எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, January 25, 2016

உணவே மருந்து! --மிளகு தொடர்ச்சி!

சுமார் நான்கு அல்லது ஐந்து மீட்டர் உயரம் வரை மிளகுக் கொடிகள் வளரும்.படரும் கொடி வகையைச் சேர்ந்தது இது. ஊட்டி போன்ற மலை வாசஸ்தலங்களில் இவை பாக்கு மரங்களைச் சுற்றிப்படர்ந்து காணப்படும். எனினும் தரையிலும் வளரும் கொடி வகை இது.  இலைகள் வெற்றிலை போல் காணப்படுமாதலால் இதற்கும் வெற்றிலைக்கொடிக்கும் வேறுபாடு தெரியாது.  இலைகள் வெற்றிலையை விடக் கொஞ்சம் நீள, அகலமாகக் காணப்படும். மலர்கள் மலர்க்காம்பில் பூக்கும். காம்பு ஊசியைப் போல் காட்சி அளிக்கும். மலரில் காய்கள் தோன்றுகையில் சுமார் பதினைந்து சென்டி மீட்டருக்கு வளர்ந்து இருக்கும். ஒரு சரத்தில் சுமார் 20 முதல் 25 அல்லது முப்பது வரை காய்கள் இருக்கும். பச்சை மிளகைப் பதப்படுத்தி எலுமிச்சைச்சாறு உப்பு சேர்த்து மிளகு ஊறுகாய் போடுவார்கள். பழம் முற்றியதும் பறித்து வெயிலில் காய வைத்தால் நாம் அன்றாடச் சமையலுக்குப் பயன்படுத்தும் மிளகாகி விடும்.

மிளகுப்பயிருக்கு மழைப்பொழிவு, வெப்பம், நிழல் அனைத்துமே சீரான அளவில் தேவைப்படும். தென்னிந்தியாவில் கேரளம், குடகு மலைப் பிராந்தியங்கள், மற்றும் தமிழ்நாட்டில் அதிகம் பயிராகிறது. மிளகு பயிரிடும் முறை இந்தியாவிலிருந்தே மற்ற நாடுகளுக்குப் பரவியது. மிளகுக் கொடிக்கு மிதமான ஈரப்பதம் தேவை. கொடியின் தண்டுப் பகுதியை வெட்டி 40, 50 சென்டிமீட்டரில் துண்டுகளாக்கி நடுவதன் மூலம் இது பயிராகிறது. பொதுவாகவே பெரிய மரங்களின் அருகாமையில் இது பயிராக்கப்படுகிறது. பின்னால் கொடி படரவும் மரங்கள் துணை செய்யும். மூன்று ஆண்டுகள் மிகக் கவனமுடன் வளர்க்கப்படும் இந்தக் கொடிகள் நான்காம் ஆண்டிலிருந்து பலன் கொடுக்க ஆரம்பித்து அதன் பின்னர் மூன்று நான்கு ஆண்டுகள் பலன் தரும். ஒவ்வொரு காம்பிலும் 20 அல்லது 30 பழங்கள் இருக்கும். இவை சிவப்பாகிப் பழுத்தவுடன் பறித்துக் காய வைப்பார்கள்.  இது வேறு வால் மிளகு வேறு. வால் மிளகுக்கு நுனியில் வாலைப் போல் சிறிதாகக் காணப்படும். இதுவும் மருத்துவ குணம் கொண்டதே! மூலிகைக் கொடியில் காய்க்கும்.
Image result for மிளகு
கருமிளகு என்பது நாம் அன்றாடம் பயன்படுத்துவது ஆகும்.  அநேகமாகப் பழுக்காத சிறு மிளகுக்காய்களைப் பறித்து வெந்நீரில் ஊறவைத்துப் பின்னர் உலர வைத்து இவை பதப்படுத்தப்படுகின்றன.  பழுத்த மிளகுப் பழங்களை ஒரு வாரம் போல் நீரில் ஊற வைத்துப் பழத்தின் சதை அழுகியதும் அதை அகற்றிவிட்டு விதைகளை  அலசி உலர்த்தி வெண் மிளகாக விற்பனைக்கு வருகின்றன. பச்சை மிளகு பழுக்காத சிறு மிளகுக்காய்களை உலர வைத்துப் பச்சை நிறத்தைத் தக்க வைக்கக் கந்தக டை ஆக்சைடு அல்லது வினிகருடன் கலந்து ஊற வைத்துப்பதப்படுத்தப்படுகிறது.  பழுத்த மிளகுப் பழங்கள் வினிகரில் ஊற வைக்கப்பட்டால் சிவப்பு நிறம் பெறும். மற்றும் பல வேதியியல் பொருட்களைச் சேர்த்தும் சிவப்பு மிளகு தயாராகிறது.
Image result for மிளகு

படங்களுக்கு நன்றி தினமலர் தினசரி கூகிளார் வாயிலாக


மிளகு சித்த வைத்திய முறையிலும், பாட்டி வைத்தியத்திலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சுக்கு, மல்லிக் காஃபி தயாரிப்பில் மிளகு முக்கியத்துவம் பெறுகிறது. மிளகு சிறந்த நச்சு முறிவு மேலும், சளி, கோழையை அகற்றும். வயிற்றிலுள்ள வாயுவை அகற்றும். வீக்கத்தைக் கரைக்கும். சுரத்தை அகற்றும். உணவிலுள்ள நச்சுத்தன்மையை அகற்றி உணவை ஜீரணிக்க வைக்கும் தன்மை கொண்டது.

இனி மிளகு சமையல் குறிப்புகள் அடுத்த பதிவில் தொடரும்!

11 comments:

  1. Replies
    1. மேட்டுப்பாளையம், ஊட்டியில் நிறையப் பார்க்கலாம். இப்போவும் இருக்கானு தெரியலை.

      Delete
  2. Replies
    1. வரவுக்கு நன்றி டிடி.

      Delete
  3. நம் ஊர் சீதோஷ்ணத்துக்கு வீட்டுத் தோட்டத்தில் மிளகு வராது போலும். பச்சை மிளகு ஊறுகாய் ரொம்பவும் இஷ்டம்!

    ReplyDelete
    Replies
    1. வராது. கொஞ்சம் மிதமான சீதோஷ்ணம் இருக்கணும். பச்சை மிளகு மாம்பலத்தில் கிடைக்கும்.

      Delete
    2. மாம்பலத்திலேருந்து அவ்வப்போது வாங்கியிருக்கிறேன்!

      Delete
  4. மிளகு கொடி படங்களும் தகவல்களும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete