. நான் தோசை மாவு பதத்துக்குக் கரைத்து வேக விட்டேன்.  கரைசலில் அரிசி, பருப்பு தெரியக் கூடாது.  அவை நன்கு கரைந்ததும், சர்க்கரை சேர்க்கவும்.  பக்கத்தில் பாலைக் காய்ச்சிக் குறுக்கி வைக்கவும்.  சர்க்கரை கரந்து பாயசம் சேர்ந்து வரும்போது குறுக்கிய பாலைச் சேர்க்கவும்.  பாலைச் சேர்த்ததும் பாயசம் நீராக வரக்கூடாது.  சிறிது நேரம் கொதிக்க விடவும். பின்னர் கீழே இறக்கி ஏலப்பொடி, குங்குமப் பூவைப் பாலில் நனைத்துக் கரைத்து விடவும்.  மிச்சம் உள்ள நெய்யைச் சூடாக்கித் திராக்ஷைப் பழங்களைப் போட்டு மிதக்க விட்டுப் பரிமாறவும்.  இதைச் சூடாகவும் சாப்பிடலாம்.  ஆற வைத்தும் சாப்பிடலாம்.  பாதாம் கீர், பாதாம் அல்வா போன்றவை பின்னர்.

14 comments:

  1. சுவையான ரெசிப்பி.. ஒரு கப் அனுப்பினால் சூப்பர்..ன்னு சொல்வேன். ஆமாம். எனக்கு யாராவது இந்த மாதிரி வித விதமா செய்து கொடுத்தால் சூப்பரா சாப்பிடத்தான் தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முதல் வரவுக்குப் பாயசம் கொடுத்தாச்சு. :))) நல்வரவு. நிஜம்மாவே இந்தப் பாயசம் சூப்பரா இருக்கும். :)

      Delete

  2. பாதாம் அல்வா குறித்து நான் என்ன சொன்னேன் என்று நினைவில் இல்லை! :))

    கேரட்டா.... நான் ச்சே, நாங்கள் இதுவரை பாயசத்தில் காய் எதுவும் சேர்த்ததில்லை!

    //சிறிது நேரம் கைவிடாமல் கிளற வேண்டாம்.//

    வேண்டாம்?

    பாலுக்கு பதில் மில்க் மெயிட் போடலாமா?

    ReplyDelete
    Replies
    1. திருத்திட்டேன் ஶ்ரீராம். :))) பாதாம் அல்வா பத்தி முன்னொரு முறை பின்னூட்டம் போட்டிருந்தீங்க. தேடறேன்.:))) மில்க் மெயிட் போடலாம். கொஞ்சமாப் போட்டால் போதும்.:)

      Delete
  3. உஷா அன்பரசு said..

    //எனக்கு யாராவது இந்த மாதிரி வித விதமா செய்து கொடுத்தால் சூப்பரா சாப்பிடத்தான் தெரியும்.//

    ஹிஹிஹி... எனக்கும்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் தான். ஆனால் செய்து தரவங்க யாரும் இல்லை! :( எங்கே போனாலும் நானே தான் சமைச்சுக்கணும். காலைக் காஃபி கூட நானே தான் போட்டுக்கணும். இல்லைனா நாலரை மணிக்கு எழுந்து ஏழு மணிவரை ஒரு வாய்க் காஃபிக்கு தேவுடு காக்கணும். :)

      Delete
    2. யாராவது செஞ்சு கொடுத்தாலும் உங்களுக்கு பிடிக்காமல் போகும்னு தோணுது.
      நல்லா சமைக்கத் தெரிஞ்சவங்களுக்கு அடுத்தவங்க சமையல் அவ்வளவாப் பிடிக்காதுனு சொல்வாங்க.

      Delete
    3. grrrrrrrrrrrrrrrrrrrrrrrr, நல்ல சமையல்னா பிடிக்காமல் என்ன? :))) நல்லாச் சொன்னீங்களே! அநியாயமா இல்லையோ! ஹூஸ்டனில் மத்தியானம் நான் சமைச்சால் ராத்திரி மாட்டுப் பொண்ணு தான் செய்வா. அவளோட பாலக் கீரைக்கூட்டும், ராஜ்மா ரொட்டியும் ரொம்பப் பிடிக்கும். நிஜம்மாவே உட்கார்ந்து சாப்பிட்டது அங்கே தான்! :))))

      Delete
  4. மிக வித்தியாசமான பாயச செய்முறை!!. கட்டாயம் பண்றேன்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம்??? இது எங்க வீட்டிலே கிட்டத்தட்ட இருபது வருடமாகப் பண்ணறேன். :))) ஒருவேளை என்னோட கண்டுபிடிப்போ? :))))))

      Delete
  5. பாயச வாசனை இங்கே வரைக்கும் வரதேன்னு பார்த்தா பாதாம் பாயசமா!!.. அப்படியே எனக்கும் ஒரு கப் அனுப்புங்க கீத்தாம்மா :-))

    ReplyDelete
    Replies
    1. வாங்க அமைதி, அதான் பாத்திரத்தோடு வைச்சிருக்கேனே! எடுத்துக்குங்க! :)

      Delete
  6. பாதாம்பருப்பு பாயசம். ஒருநாள் செய்துட வேண்டியது தான்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோவை2தில்லி, ரொம்ப லேட்! ஒரு நாள் செய்து பாருங்க. நல்லாவே இருக்கும்.

      Delete