இதைப் போலவே மோர்க்குழம்பிலும் பல வகைகள் உண்டு. ச்ராத்த மோர்க்குழம்பில் இருந்து எல்லாம் இருக்கின்றன. தேங்காய் சேர்த்து, சேர்க்காமல், பருப்புச் சேர்த்து அரைத்து, பருப்பில்லாமல் தேங்காய் மட்டும் போட்டு என விதம் விதமாக உள்ளன. புளி சேர்த்தும் மோர்க்குழம்பு செய்வார்கள். எங்க வீடுகளில் இதை அரைப்புளிக்குழம்பு எனச் சொல்லுவதுண்டு. இப்படி விதம் விதமாக இருப்பனவற்றில் இருந்து தினசரி சமையலில் செய்வது, விசேஷ நாட்களில் செய்வது என வகைப்படுத்தி எழுத வேண்டும். ஒவ்வொரு விசேஷத்திலும் ஒவ்வொரு வீடுகளிலும் மாறுபடும் என்றாலும் பொதுவான சில சமையல்கள் உள்ளன. இவற்றில் சுமங்கலிப் பிரார்த்தனை சமையல் எனவும் இருக்கிறது. ரொம்பப் பெரிய அளவில் போகாட்டியும் முக்கியமான சிலவற்றையானும் தொகுத்துத் தரும் எண்ணம் இருக்கிறது. ஆனால் முதலில் எதில் ஆரம்பிப்பது என்பதில் கொஞ்சம் யோசனை. இந்த சாம்பாரிலேயே புளி சேர்த்து சாம்பார், புளி சேர்க்காமல் சாம்பார், பருப்புப் போட்டு சாம்பார், பருப்பில்லாமல் சாம்பார், ஹோட்டல் முறையில் சாம்பார் என உண்டு.
ஒவ்வொன்றையும் வகைப்படுத்த வேண்டும். பொதுவாக சமையல் வேலைகள் கஷ்டம் என நினைப்போரே உண்டு. அதோடு சில பெண்கள் சமையல் குறிப்புக்கள் எழுதினாலும், சமையல் பற்றி ஆர்வம் காட்டினாலும் அறிவு ஜீவிகளாகக் கருதப்படும் இக்காலப் பெண்களுக்குச் சிரிப்பு வரும். இவ்வளவு படித்து விட்டுச் சமையல் செய்து கொண்டிருக்க முடியுமா என்பார்கள்! ஆனால் அவங்கல்லாம் சாப்பிடவே மாட்டாங்களா என்ன? அந்தச் சாப்பாடெல்லாம் எங்கிருந்து வரும்? அதுவும் யாரோ ஒரு பெண் அல்லது ஆண் சமைத்துத் தானே கொடுக்கிறாங்க! அவங்கல்லாம் சமைத்தால் பரவாயில்லை. இவங்க படிச்சுட்டதாலே சமைக்க மாட்டாங்களாம்! சொல்லுவாங்க! ஆணோ, பெண்ணோ சமையலின் அடிப்படையானும் தெரிஞ்சிருக்கணும். கட்டாயமாய் ஒரு சாதம் வைத்து ரசம், காய் ஏதேனும், குழம்பு எனப் பண்ணத் தெரிந்திருக்கணும்.
