எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, May 18, 2019

பாரம்பரியச் சமையல்கள்- பிட்லை வகைகள்!

பிட்லை என்றால் எங்க வீட்டில் எல்லாம் தனிப் பக்குவம். ஆனால் மாமியார் வீட்டிலே நாத்தனார் வீட்டிலே எல்லாம் எந்தக் காயிலும் பிட்லை பண்ணுவாங்க. எப்படின்னா பொடி போட்ட சாம்பாரில் போடும் பொடியின் அளவைக் குறைத்துப் போட்டுவிட்டுக் கடைசியில் மி.வத்தல், தனியா, கடலைப்பருப்பு, தேங்காய் அரைத்து விடுவார்கள். வெந்தயம் வறுத்து அரைக்கையிலோ அல்லது சாம்பாருக்குத் தாளிப்பிலோ சேர்ப்பதில்லை. இதைத் தான் அங்கே பிட்லை எனச் சொல்வார்கள்.  சாம்பார் தான். ஆனால் அரைத்து விடுவதால் பிட்லை என்கின்றனர். அதோடு தானும் எது வேண்டுமானாலும் போடுவார்கள். வெண்டைக்காய் போட்டுப் பிட்லை என்பார்கள். பறங்கிக்காய்ப் பிட்லை, பூஷணிக்காய்ப் பிட்லை என்றெல்லாம் சொல்வார்கள். நாங்க அதை எல்லாம் சாம்பார் என்றே சொல்லுவோம். பின்னே பிட்லைனா என்ன, எப்படிப் பண்ணுவது என்பவர்களுக்கு.

பிட்லை என்றால் எங்க வீடுகளில் பாகற்காய், கத்திரிக்காய், சேனைக்கிழங்கு, காராமணி போன்றவற்றில் மட்டும் பண்ணுவது! அதிலும் பாகற்காய்ப் பிட்லை என்றால் அன்னிக்கு வீட்டில் ஏதோ கல்யாண சமையல் செய்தாப்போல் தான். பிட்லை பண்ணினால் கட்டாயமாய் மோர்க்குழம்பு இருக்கும்.  மோர்க்குழம்பு பண்ணாமல் பிட்லை பண்ண மாட்டாங்க. பிட்லை என்பது எங்க வீடுகளில் எல்லாம் தொட்டுக்கொள்ளும் ஓர் உணவு வகை! சாம்பார் போல் நீர்க்கப் பண்ணிப் பிசைந்து சாப்பிடுவது அல்ல. ஆகவே இங்கே நான்சொல்லப் போவது தென்மாவட்டங்களில் பண்ணும் பிட்லையே. மற்றதுக்குப் பின்னர் வரேன். இப்போ முதலில் பாகற்காய்ப் பிட்லை.

நான்கு பேர் கொண்ட குடும்பம்னா அரைக்கிலோ தேவை. அதிகமாய்த் தோன்றினால் குறைந்த பட்சமாக 350 கிராமாவது தேவை. சின்னப் பாகற்காய் என்றால் உசிதம்.  மிதி பாகல் என்பார்கள். அது தான் பிட்லைக்கு உகந்தது. நீளப்பாகல் காயெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.
Image result for மிதி பாகல்

படத்துக்கு நன்றி! சொல்லுகிறேன் வலைப்பக்கம் , காமாட்சி அம்மா.

பாகல்காய் நீளம் எனில் கால் கிலோ போதும், வட்டமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிதி பாகல் எனில் கால் கிலோவுக்குக் கூட வேண்டும். இரண்டு பக்கமும் காம்பை நீக்கி விட்டு முனையில் கொஞ்சமாகக் கீறிக் கொள்ள வேண்டும். பாகல்காயை அலம்பி நறுக்கிய பின்னர் நல்லெண்ணெயில் வதக்கிக் கொண்டு கொஞ்சம் போல் ஜலம் விட்டு உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக வைக்கவும்.

துவரம்பருப்புக் குழைய வேக வைத்தது ஒன்றரைக் கிண்ணம்

வறுத்து அரைக்க
மி.வத்தல் நான்கு அல்லது ஐந்து. கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு இரண்டு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு. இதுக்குக் கொத்துமல்லி விதை சேர்க்க வேண்டாம். சேர்த்தால் அரைத்து விட்ட சாம்பாருக்கும் இதற்கும் வேறுபாடு இல்லாமல் போயிடும். இவற்றை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து அரைத்துக் கொள்ளவும். அல்லது பொடியாக வைத்துக் கொள்ளவும்.

