எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, August 6, 2013

இன்னிக்கு என்ன சமையல் உங்க வீட்டிலே?

முன்னெல்லாம் இப்படிக் கேட்பாங்க.  இன்னிக்கு என்ன சமையல், என்ன சாப்பிட்டேனு! இப்போல்லாம் கேட்கிறதில்லை.  அப்படிக் கேட்டாலும் அவங்க ரொம்ப நெருங்கிய நண்பராகவோ, உறவாகவோ தான் இருக்கும்.  முன்னெல்லாம் அக்கம்பக்கம் வீட்டுக்காரங்க கூட ஒருத்தருக்கொருத்தர் கேட்டுப்பாங்க.  இப்போ அக்கம்பக்கம் இருக்கிறதும் தெரியலை.  காப்பிப் பொடி கொடுங்க, சர்க்கரை கொடுங்க, பால் இருக்கா, திடீர் விருந்தாளி வந்துட்டாங்கனு கேட்டுட்டு வருவாங்க.  இப்போல்லாம் கடைகள் அருகிலேயே இருப்பதால் யாரும், யாரையும் கேட்டுக்கிறதில்லை. ஒரு சிலர் பால், மோர் போன்றவை எல்லாம் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் கொடுக்க மாட்டாங்க.  கண்டிஷனா எங்க வீட்டிலே இல்லைனு அடிச்சுச் சொல்லிடுவாங்க.  என்னைக் கேட்டால் அது தப்புனு சொல்வேன்.  யாரும் வேணும்னு வந்து கேட்கப் போறதில்லை.  தேவைக்குத் தானே வராங்க.  ஆகையால் கொடுக்கலாம்; குறையாது.  நானெல்லாம் கொடுத்துடுவேன்.  எண்ணெய் கேட்டால் மட்டுமே கூட மஞ்சள் கொடுத்துடுவேன்.  எண்ணெய் கடன் ஆகாது என்பார்கள்.  ஆகவே மஞ்சளோடு கொடுத்தால் சுமங்கலிக்குக் கொடுத்தாப்போல் ஆகும் என்பார்கள்.  ஹிஹி, இதெல்லாம் எதுக்குனு கேட்கிறீங்களா? சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!  ரொம்ப நாளா நினைச்சது.  இன்னிக்கு எழுதினேன். இன்னிக்கு ஆடி அமாவாசை.  இங்கே அம்மா மண்டபத்தை மூடிட்டாங்க.

காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கு அம்மாமண்டபமும் அதை ஒட்டிய காவிரிக்கரைகளும்.  ஆகவே இன்னிக்குப் போக நினைச்சது போக முடியலை. எண்ணங்கள் பதிவிலே மாடியிலே இருந்து எடுத்த படங்களைப் பகிர்ந்துக்கறேன். இன்னிக்கு வாழைப்பூப் பருப்பு உசிலி செய்தேன்.  அதன் செய்முறை அடுத்து வரும். :)))))

8 comments:

  1. இன்னிக்கு ஆடி அமாவாசை. இங்கே அம்மா மண்டபத்தை மூடிட்டாங்க.

    முக்கியமான நாளாயிற்றே..!

    ReplyDelete
    Replies
    1. அதை விட உயிர் முக்கியம் இல்லையா, அதான் மூடிட்டாங்க ராஜராஜேஸ்வரி! :))) மூன்றடுக்குப் பாதுகாப்பு. யாரும் போக முடியலை. நேத்திக்குச் சாயந்திரம் கூட முயன்றோம். :)

      Delete
  2. கூட்டம் அதிகம் என மூடிவிட்டார்களோ.....

    காவிரியில் குளிக்க ஆசைப்பட்ட அக்கா மகனிடம் காவிரி கேட் போட்டு மூடி இருக்கு எனச் சொன்னது நினைவில்.....

    ReplyDelete
    Replies
    1. தண்ணீர் அம்மாமண்டபம் காவிரி அம்மன் கோயில் வரை வந்திருக்கு வெங்கட், தண்ணீரும் ஜாஸ்தி, வேகமும் ஜாஸ்தி! கரன்ட் இழுக்குதாம்! :))) அதான் மூடிட்டாங்க.

      Delete
  3. நாங்களும் மனிதர்கள்தான் முக்கியம் என்று கொடுத்து விடுவதுதான். அவசரத்துக்குக் கேட்கிறார்கள்... உதவுவதுதான் சரி என்ற கொள்கை எங்கள் இருவருக்குமே!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அதுவும் இந்த விஷயத்தில் நிறைய அவமானம், ஏமாற்றம் அடைந்திருப்பதால் என்னைப்பொறுத்தவரை யார் வந்து கேட்டாலும் உடனே இருந்தால் கொடுத்துடுவேன். :)))))

      Delete
  4. நேற்று வானொலியில் கேட்டேன்...காவிரியில் வெள்ளப்பெருக்கால் படித்துறைகளில் தர்ப்பணம் செய்ய தடை விதித்துள்ளதாக...

    நானும் கேட்டால் கொடுத்து விடுவது தான்...நாள் கிழமையெல்லாம் பார்ப்பதில்லை...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோவை2தில்லி, வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.:)))

      Delete