என்னதான் ஸ்விக்கி, ஜொமோட்டோ என உணவுகளை நாம் ஆர்டர் செய்து வாங்கிச் சாப்பிட்டாலும் அவை எல்லாம் சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தது எனச் சொல்ல முடியாது. நம் வீட்டில் நாமே நம் கையால் அல்லது அம்மாவின் கைகளாலோ, மனைவியில் கைகளாலோ சமைத்துச் சாப்பிடுவதைப் போல் மனதுக்கு நிறைவானது வேறு இல்லை. ஒவ்வொருவர் சமையலிலும் மாறுபாடும் ருசியிலும் மாறுபாடு, செய்முறையிலும் மாறுபாடு இருக்கும் தான்! ஆகவே அடிப்படை தெரிந்தால் போதும். சமையலுக்குத் தேவையான காய்கறிகள் மட்டுமில்லாமல் பருப்புச் சேர்த்துச் செய்யும் சமையலின் போது செய்ய வேண்டிய காய்கள், பருப்பில்லாமல் சமைத்தால் செய்ய வேண்டிய காய்கள், வயிறு சரியில்லாத அன்று சமைக்க வேண்டிய உணவு, பத்திய உணவு, அதற்கேற்ற காய்கள் என நிறைய இருக்கின்றன. இதில் இறங்கினால் யோசித்து யோசித்து நிறையச் செய்யலாம். எனக்கு நினைவில் இருக்கும் வரை முடிந்த/தெரிந்த அனைத்தையும் பதிவாக்கணும்னு எண்ணம். ஆகவே இப்போதைக்கு முன்னுரை போதும்னு நினைக்கிறேன். இனி நாளைக்கு சாம்பார் பண்ணுவதில் இருந்து ஆரம்பிப்போம். எல்லோரும் அதற்குத் தேவையான புளி, துவரம்பருப்பு, சாம்பாருக்குப் போட வேண்டிய தான்கள், சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயம், கருகப்பிலை, கொத்துமல்லி, தாளிதத்துக்குத் தேவையான பொருட்களோடு தயாராக வரவும். இந்த சாம்பாருக்கான காய்கள் இருக்கே அதிலும் நான் ரொம்பத் தேர்வு செய்து தான் போடுவேன். உருளைக்கிழங்கு சாம்பார், காலிஃப்ளவர் சாம்பார் என்றேல்லாம் போடுவது இல்லை. எங்க மாமியார் வீட்டில் கொத்தவரைக்காய் போட்டுக் கூட சாம்பார் வைப்பார்கள். அந்த மாதிரி எந்தக் காய் கையில் கிடைக்குதோ அதை எல்லாம் போட்டு சாம்பார் வைப்பது பாரம்பரியத்தில் வராது. பின்னாட்களில் சரியான காய்கள் கிடைக்காமல் செய்வது அவை எல்லாம். இனி ஒவ்வொன்றாக ஆரம்பிப்போம். ஷ்டார்ட், ம்யூஜிக்! ரெடி, ஒன், டு, த்ரீ!
ஒவ்வொன்றையும் வகைப்படுத்த வேண்டும். பொதுவாக சமையல் வேலைகள் கஷ்டம் என நினைப்போரே உண்டு. அதோடு சில பெண்கள் சமையல் குறிப்புக்கள் எழுதினாலும், சமையல் பற்றி ஆர்வம் காட்டினாலும் அறிவு ஜீவிகளாகக் கருதப்படும் இக்காலப் பெண்களுக்குச் சிரிப்பு வரும். இவ்வளவு படித்து விட்டுச் சமையல் செய்து கொண்டிருக்க முடியுமா என்பார்கள்! ஆனால் அவங்கல்லாம் சாப்பிடவே மாட்டாங்களா என்ன? அந்தச் சாப்பாடெல்லாம் எங்கிருந்து வரும்? அதுவும் யாரோ ஒரு பெண் அல்லது ஆண் சமைத்துத் தானே கொடுக்கிறாங்க! அவங்கல்லாம் சமைத்தால் பரவாயில்லை. இவங்க படிச்சுட்டதாலே சமைக்க மாட்டாங்களாம்! சொல்லுவாங்க! ஆணோ, பெண்ணோ சமையலின் அடிப்படையானும் தெரிஞ்சிருக்கணும். கட்டாயமாய் ஒரு சாதம் வைத்து ரசம், காய் ஏதேனும், குழம்பு எனப் பண்ணத் தெரிந்திருக்கணும்.