மொச்சை அல்லது கொண்டைக்கடலை ஊற வைத்துச் சேர்க்கலாம். அல்லது பிட்லை கொதிக்கையில் வறுத்துச் சேர்க்கலாம். இது அவரவர் ருசிக்கு ஏற்ப. ஒரு டேபிள் ஸ்பூன் மொச்சையை வறுத்துத் தண்ணீரில் போட்டு விட்டுப் பிட்லை கொதிக்கையில் சேர்க்கலாம். அல்லது கொண்டைக்கடலையை வறுத்துச் சேர்க்கலாம். சிலர் முதல் நாளே ஊற வைப்பார்கள். அப்படியும் செய்யலாம். நம்ம வீட்டில் வறுத்து அப்போதே சேர்த்தால் தான் பிடிக்கும்.

புளி ஓர் சின்ன எலுமிச்சை அளவுக்கு ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும். ஒன்றரைக் கிண்ணம் புளி ஜலம். நீர்க்க இருக்கலாம்.

மஞ்சள் பொடி! பருப்பிலேயே போடுவதானால் போடலாம். அல்லது வறுத்து அரைப்பதில் சேர்க்கலாம்.

உப்பு தேவைக்கு. பாகல்காய்க்குச் சிலர் வெல்லம் சேர்ப்பார்கள். அப்படிச் சேர்த்தால் பிடிக்கும் எனில் ஒரு சின்னத் துண்டு வெல்லம்.

தாளிக்க: தேங்காய் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, சின்னதாய் ஓர் வற்றல் மிளகாய், கருகப்பிலை. கொத்துமல்லி வேண்டாம். பிடித்தால் போடவும்.

புளி ஜலத்தைக் கடாய் அல்லது உருளி அல்லது கல்சட்டியில் விட்டுப் புளி வாசனை போகக் கொதித்த பின்னர், வெந்த பாகற்காய்களைச் சேர்க்கவும். கூடவே வறுத்து ஊற வைத்திருக்கும் மொச்சை, கொண்டைக்கடலையைச் சேர்க்கவும். அல்லது முதல் நாள் ஊற வைத்திருந்தால் அவற்றை நன்கு கழுவிச் சேர்க்கவும். தேவையான உப்பைப் போடவும். பாகற்காய்க்கு உப்புச் சேர்த்து வேக வைத்திருப்பதால் உப்புச் சேர்க்கையில் கவனமாகச் சேர்க்கவும். துவரம்பருப்பைச் சேர்க்கவும். ஒன்றரைக் கிண்ணம் பருப்பு அதிகமாய்த் தோன்றினால் அரைக்கிண்ணத்தை நிறுத்திக் கொண்டு ஒரு கிண்ணம் சேர்க்கலாம். இவை சேர்ந்து கொதிக்கையில் அரைத்த விழுதைப் போட்டுக் கலக்கவும். அல்லது பொடியைச் சேர்த்துக் கலக்கவும். பொடியாக வைத்திருந்தால் தேவையானதைப் போட்டுக் கொள்ளலாம். மிச்சம் பொடி இருந்தால் பின்னால் வேறு ஏதுக்கானும் பயன்படுத்திக்கலாம். இவை கொதிக்கையில் ஒரு துண்டு வெல்லம் சேர்த்துவிட்டு இரும்புக் கரண்டி அல்லது இன்னொரு கடாயில் தே.எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை, சின்னதாய் ஒரு மி.வத்தல் தாளித்துக் கொஞ்சம் எண்ணெயோடு கொதிக்கும் பிட்லையில் விடவும். பின்னர் அடுப்பை அணைத்து விடவும். தேவையானால் கொத்துமல்லி போடலாம்.

பின்னர் மோர்க்குழம்பு பண்ணி அதோடு இதைத் தொட்டுக் கொண்டு சாப்பிடும்படி வைத்துக் கொள்ளலாம். அடுத்துத் தஞ்சை மாவட்டங்களில் பண்ணும் பிட்லை  பற்றிப் பார்க்கலாம்.

