எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, July 27, 2013

வெள்ளையப்பம்னா தெரியுமா?

வெள்ளையப்பம்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? செட்டிநாட்டுப் பக்கம் செய்யறது பத்தித் தெரிஞ்சிருக்கும்.  இதுவும் கிட்டத்தட்ட அப்படித் தான்.  மிகவும் எளிதான ஒன்று.  ஆனால் சாப்பிடச் சுவையானது.  இப்போ இன்னிக்குச் சாயந்திரம் அதான் பண்ணப் போறேன்.  அதுக்கு முன்னாடி இங்கே செய்முறையை எழுதிடறேன்.  எண்ணெயில் பொரித்தது பண்ணறதே குறைஞ்சு போச்சு.  என்றாலும் அவ்வப்போது என்னிக்கோ ஒரு நாள் பண்ண வேண்டி இருக்கு. :)))))

தேவையான பொருட்கள்:  அரிசி மாவு கால் கிலோ.  அரிசியை 2 மணி நேரத்துக்குக் குறையாமல் ஊற வைச்சு வடிகட்டி மிக்சியிலோ அல்லது நிழலில் உலர்த்தி மாவு மெஷினில் கொடுத்து அரைத்ததோ எதுவானாலும் சரி.

உளுந்து ஒரு ஆழாக்கு(200 கிராம்) கழுவிக் களைந்து ஊறவைக்கவும்.  பின்னர் கொடகொடவென அரைத்துக் கொள்ளவும்.

உப்பு தேவையான அளவு. 5 பச்சை மிளகாய், ஒரு அரை அங்குலத் துண்டு இஞ்சி, கருகப்பிலை, பெருங்காயத் தூள் கால் டீஸ்பூன்.

பொரிக்க எண்ணெய்; தேவையான அளவு.

கொடகொடவென அரைத்த உளுத்தம் மாவில் அரிசிமாவு, உப்புச் சேர்த்து நன்கு கலக்கவும்.  மாவு போண்டா போல் உருட்டிப் போடும் பதத்துக்கு வந்திருக்கும்.  பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொண்டு, எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு ஒரு சின்னக் கரண்டியால் எடுத்துப் போடவும்.  எண்ணெயில் போடும்போதே நன்கு உப்பிக் கொண்டு வரும்.  மறுபக்கமும் திருப்பிப் போடவும்.  இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் வெளியே எடுக்கவும்.  மேலே முறுமுறுவென்றும் உள்ளே லேயர் லேயராக மிருதுவாகவும் இருக்கும்  இது.
இதை அப்படியே சாப்பிடலாம்.  தொட்டுக்க எதுவும் வேணும்னு எல்லாம் இல்லை. :))))

நேத்திக்கு அரிசி உப்புமா போட்டதுக்கு போணியே ஆகலை.  இன்னிக்கும் அதையே தான் வைச்சுக்கணும்னு நினைச்சேன்.  ஆனால் நேத்திக்குச் சாயந்திரம் திடீர்னு இது பண்ணினதாலே படம் எடுத்துப் போட வேண்டியதாப் போச்சு.

16 comments:

 1. வீட்டில் அடிக்கடி செய்வதில்லை... செய்தவுடன் தீர்ந்து விடுவதால்...! ஹிஹி...

  நன்றி...

  ReplyDelete
 2. வாங்க டிடி, இது பிடிக்காதவங்க இல்லை. :)))))

  ReplyDelete
 3. வெள்ளையப்பம்..... பார்க்கவே மொறு மொறுன்னு நல்லா இருக்கு கீதாம்மா....

  ReplyDelete
  Replies
  1. மேலே மொறு மொறு, உள்ளே மெது மெது, அதான் வெள்ளையப்பத்தின் ரகசியம். :))))

   Delete
 4. ம்ம்ம்ம்ம். இதுக்காகவே உங்க வீட்டுக்கு வரப் போகிறேன்.:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க வல்லி, கட்டாயமாப் பண்ணித் தரேன்.