என்னதான் ஸ்விக்கி, ஜொமோட்டோ என உணவுகளை நாம் ஆர்டர் செய்து வாங்கிச் சாப்பிட்டாலும் அவை எல்லாம் சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தது எனச் சொல்ல முடியாது. நம் வீட்டில் நாமே நம் கையால் அல்லது அம்மாவின் கைகளாலோ, மனைவியில் கைகளாலோ சமைத்துச் சாப்பிடுவதைப் போல் மனதுக்கு நிறைவானது வேறு இல்லை. ஒவ்வொருவர் சமையலிலும் மாறுபாடும் ருசியிலும் மாறுபாடு, செய்முறையிலும் மாறுபாடு இருக்கும் தான்! ஆகவே அடிப்படை தெரிந்தால் போதும். சமையலுக்குத் தேவையான காய்கறிகள் மட்டுமில்லாமல் பருப்புச் சேர்த்துச் செய்யும் சமையலின் போது செய்ய வேண்டிய காய்கள், பருப்பில்லாமல் சமைத்தால் செய்ய வேண்டிய காய்கள், வயிறு சரியில்லாத அன்று சமைக்க வேண்டிய உணவு, பத்திய உணவு, அதற்கேற்ற காய்கள் என நிறைய இருக்கின்றன. இதில் இறங்கினால் யோசித்து யோசித்து நிறையச் செய்யலாம். எனக்கு நினைவில் இருக்கும் வரை முடிந்த/தெரிந்த அனைத்தையும் பதிவாக்கணும்னு எண்ணம். ஆகவே இப்போதைக்கு முன்னுரை போதும்னு நினைக்கிறேன். இனி நாளைக்கு சாம்பார் பண்ணுவதில் இருந்து ஆரம்பிப்போம். எல்லோரும் அதற்குத் தேவையான புளி, துவரம்பருப்பு, சாம்பாருக்குப் போட வேண்டிய தான்கள், சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயம், கருகப்பிலை, கொத்துமல்லி, தாளிதத்துக்குத் தேவையான பொருட்களோடு தயாராக வரவும். இந்த சாம்பாருக்கான காய்கள் இருக்கே அதிலும் நான் ரொம்பத் தேர்வு செய்து தான் போடுவேன். உருளைக்கிழங்கு சாம்பார், காலிஃப்ளவர் சாம்பார் என்றேல்லாம் போடுவது இல்லை. எங்க மாமியார் வீட்டில் கொத்தவரைக்காய் போட்டுக் கூட சாம்பார் வைப்பார்கள். அந்த மாதிரி எந்தக் காய் கையில் கிடைக்குதோ அதை எல்லாம் போட்டு சாம்பார் வைப்பது பாரம்பரியத்தில் வராது. பின்னாட்களில் சரியான காய்கள் கிடைக்காமல் செய்வது அவை எல்லாம். இனி ஒவ்வொன்றாக ஆரம்பிப்போம். ஷ்டார்ட், ம்யூஜிக்! ரெடி, ஒன், டு, த்ரீ!
I'm waiting....:)
ReplyDeleteவாங்க மிகிமா. நன்றி.
Deleteபேசாமல் குழுமபு வகைகளை வரிசைப்படுத்தி 30 நாள் 30 சாம்பார், 30 நாள் 30 மோர்க்குழம்பு, 30 நாள் 30 புளிக்குழம்பு வற்றல் குழம்பு, 30 நாள் 30 ரசம் என்று இலவச இணைப்பாக மங்கையர் மலருக்கோ குமுதம் சிநேகிதிக்கோ அவள் விகடனுக்கோ மஞ்சுளா ரமேஷ் சிநேகிதிக்கோ கொடுத்து விடுங்கள்.
ReplyDeleteஜேகே அண்ணா, உங்கள் ஆலோசனைக்கு நன்றி. நான் சொல்லப் போவது சமையல் ஆரம்பப்பாடத்தில் இருப்பவர்களுக்கு! உங்களைப் போன்ற திறமைசாலிகளுக்கு அல்ல.
Deleteஇப்போ இருக்கிற பிள்ளைகளுக்கு (15-25 வயசு) என்ன சமையல் தெரியுது. எல்லாம் யாராவது செய்து தந்தால் தான்.ஹிஸ்டரி படிக்கிற மாதிரி பாரம்பரிய சமையலையும் படிக்கட்டுமே. ஹி ஹி ஹி.
DeleteJayakumar
ஜேகே அண்ணா, எங்க பேத்தி, அப்புவுக்கு இன்னும் பனிரண்டு வயது ஆகவில்லை. ஆனாலும் அவளுக்குச் சமையலில் ஆர்வம் அதிகம். தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளைத் தான் தேடித்தேடிப் பார்க்கிறாள். என்னிடம், "பாட்டி, உன்னுடைய சமையல் முறையை ஆங்கிலத்தில் போடு! நான் அம்மா, அப்பாவுக்குச் செய்து காட்டுவேன்!" என்று சொல்கிறாள்.
Deleteவரேன் அக்கா ...அட்டெண்டன்ஸ் வைச்சுருக்கேன்.. வருகிறேன்...