இதே போல் தான் கத்திரிக்காய்ப் பிட்லைக்கும். கத்திரிக்காய் சீக்கிரமாய் வெந்துவிடும் என்பதால் கத்திரிக்காயை ஓர் வாணலியில் போட்டு நன்கு வதக்கிக் கொண்டு கொதிக்கும் புளி ஜலத்தில் சேர்த்து விடலாம். உடனே வெந்து விடும். மற்றவை பாகற்காய்ப் பிட்லைக்குச் சொல்லி இருப்பது போல் தான். 

48 comments:

 1. பயணம்.... வந்துதான் படிக்கணும். பிட்லை எனக்குப் பிடித்தது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத் தமிழரே, அத்தி வரதரைப் பார்க்கக் கிளம்பினீங்களோ? நல்ல தரிசனம் கிடைக்க வாழ்த்துகள்.

   Delete
  2. அத்திவரதர் ஜூலை 7 க்கு அப்புறம்தானே?

   Delete
  3. அப்படியா? எனக்குத் தெரியாது.

   Delete
  4. காஞ்சி வைணவத் தலங்கள் சேவை ஒரு நாளில் (அன்று கருடசேவையும் கூட)

   அத்தி வரதர் ஜூலைலதான்.

   இப்போ வெயில் வாட்டி எடுக்குது

   Delete
  5. அத்திகிரி வரதராஜர் தரிசனம் எதிர்பாராத வகையில் மிக மிக அருமையாக்க் கிடைத்தது. மூலஸ்தானம் அருகில்ஐந்து நிமிடங்களுக்கு மேல் (500 பேருக்கும்அதிகமானோர் கியூவில் இருந்தபோதும்)

   Delete
  6. அத்தி வரதர் தரிசனம் கிடைத்தமைக்கு வாழ்த்துகள். இந்த வெயிலில் எப்படித் தான் கிளம்பினீங்களோனு நினைச்சேன். :(
   நாங்க அம்பத்தூரில் இருந்தவரைக்கும் காஞ்சிபுரம் நினைச்சால் போவோம்/போயிருக்கோம். சித்ரகுப்தன் கோயிலுக்குப் போனீங்களா?

   Delete
  7. கீசா மேடம்.... வெயில் ரொம்ப ரொம்ப படுத்திவிட்டது. 6-7 த்ண்ணீர் பாட்டில்கள் வாங்கினோம். மதியம் 2 மணி நேரம் ரெஸ்ட் எடுத்தாலும், என்னால் மீதி கோவில்களை தரிசனம் செய்யமுடியும்னு தோணலை... ஆனாலும் அவன் அருளால் தரிசனம் சிறப்பா முடிந்தது.

   பெரிய கோவில்களில் கோபுரத்தைத் தாண்டி நடக்கவே கஷ்டம். தளம் அவ்வளவு சூடு.

   சமீபத்தில் குற்றாலத்தில் சந்தித்தவர், காஞ்சி கோவில் சம்பந்தமாக ஒன்று சொல்லியிருக்கார். அதைச் செய்ய மீண்டும் செல்லணும்.... (அப்புறம் ஜூலையில் குளத்திலிருந்து வெளிவந்து தரிசனம் கொடுக்கும் அத்திவரதரை தரிசிக்கச் செல்லணும்)

   Delete
  8. போயிட்டு வாங்க! இறைவன் துணை இருப்பான்.

   Delete
 2. அதாவது பாகல்காய் பிட்லை.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் பாகல்காய் பிட்லை பிடிக்கும் என்றாலும் கத்திரிக்காய்க்கு அடுத்துத் தான் எதுவும்.

   Delete
  2. விட்டால் கத்தரிக்காய்ல பாயசம் பண்ணினால்கூட பிடிக்கும் போலிருக்கு.

   காய்ல கத்தரி வைத்து நிறைய வெரைட்டி பண்ணலாம். எனக்கும் பிடிக்கும்

   Delete
  3. என் அம்மா எங்களுக்குக் கத்திரிக்காய்+உ.கி.+வெங்காயம் போட்டுக் கறி பண்ணிச் சப்பாத்திக்குச் சாப்பாடுக்குத் தொட்டுக்க என அப்போதே பண்ணுவார். நானும் கல்யாணம் ஆகி வந்து பண்ணுவேன். ஆனால் இங்கே கத்திரிக்காயில் வெங்காயமானு கேட்டுட்டுச் சிரிப்பாங்க! இப்போல்லாம் அவங்களே பண்ண ஆரம்பிச்சாச்சு. :)))))

   Delete
  4. என்னவோ எனக்கு பைங்கன் பர்த்தா ஆரம்பத்திலிருந்தே பிடிப்பதில்லை. (அதுபோல பிண்டி மசாலா). கத்திரியும் உ.கி.யுமா? என்ன சேர்க்கையோ.... உ.கி, சேராத இடம் தன்னில் சேர வேண்டாம் என்ற அவ்வை மொழியைப் படித்ததில்லை போலிருக்கு

   Delete
  5. உருளைக்கிழங்கு எதோடும் ஒத்துப் போகும் என்பார்கள் எங்க வீடுகளிலே. என் பெண், பையர் எல்லாம் வெண்டைக்காய், அவரைக்காய், கொத்தவரை போன்றவற்றோடு எல்லாம் உ.கி.சேர்த்துப் பண்ணுவார்கள். நான் பீன்ஸ்+உ.கி. சேர்த்து மிக்சட் வெஜிடபுள் கறி செய்வேன். அதில் காரட், காலிஃப்ளவர், பட்டாணி எல்லாமும் இருக்கும்.

   Delete
 3. ரொம்பப் பிடித்ததது கத்திரிக்காய் பிட்லை.
  நன்றி நன்றி கீதா. அம்மா எழுதிக் கொடுத்ததைப் படிப்பது போல இருந்தது.
  கொண்டக்கடலை ஊறவைத்துக் கலப்பார்.
  இதுவே ஒரு முழு உணவாக்ச் சாப்பிடுவேன்.
  இங்கும் சிலசமயம் மிதி பாகல் கிடைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரேவதி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. எனக்கும் கத்திரிக்காயில் என்ன செய்தாலும் பிடிக்கும். இந்தப் பதிவுக்கு போணியே ஆகலை! ஒருவேளை பழைய பதிவுனு நினைச்சுட்டாங்க போல! :)) தலைப்பில் மாற்றம் செய்து தான் வெளியிட்டேன். இல்லைனா பிட்லை யாருக்கும் பிடிக்காதோ? :))))))

   Delete
 4. எப்படி மிஸ் செய்தேன்... பார்க்கவில்லை! இதோ வருகிறேன்.

  ReplyDelete
 5. அரைச்சு விட்ட சாம்பாரையெல்லாம் பிட்லை என்று ஒத்துக்கொள்ள முடியாது. பிடலைன்னா தனிதான். ஆனாலும் அதில் கொக போடுவதை நான் ரசிப்பதில்லை! மொச்சையும்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம், நீங்கல்லாம் சாம்பாராகச் செய்து பிசைந்து சாப்பிடுவதால் கொ.க. மொச்சையை ரசிக்கலை. நான் சொல்லுவது பிட்லையாக்கும்! இஃகி,இஃகி, இஃகி, இது எப்பூடி இருக்கு?

   Delete
 6. தனியா போடக்கூடாதா? நாங்கள் போடுகிறோமே... அம்மா எப்படிச் செய்வார் என்று நினைவில்லை. நீங்கள் சொல்லியிருப்பதுபோல மிளகு சேர்த்து ஒரு தரம் செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம், அம்மா பண்ணும்போது வறுத்துக் கொடுக்கும் சாமான்களை நான் தானே அம்மியில் அரைத்துக் கொடுப்பேன். ஆகவே நன்றாகத் தெரியும், பிட்லையில் கொ.ம.வி. இல்லைனு! அப்புறமா சாம்பாருக்கும் அதுக்கும் என்ன வித்தியாசம்?

   Delete
 7. பாஸ் பெரும்பாலும் மஞ்சள்பொடி போடுவதில்லை- எதிலுமே... அதன் வாசனை வீட்டில் பிடிப்பதில்லை என்பது அவர் கருத்து.பருப்பு அளவு அதிகம் என்று எனக்கும் தோன்றியது! அது பிட்லையின் சுவையை மாற்றிவிடும் வாய்ப்பு இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம், மஞ்சள் பொடி சேர்க்காமல் நான் எந்தச் சமையலும் பண்ணுவதில்லை. போளி தட்டினால் கூட மைதாவை மஞ்சள் பொடி சேர்த்துத் தான் பிசைவேன். ஆன்டி செப்டிக் என்பதோடு வயிற்றுக்கு நல்லது. அம்மா இருந்த காலத்தில் மஞ்சள் கிழங்கை அம்மி அல்லது அதற்கென உள்ள கல்லில் உரைத்து விழுதாக எடுத்துச் சமையலில் சேர்ப்பார். அதையும் பார்த்திருக்கேன். அதோடு நாங்க வாங்குவது தனி மஞ்சள் பொடி. ப்ரான்டட் பாக்கெட் வகைகள் எப்போதுமே வாங்குவதில்லை. மேலும் வேகப் போடும்போதே சேர்த்தால் வாசனை வராது. சாம்பார்ப் பொடியிலும் விரலி மஞ்சள் கிழங்கு வாங்கிச் சேர்ப்போம்.

   ஆமாம் ஸ்ரீராம், பருப்பின் அளவு அதிகமானால் சுவையும் மாறி விடுகிறது.

   Delete
  2. சாம்பார்ப்பொடி மொத்தமாக அரைக்கும்போது நாங்களும் மஞ்சள் சேர்ப்போமே...

   Delete
 8. வெல்லமா? சாம்பாருக்கு எல்லாமா வெல்லம் சேர்ப்பர்? வெந்தயக்குழம்பு, காரக்குழம்பு என்றால் பரவாயில்லை... இதற்குமா?

  ReplyDelete
  Replies
  1. எல்லா சமையலிலும் சேர்ப்பதில்லை. பாகல்காய் பிட்லைக்கு மட்டும். ரொம்ப எல்லாம் போட மாட்டேன். ஒரு சின்னத் துண்டு அல்லது இரண்டு டீஸ்பூன் வெல்லத்தூள்.

   Delete
  2. வெந்தயக்குழம்புக்கெல்லாம் நான் வெல்லம் சேர்ப்பதில்லை. சேர்த்தால் அந்த வெந்தய ருசி இருக்காது. காரக்குழம்புனு எதைச் சொல்றீங்க தெரியலை!

   Delete
 9. பிட்லையின் காம்பினேஷனாக மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டதில்லை. பிட்லை நாங்கள் பிசைந்துதான் சாப்பிடுவோம். மோர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

  ReplyDelete
  Replies
  1. நாங்க குறிப்பாக மதுரைப்பக்கங்களிலேயே இதைத் தொட்டுக்கத் தானே பண்ணுவாங்க. ஆகவே பிசைந்து சாப்பிடக் கட்டாயமாய் மோர்க்குழம்பு இருக்கும். இரண்டுக்கும் நல்ல காம்பினேஷனாகவும் இருக்கும்.

   Delete
 10. என்னதான் கத்தரிக்காய் பிடிக்கும் என்றாலும் பிட்லைன்னா அது பாகற்காய் பிட்லைதான். மற்றவை எல்லாம் அப்புறம்தான்! மிதிபாகல் கிடைக்காமல் நாங்கள் கொடி பாகல்தான் சேர்க்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. இங்கே மிதி பாகல் மாதிரியே "அதலக்காய்" என ஒன்று கிடைக்கும். அது வேலிப் பாகல் மாதிரி ரொம்ப நீளமாக இல்லாமலும் மிதி பாகல் மாதிரிச் சின்னதாகவும் இல்லாமல் கொஞ்சம் நீளமாக இருக்கும். அதிலும் பிட்லை பண்ணலாம். நன்றாக இருக்கும்.

   Delete
 11. ஸ்ரீராம், நீங்க சொல்வது சரி என்றாலும் கத்திரிக்காய்ப் பிட்லைக்கே என்னோட ஓட்டு! :)))))

  ReplyDelete
  Replies
  1. சரி... சரி.. எல்லாம் செய்யும் வகையில் இருக்கிறதோ என்னவோ!

   Delete
 12. பிட்லை என்றால் எங்க வீடுகளில் பாகற்காய், கத்திரிக்காய், சேனைக்கிழங்கு, காராமணி போன்றவற்றில் மட்டும் பண்ணுவது! //

  அதே அதே கீதாக்கா அதிலும் குறிப்பா பாகற்காய், கத்தரிககய் தான் பிர்லைனு வீட்டுல அல்லோகலப்படும்...
  ஆகா கீதாக்கா பிட்லைக்கு கருத்து போட்டா அது ஐங்காயப்பொடில வந்து நிக்குது..

  என் கணினியின் படுத்தல் தாங்கலைக்கா.. நல்ல காலம் வேர்டில் அடித்துக் கொள்வதால் மீண்டும் காப்பி செஞ்சு இங்கு போட முடிந்தது...விட்ட பதிவுகளையும் பார்க்கிறேன் கீதாக்கா....இன்னும் இதுவே முடிக்கலை...பார்த்துவிட்டு வரேன்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. உங்களோட கருத்துக்கான பதிலுக்கு அப்புறமா வரேன். இப்போக் கஞ்சிக்கு வறுக்கணும். தினம் தினம் டபாய்ச்சுட்டே இருக்கேன், வெயில் காரணமா! :)

   Delete
  2. கணினியை மாத்துங்க! இல்லைனா ஃபார்மட் பண்ணினாச் சரியாயிடும்னா பண்ணுங்க!

   Delete
 13. பிட்லை என்பது எங்க வீடுகளில் எல்லாம் தொட்டுக்கொள்ளும் ஓர் உணவு வகை! சாம்பார் போல் நீர்க்கப் பண்ணிப் பிசைந்து சாப்பிடுவது அல்ல. ஆகவே இங்கே நான்சொல்லப் போவது தென்மாவட்டங்களில் பண்ணும் பிட்லையே.//

  சேம் சேம் கீதாக்கா....மாமியார் வீட்டில எல்லாம் பிட்லை என்பது சாம்பார் போன்றுதான் இருக்கும் மட்டுமல்ல அவங்க பண்ணுவதே அபூர்வம்.

  பிறந்த வீட்டில இதெல்லாம் சர்வ சகஜம். கொஞ்சம் குடும்பம் பெரிது என்பதாலும், ஏழ்மையும் என்பதாலும் பிட்லை செய்தால் அதையே பிசைந்து சாப்பிடச் சொல்லிவிடுவாங்க...தொட்டுக்கொள்ள வீட்டில் செய்த அப்பளம் இருந்தால் சுட்டுத்தருவாங்க இல்லைனா அதுவும் இல்லை...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கதி/கீதா,தஞ்சை, கும்பகோணம்பக்கங்களிலே அரைத்து விட்ட சாம்பாரைத் தான் பிட்லை என்கின்றனர். அதே போல் கூட்டை ரசவாங்கி என்பார்கள். :))) ரசவாங்கி எங்க வீட்டிலே பண்ணுவது தனி ரகம்.அன்னிக்கு நோ ரசம்!கத்திரிக்காயை முழுசாப் போட்டுப் பண்ணுவாங்க. தொட்டுக்கப் பொரித்த அப்பளம்.

   Delete
 14. வறுத்து அரைக்க
  மி.வத்தல் நான்கு அல்லது ஐந்து. கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு இரண்டு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு. இதுக்குக் கொத்துமல்லி விதை சேர்க்க வேண்டாம். //

  அக்கா இதே இதே இதே கொ ம சேர்க்க மாட்டாங்க. மாமியார் வீட்டுல எதுக்கெடுத்தாலும் கொ ம சேர்ப்பாங்க...

  பிறந்த வீட்டுல தேங்காய்த் துருவல் கொஞ்சம் கூடுதலா சேர்த்துப்பாங்க...ஒரு வேளை நபர்கள் அதிகம் என்பதாலோ என்னவோ...வீட்டில் தென்னை மரம் இருந்ததாலும் இருக்கலாம்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தி/கீதா, எங்க அம்மாவுக்கு இருந்த ஒரே ஆசை முழுத் தேங்காய் வாங்கி உடைக்கணும், சமையல் பண்ணணும்னு! ஆனால் அப்பா அதெல்லாம் வாங்க மாட்டார். வாங்கினாலும் ரொம்பச் சின்னதா உள்ளங்கைக்குள்ளே அடங்கும்படி வரும். அநேகமா எங்க வீட்டில் எல்லாம் அப்போதைய காலங்களில் தேங்காய்ச் சில்லு தான் பயன்படுத்துவார்கள். ஆகவே தேங்காய் நிறையப் போயிடுமோனு பயம் இருக்காது! :)

   Delete
 15. ஊரில் இருந்த வரை மிதி பாகல் தான் பிட்லைக்கு.

