எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, August 6, 2013

எங்க வீட்டிலே வாழைப்பூப்பருப்பு உசிலி! :))
வாழைப் பூப் பருப்பு உசிலி:

நான்கு நபர்களுக்கு:

தேவையான பொருட்கள்: சின்ன வாழைப்பூ ஒன்று. ஆய்ந்து கள்ளன் எனப்படும் நடு நரம்பை எடுத்துவிட்டு நறுக்கி மோரில் போடவும்.

மஞ்சள் பொடி, உப்புச் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.

பருப்பு உசிலிக்கு:

து.பருப்பு ஒரு கிண்ணம்

க.பருப்பு கால் கிண்ணம்

மி.வத்தல் பத்து

உப்பு, பெருங்காயம்.

சமையல் எண்ணெய் உசிலியை உசிலிக்க: ஒரு சின்னக் கிண்ணம் அல்லது நூறு கிராம்.

கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை. (தாளிக்க)

பருப்புக்களைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்.  நன்கு நைசாக அரைக்கவும். அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து அல்லது நான் ஸ்டிக் கடாயை வைத்து சமையல் எண்ணெயை ஊற்றவும்.  எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை தாளிக்கவும்.  அரைக்கையில் பெருங்காயம் சேர்க்கவில்லை எனில் இப்போது எண்ணெயில் பெருங்காயப் பவுடராகச் சேர்க்கவும்.  அரைத்த பருப்பு விழுதைப் போடவும். நன்கு கிளறவும்.  பருப்பு விழுது நிறம் மாறி மொறு மொறுவென வரும் வரை வதக்கவும். இப்போது வேக வைத்த வாழைப்பூக் கலவையை இதில் சேர்த்துச் சிறிது நேரம் நன்கு கிளறவும். பின்னர் சூடாகப் பரிமாறவும்.இதே போல் உசிலி செய்து கொண்டு, கொத்தவரைக்காய், பீன்ஸ், முட்டைக்கோஸ், புடலை போன்றவற்றிலும் பருப்பு உசிலி செய்யலாம். வெந்தயக் கீரை, முருங்கைக்கீரை போன்றவற்றிலும் செய்யலாம்.

வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை போன்றவற்றைக் கழுவி நன்கு பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு அரைத்த பருப்பு விழுதில் சேர்த்து இட்லித் தட்டில் ஆவியில் வேக வைக்கவும்.  பின்னர் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை தாளித்துக் கொண்டு உதிர்க்கவும்.


வாழைப்பூப் படம் மட்டும் நன்றி கோவை2தில்லி. :)))

மற்றப்படங்கள் இன்னிக்குச் செய்யும்போது எடுத்தவை. :))))

10 comments:

 1. அழகான படங்கள். தெளிவான விளக்கங்கள். படிக்கும் போதே செய்து பார்க்க வேண்டுமென்ற தூண்டுதல் ஏற்படுகிறது. பகிர்விற்கு மிக்க நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க பார்வதி ராமச்சந்திரன். மிக்க நன்றி. அப்படி ஒண்ணும் கஷ்டம் இல்லை. :))))

   Delete
 2. உடல் நல்த்திற்கு உகந்த
  வாழைப் பூப் பருப்பு உசிலி:பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ராஜராஜேஸ்வரி, பெண்களுக்கான கருப்பைக் கோளாறுகளுக்கு மிகச் சிறந்தது. நாங்க வாரம் ஒரு முறை வாங்கிடுவோம். ஒரு பூ இரண்டு நாட்களுக்கு வந்துடும். :)))

   Delete
 3. ஆதியும் எழுதியிருக்கான்னு சொல்லணும்னு நினைச்சுக்கிட்டே படிச்சேன்.... :))))

  நல்லா இருக்கும்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், வாழைப்பூப்படம் எடுக்க மறந்துட்டேன். கூகிளிட்டுப் பார்த்தால் ஆதியோடது வந்தது. நல்லதாப் போச்சுனு சுட்டுட்டேன். :)))

   Delete
 4. எனக்கு உசிலி வகைகளில் வாழைப்பூ மட்டுமே பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், என்னைப் பொறுத்தவரைக்கும் பீன்ஸ் தான் பருப்பு உசிலிக்கு ஏற்றதுனு சொல்வேன். :))) ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டேஸ்ட். இல்லையா! :)))

   Delete
 5. வாழைப்பூ பருப்புசிலி எங்கள் வீட்டில் எல்லோருக்குமே பிடிக்கும்... நல்லதோர் பகிர்வு மாமி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோவை2தில்லி.

   Delete