ReplyDeleteகீதா
வாங்க, வாங்க தி/கீதா! நல்வரவு! பூஸார் இங்கெல்லாம் வராது!வந்தாலும் ரொம்பவே நொடிக்கும்! :))))
Deleteஆணோ, பெண்ணோ சமையலின் அடிப்படையானும் தெரிஞ்சிருக்கணும். கட்டாயமாய் ஒரு சாதம் வைத்து ரசம், காய் ஏதேனும், குழம்பு எனப் பண்ணத் தெரிந்திருக்கணும்.//
ReplyDeleteஅதானே!! ஆணென்ன பெண்ணென்ன?!!!!
//நம் வீட்டில் நாமே நம் கையால் அல்லது அம்மாவின் கைகளாலோ, மனைவியில் கைகளாலோ சமைத்துச் சாப்பிடுவதைப் போல் மனதுக்கு நிறைவானது வேறு இல்லை. //
இதை நான் கன்னாபின்னானு ஆதரிப்பேன்...!!!
ஆமாம் கீதாக்கா புளிவிட்ட மோர்க்குழம்பு எங்க வீட்டுல எரி கொள்ளினு...அப்புரம் புளியில்லா ரசம், புளியில்லா பொரிச்ச கூட்டு, புளி இலல சாம்பார்...என்று பல புளி சேர்த்தும் சேர்க்காமலும்னு நிறையவே இருக்கு..
சூப்பர் தொடங்குங்க...வந்துடறோம்...ஒரு கை கொடுக்க ஹிஹிஹிஹி
கீதா
உங்களுக்குப் புதுசா இருக்காது தி/கீதா. நான் வருங்காலத்துக்காகத் தொகுக்கிறேன். இதை ஆங்கிலத்திலும் ஆங்கிலப் பதிவின் வலைப்பக்கம் கொடுப்பேன். ஏன்னா எங்க பொண்ணு, மாட்டுப் பொண்ணு இன்னும் நாத்தனார் பெண்கள் ஆகியோருக்கெல்லாம் தமிழ் தெரியாது! :))))
Deleteஎல்லோரும் அதற்குத் தேவையான புளி, துவருமபருப்பு, சாமாருக்குப் போட வேண்டிய தான்கள், சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயம், கருகப்பிலை, கொத்துமல்லி, தாளிதத்துக்குத் தேவையான பொருட்களோடு தயாராய வரவும். //
ReplyDeleteஆஹா!! இது வேறயா..ஹா ஹா ஹா ஹா
அது சரி அப்ப வீட்டுல அடுப்பை ஏற்றி விட்டு இங்க வந்து பார்த்து பார்த்து கிச்சனுக்கும் ஹாலுக்கும் ஓடிக் கொண்டு செய்யனுமோ ஹா ஹா ஹா ஹா...அதெல்லாம் பூஸாருக்கு...ஹிஹிஹிஹி...(பூசார் ஏஞ்சலை தொடுத்துவிடுவார்!! ஹா ஹா )
அக்கா வெஞ்சன சாமான் சொன்னவங்க காய் சொல்லாம போய்ட்டீங்களே... எல்லாம் ரெடியானு சொல்லிருக்கீங்க....காய் என்னனு தெரியாம அடுப்பை பத்த வைச்சுட்டு கடைக்கு ஓட முடியுமோ!!!!இங்க பார்த்து பார்த்து செய்யறவங்களுக்கு... ஹிஹிஹிஹி....
கீதா
ஹிஹிஹி, பூஸார் பத்தி இங்கே சொல்ல நினைச்சது இடம் மாறிப் போச்சு.
Deleteகாய்கள் பத்தித் தனியா வரும் தி/கீதா. இந்த முன்னுரைக்கே ஜேகே அண்ணா கிண்டல் அடிக்கிறார். ஆகவே கறி வகைகள் பட்டியலுக்கு முன்னால் அதுக்கான முன்னுரை கொடுத்துடலாம்னு இருக்கேன். :))))
வெஞ்சனம் - இது தமிழா? யாரு உபயோகப்படுத்துகிறார்கள்?
Deleteஇது கீதாக்களுக்கான கேள்வி.
மதுரை வழக்கில் சாப்பாட்டிற்கான தொடுகறி (sidedish)
Deleteவெஞ்சனம் என்று வழங்கப்படும்
கோவையிலுந்தான். வ்யஞ்சனம் என்னும் வடசொல்லின் தற்பவம்.
வெஞ்சனம் veñcaṉam , n. < vyañjana. 1. Vegetable relish; சமைத்த கறியுணவு. Colloq. 2. Condiment; கறிக்குதவும் பண்டம். 3. Sauce; குழம்பு. (W.) 4. Consonant; மெய்யெழுத்து. (W.)
(சென்னைப் பல்கலைப் பேரகராதி).
வெஞ்சனம் என்பதை பொதுவா குழம்புக்குத்தான் சில இடங்களில் உபயோகப்படுத்தி நான் கேட்டிருக்கேன்.
Deleteஇல்லை. தொட்டுக்கொள்ளும் உணவுப் பதார்த்தமே வ்யஞ்சனம் எனப்படும். மூலம் சம்ஸ்கிருதம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? :)))))
Deleteதாளிதத்துக்குத் தேவையான பொருட்களோடு தயாரா வரவும்//
ReplyDeleteஅக்கா ரீச்சர்..அது என்னனு வகுப்புக்கு வரவங்களுக்கு விலாவாரியா சொல்லனுனமே..பூஸாருக்கு தாளிதம் எல்லாம் தெரியுமோ?!! ஆ ஆ மீ ரன்னிங்க்!!
கீதா
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வழக்கமான தாளிப்பிலே இருக்கும் கடுகு, வெந்தயம், மி.வத்தல், கருகப்பிலை போன்றவை தான். அதிலும் ஒரு நுணுக்கம். என் மாமியார் வீட்டில் சாம்பாரில் கருகப்பிலையே போட மாட்டாங்க! எங்க வீடுகளிலே அதன் ஆர்க்கோடு இரண்டாய்க் கிள்ளிப் போடுவோம். :))))
Deleteஎன்னது... ஆரம்பமே அபாய சங்காக இருக்கு. கூட்டு போன்றவற்றிர்க்கு தாளிதத்துக்கு (தி ரு வ மா ற... எங்கே வல்லிம்மா) உ.பருப்பு வேண்டாமோ?
Delete//கூட்டு போன்றவற்றிர்க்கு தாளிதத்துக்கு (தி ரு வ மா ற... எங்கே வல்லிம்மா) உ.பருப்பு வேண்டாமோ?// இங்கே சாம்பார் பத்தி மட்டும் தான் பேச்சு! கூட்டுச் செய்முறையின் போது அதுக்கான தாளிதம் பற்றி வரும். :)))
Deleteநானும் காலிஃப்ளவர், உ கி போட்டு சாம்பார் வைப்பதில்லை.
ReplyDeleteஆனால் வீட்டில் மகனுக்கு, குழந்தை உருளை முழுசா போட்டு, சி வெ போட்டு சாம்பார் செய்தால் பிடிக்கும் என்பதால் செய்ததுண்டு....மற்ற படி கொத்தாரை எல்லாம் போட்டுச் செய்வதில்லை.
உங்கள் ரெசிப்பிஸ் அறிய ஆவலுடன் தொடர்கிறேன்...
கீதா
தி/கீதா, குழந்தை உருளைக்கிழங்கு காரக்கறி, ஆலு தம் போன்றவையும் தஹி ஆலூ போன்றவையும் தான் செய்வேன். சாம்பாரில் போட்டதில்லை. :))))
ReplyDeleteமுன்னுரை பலமா இருக்கு. அடுத்த பகுதிகளுக்கான காத்திருப்பில் நானும்.
ReplyDeleteவாங்க வெங்கட், நாளைக்கு என்ன சமையல்னு இன்னும் முடிவாகலை! ஒரு வேளை சாம்பார் எனில் படம் எடுக்கலாம். நம்மவருக்குக் கடைசி நிமிடம் வரைக்கும் த்ரில் கொடுப்பதில் ஆர்வம் அதிகம். நான் சாம்பார்னு முடிவு பண்ணி வைச்சிருந்தா திடீர்னு கீரையை வாங்கிட்டு வந்துட்டு முருங்கைக்காய்க் குழம்பு அல்லது வற்றல் குழம்பு பண்ணுனு சொல்லுவார். அதைப் படம் எடுத்துப் போட்டால் நெல்லை கம்பைத் தூக்கிக் கொண்டு வருவார். அதான் யோசிக்கிறேன். :))))
Delete//தேவையான பொருட்களோடு தயாராய வரவும்.// - முதலில் கீதா சாம்பசிவம் மேடம் அவருடைய கேமராவை சார்ஜ் செய்து தயாராக இருக்கிறாரா என்று யாராவது பார்த்துச் சொல்லவும்.