  சென்னையில் நான் செய்வதென்றால் சந்தையில் மிதி பாகல் கிடைக்கும் போது வாங்கிச் செய்வதுண்டு. இங்கும் பங்களூரிலும் கிடைக்கிறது. வாங்கிச் செய்துவிட்டேன் மிதி பாகலில். அது கிடைக்காத பட்சட்தில் பெரிய பாகற்காய்...இல்லை என்றால் கத்தரிக்காய்...

  இதே மெத்தட்தான் அக்கா, மொச்சை, கொ க அப்புறம் பருப்பு போட்டு என்று இப்படியேதான் செய்வாங்க வீட்டில். நானும் அதையே ஃபாலோ செய்கிறென்...அப்புறம் கொத்தமல்லி போடுவதில்லை கறிவேப்பிலை மட்டுமே...பெரும்பாலும் தேங்காய் எண்ணெயில்தான் செய்வது பிறந்த வீட்டில்.

  புகுந்த வீட்டில் தே எண்ணெய் அதிகம் பயன்படுத்த மாட்டவெ மாட்டார்கள். அவர்களுக்குப் பிடிப்பதில்லை. ஆனால் நான் நம் வீட்டில் செய்யும் போது தே எ பயன்படுத்துவேன். இங்கு பிரச்சனை இல்லை..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அம்பத்தூரில் வீட்டிலேயே காய்க்கும். அக்கம்பக்கம் எடுத்துக் கொண்டது போக மிச்சம் எங்களுக்கும் கிடைக்கும். அதிலே அடிக்கடி பண்ணுவேன். இங்கே வந்து பிட்லையே குறைஞ்சு போச்சு! திரும்பிப் பார்த்தால் முருங்கைக்காய் தான்! கத்திரி, வெண்டை, கீரை! :)))))

   Delete
 16. அடுத்த தஞ்சாவூர் ஸ்டைலும் போடுங்க...அது எங்க மாமியார் வீட்டுல வெரி ரேர் செய்வது..எங்கள் மற்ற குடும்பங்களில் இந்தப் பிட்லை எல்லாம் செய்து பார்த்ததே இல்லை. எல்லாமே சென்னை சமையல்தான்.

  நான் மட்டுமே எங்க வீட்டில இப்படி எல்லா ஊர் ரெசிப்பிஸும்..ஹிஹிஹி புகுந்த வீட்டில் பிடிக்காது என்பது அத்தனை இல்லை எல்லோரும் எதுவும் சாப்பிடுவாங்கதான் ஆனால் அவங்க சென்னையை இல்லை அது ஏதோ ஒன்று அந்த சமையல் மட்டுமெ...

  நம் வீட்டில் யாருக்கும் எது செஞ்சாலும் சாப்பிடுவாங்க. பிடிக்காது என்பது கிடையாது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தி/கீதா, தஞ்சாவூர்ப் பக்கம் ரொம்பவெல்லாம் அரைத்து விட மாட்டாங்க. பொடி போட்டுவிட்டு மேலே கொஞ்சம் வறுத்து அரைத்துவிட்டுடுவாங்க. இதைத் தான் அங்கே பிட்லை என்று சொல்வது வழக்கம். அதோடு எங்க புக்ககத்தில் எல்லோரும் ரொம்பவே தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவாங்க! எளிதில் திருப்தி அடைய மாட்டாங்க! நல்லா இருந்ததுனா, "தேவலை! பரவாயில்லை! குத்தமில்லை!" என்று சொல்வாங்க! :))))))

   Delete
 17. கீதாக்கா ஒன்று சொல்ல விட்டுப் போச்சு. என் பாட்டி பிட்லையில் தாளிக்கும் போது கொஞ்சம் தேங்காய் வறுத்தும் சேர்ப்பார். திருவனந்தப்புரத்தில் இருந்த போது பக்கத்துவீட்டு மாமியும் வறுத்துச் சேர்ப்பதாகச் சொன்னதுண்டு. ஸோ நானும் வறுத்துச் சேர்ப்பேன் கடைசியில்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தேங்காய் நிறையச் சேர்த்தால் பிடிக்கும் எனில் வறுத்தும் சேர்த்துப் போடலாம். நானும் சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன். எரிசேரிக்குக் கட்டாயமாய் அரைத்தும் விட்டு விட்டு வறுத்தும் போடுவேன்.

   Delete