   Delete
 5. ஹை!!. கொஞ்சம் சாப்பிட்டாலே வெயிட் போட்டுடும் எனக்கு. ஆனாலும் எனக்கு இதுவும் ரொம்பப் பிடித்த பண்டம். தீபாவளியின் போது மதுரைப் பக்கம் கட்டாயம் செய்வோம். இப்ப தீபாவளிக்கு வழக்கமில்லைன்னாலும் அடுத்த நாளாவது செய்வேன். உள்ளே லேயராக சரியாக வருவதில்லையேன்னு இருந்த வருத்தம் இன்று தீர்ந்தது. சரியான அளவு போட்டு செய்து பார்க்கிறேன். ரொம்ப நன்றி அம்மா!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க பார்வதிம்மா, நீங்களும் மதுரையா? ஆமாம், தீபாவளிக்கு மதுரையிலே வெள்ளையப்பம் இல்லாத வீடே இருக்காது. அன்னிக்குக் காலம்பரக் குளிச்சுட்டு இந்த வெள்ளையப்பத்தைச் சுடச் சுடத் தின்பதிலே என்ன சந்தோஷமா இருக்கும்! :)))))))மாவைத் தொடர்ந்து பத்து நிமிஷமாவது கரண்டியால் கிளறிக் கொடுங்கள். சப்பாத்தி மாவை எப்படிப் பத்து நிமிஷம் விடாமல் பிசைந்து கொடுக்கிறோமோ அப்படியே. உள்ளே லேயர் லேயராக வரும். :))))

   Delete
 6. எப்பவோ செய்து பார்த்திருக்கிறோம்! மதுரையில் நாராயணா ரெஸ்டாரென்ட்டிலும் கோபு ஐயங்கார்க் சாப்பிட்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நாராயணா ரெஸ்டாரன்ட்??? கேட்டதில்லை. கோபு ஐயங்கார் கடையிலும் பார்த்தது இல்லை. அநேகமாகக் கடைகளில் காரா வடை தான் பார்த்திருக்கேன். மங்களூர் போண்டோனு ஒண்ணு சென்னை ஹோட்டல்களில் தருவாங்க. அது மைதா மாவுக் கலப்பு. இது அதுவும் இல்லை. :)))))

   Delete
 7. வெள்ளையப்பம் இதுவரை செய்ததில்லை... செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. டேஸ்டி வெள்ளையப்பம் கோவை2தில்லி. :)))வயித்தையும் ஒண்ணும் பண்ணாது.

   Delete
 8. வாவ் .. சூப்பருங்கஜி! அவசியம் செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
 9. வாவ் .. சூப்பருங்கஜி.. அவசியம் செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
 10. செட்டி நாட்டுப்பக்கம் செய்வது வெள்ளையாக இருக்கும். அவர்கள் வெள்ளை பணியாரம் என்பார்கள்.
  அப்போது அரைத்து அப்போதே செய்வார்கள் புளிக்க விடக்கூடாது. தோசை மாவு பதத்தில் அரைத்து கொள்வார்கள். உடனே செய்தால் எண்ணெய் குடிக்காது. அவர்கள் அதற்கு காரச்சட்னி அல்லது தக்காளிசட்னி அரைத்து சாப்பிடுவார்கள். செட்டி நாட்டு அம்மா வீட்டில் மாடியில் 7 வருடம் இருந்தேன் அப்போது கற்றுக் கொண்டது.


  காராவடை செய்வது போல் செய்து இருக்கிறீர்கள். நீங்கள் செய்து இருக்கும் முறைக்கு தேங்காய் சட்னி மிகவும் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 11. என்னது இது? வெள்ளையப்பம்னா நான் வட்டமா, தட்டையா அதிரசம் மாதிரி இருக்கும்னு நினைத்தேன் (வெல்லம் இல்லை). ஆனால் நீங்க போண்டாவைக் காண்பித்து வெள்ளையப்பம் என்று சொல்றீங்களே.

  இங்க குளிர், அப்போ அப்போ மழை... உங்க படம், ருசியைத் தூண்டுகிறது.

  ReplyDelete