ReplyDeleteஅப்படி அவர் போட்டோ எடுக்கத் தயாராக இல்லை என்றால், அவர் எழுதுவதில் எனக்குப் பிடித்தவைகளை நானே செய்து, போட்டோக்கள் எடுத்து, 'நெல்லைத்தமிழனின் செய்முறை' என்று போட்டுக்கொள்ளலாம் என்ற அனுமதியாவது இங்கு தரணும்.
எல்லாவற்றையும் நினைவு வைத்துக் கொண்டு படம் எடுப்பது கடினம் நெல்லையாரே! மீனாக்ஷி அம்மாளின் சமைத்துப் பார் புத்தகம் பழைய பதிப்புப் பார்த்திருக்கிறீர்களா?ஒரு படம் கூடக் கிடையாது! அதுக்காக யாருமே புரிஞ்சுக்காமலா இருந்தாங்க? இப்போல்லாம் பகட்டு, ஆடம்பரம், வெளிக்காட்டுதல் அதிகம். எல்லோரும் யூட்யூப், சமையல் நிகழ்ச்சி எனக் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். மத்தபடி உங்களுக்கு உங்களோட செய்முறைகளை உங்க பெயரில் படங்களோடு போட்டு வெளியிடுவதற்கு என் அனுமதி எதுக்கு? :))))) என்னோட செய்முறை படம் இருந்தாலும் இல்லாட்டியும் என்னோட பெயரில் தான் வரும்! :))))
Delete//நம் வீட்டில் நாமே நம் கையால் அல்லது அம்மாவின் கைகளாலோ// - அருமையான வரிகள். நமக்கு பேஸிக் சமையல் தெரிந்திருந்தால், யார் தயவும் தேவையில்லை, விரைவாக நமக்கு அவசியமானதைச் செய்து சாப்பிடலாம்.
ReplyDeleteசமையல், ஒவ்வொரு ஆணும்/பெண்ணும் சிறிய வயதிலேயே கற்றுக்கொள்ளவேண்டும். இதனை இரண்டு பிரிவாகப் பிரித்து பள்ளி அளவிலேயே சொல்லிக்கொடுக்கணும். இவையெல்லாம்தான் பசங்க எங்க படிக்கப் போனாலும் அவர்களுக்கு உறுதுணையா இருக்கும்.
என் மாமியார், கடைசி நாத்தனார் எல்லாம் நம்ம ரங்க்ஸ் என்னிக்காவது சமைத்தால் அழுதுடுவாங்க! :)))))
Deleteபாசிடிவ் திங்கிங் வேண்டாமோ? யோசித்துப் பாருங்க. சாம்பு மாமா அட்டஹாசமா சமைத்தால், தெரிந்திருந்தால், உங்க பிளாக்குல ஒவ்வொரு செய்முறை நீங்க எழுதினாலும், அது உங்களுடையதுதானா இல்லை மண்டபத்துல யாரானும் எழுதித் தந்தாங்களான்னு எல்லாரும் கேட்டிருப்பாங்க. அப்புறம் உங்க சமையலுக்கு உங்க வீட்டிலேயே (பசங்க முதற்கொண்டு) மவுசு குறைந்திருக்கும். எல்லாம் நன்மைக்கே. ஹாஹா
Deleteஹாஹா, நீங்க தான் பாசிடிவா நினைச்சிருக்கீங்க/ அவங்க அழுவது அவங்க பிள்ளையை நான் வேலை வாங்குகிறேன் என்பதை நினைத்து! மற்றபடி அவர் சமையலை நினைச்சு இல்லை! அவங்களைப் பொறுத்தவரையில் ஆண் அதாவது தங்கள் வீட்டுப் பிள்ளை இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்பதே! :)))))))
Delete//பொதுவாக சமையல் வேலைகள் கஷ்டம் என நினைப்போரே உண்டு// - எந்த வேலையும் கஷ்டம்தான், நாம் இஷ்டப்படாதவரை.
ReplyDeleteசமையலைப்போல் இண்டெரெஸ்டிங் வேலை கிடையாதுன்னு நினைக்கிறேன். அதுக்கு உடனுக்குடன் ரிசல்ட் தெரியும். பசிச்சவங்களோட ஃபீட்பேக் உடனே நமக்குச் சொல்லிடுவாங்க.
எழுதுங்க. விரைந்து (அதாவது வாரம் இரண்டு முழுநீள இடுகையா, முடிந்தால் அளவுகளோடு) எழுதுங்க.
ஹிஹிஹி, விரைந்து எழுதுங்க! அதான் பாடாய்ப் படுத்துது! செவ்வாய்க்கிழமை சொல்றேன். :))))
Deleteஎழுதும்போது, உங்க வீட்டு வழக்கத்தை எழுதுங்க (முன்னுரிமை கொடுத்து). உங்க பரம்பரைச் சமையல் குறிப்புகள் முக்கியம்.
ReplyDeleteமுக்கியமாய் எங்க வீட்டு வழக்கத்தைச் சொல்லத் தானே ஆரம்பிச்சிருக்கேன். எங்க வீட்டுக் குழந்தைகளுக்குத் தெரியணும் இல்லையா?
Delete//ஏன்னா எங்க பொண்ணு, மாட்டுப் பொண்ணு இன்னும் நாத்தனார் பெண்கள் ஆகியோருக்கெல்லாம் தமிழ் தெரியாது! :))))//
ReplyDeleteஇதை எப்படி எடுத்துக்கணும். பெருமை என்றா அல்லது பரிதாபம் என்றா அவசியம் இல்லாதது என்றா?
உங்களுக்குத் தோன்றுகிறபடி எடுத்துக்கலாம். எங்க குழந்தைகள் படிச்சதெல்லாம் கேந்திரிய வித்யாலயா ராஜஸ்தான் , குஜராத்தில் . ஒரு நாத்தனார் பெண்கள் பிஹார் கத்திஹாரில் கேந்திரிய வித்யாலயாவில் படித்தார்கள். இன்னொரு நாத்தனார் பெண்கள் பிலாயில் படித்தார்கள். ஆனால் எல்லோருக்கும் தமிழ் நன்றாகப் பேசத்தெரியும். பாரம்பரியப் பழக்கங்கள் தெரியும். தெரியாததைக் கேட்டுக் கொள்வார்கள்.
Deleteஜெயகுமார் சார்... இது கொஞ்சம் யோசிக்கவேண்டிய விஷயம். தமிழ்நாட்டுலேயே வாழ்ந்து, பசங்களுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது என்று சொல்வது நிச்சயமாக பரிதாபமான நிலைதான், தவறுதான். ஆனால் வெளிநாடுகள்ல வாழறவங்களுக்கும், வட மாநிலங்கள்ல வாழும் தமிழர்களுக்கும் தமிழ் ரொம்ப ஃப்ளூயண்டாக குழந்தைகள் எழுத படிக்கத் தெரியாததை பெரிய குற்றமாகக் கருதமுடியாது.
Deleteநெல்லைத் தமிழரே, அவரோட கருத்தை அவர் சொல்லுகிறார். என்னோட கருத்தை நான் தெரிவித்து விட்டேன். இதே நாங்க புனே, நாக்பூர், தில்லி மூன்று ஊர்களில் எங்கே இருந்திருந்தாலும் தமிழ்ச்சங்கம் நடத்தும் பள்ளியில் சேர்த்திருக்கலாம். புனே, நாக்பூரில் சரஸ்வதி வித்யாலயா, தில்லியில் தில்லி தமிழ்ச்சங்கப் பள்ளி! ஆனால் அவருக்கு வேறு ஊர்/மாநிலம் மாற்றல் வந்தால் அவர் மட்டும் போகணும். குழந்தைகள் படிப்பை உத்தேசித்து நான் அந்த ஊரிலேயே தொடர்ந்து இருந்திருக்கணும். ஆனால் நாங்க அதை விரும்பவில்லை என்பதாலேயே கேந்திரிய வித்யாலயாவில் சேர்த்தோம். வருஷம் நடுவில் மாற்றல் ஆகி வந்து கூடக் குழந்தைகளைச் சேர்க்கலாம். பிரச்னை இருக்காது. உலகத்தரத்தோடு போட்டி போடத் தக்கபடி குழந்தைகளை உருவாக்கும். இப்போ முன்னை மாதிரி இல்லை என ஒரு சாரார் கருத்து. எங்களுக்கும் இப்போதைய மாணாக்கர்களின் பாடத்திட்டம் பற்றி எதுவும் தெரியாது.
Deleteசமையலில் சிறு மாறுதல்கள் சுவையில் வித்தியாசங்களை ஏற்படுத்தும் என்பதை அறிவேன். காத்திருக்கிறேன்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்..
Delete