எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, January 24, 2016

உணவே மருந்து-- சில முக்கியப் பகிர்வுகள்!

இன்று ஶ்ரீரங்கம் மேலச் சித்திரை வீதியில் அம்பத்தூர் நண்பர்கள் ஒருத்தர் வீட்டு சீமந்தத்துக்குச் சென்றிருந்தேன். பெண்ணின் புகுந்த இடம் ஶ்ரீரங்கம். மிக அருமையாக சீமந்தம் நடந்ததோடு கடைசியில் மணமக்களை வாழ்த்தி வீணை வாசித்துப் பாசுரங்கள் பாடி மங்களம் பாடி அனைவரையும் மகிழ்வித்தும் தம்பதிகளையும் வாழ்த்தியும் முடித்தனர். இதற்கு முன்னாலும் வைணவர்கள் வீட்டு சீமந்தங்களில் கலந்து கொண்டிருந்தாலும் இம்மாதிரிப் பார்த்தது இல்லை.

அதோடு சாப்பாடும் அருமையான ருசியோடு தயாரிக்கப்பட்டிருந்ததோடு அல்லாமல் பரிமாறுபவர்களும் கேட்டுக் கேட்டுப் பரிவோடு பரிமாறினார்கள். ஒரு சில கல்யாணங்களில் சாம்பார் சாப்பிடும்போதே பக்கத்தில் உள்ளவர் ரசத்துக்கு வந்தால் நமக்கும் அதிலேயே சாதத்தைப் போட்டு ரசத்தையும் மேலேயே ஊற்றிவிட்டுப் போவார்கள். அப்படி இல்லாமல் சாம்பார் சாப்பிட்டு முடித்ததும், சாதம் கேட்டுவிட்டுச் சாற்றமுது சாதிக்கலாமா எனக் கேட்டுவிட்டே பரிமாறினார்கள். ரசம் சாப்பிட்டதும் திருக்கண்ணமுது நான் சாப்பிடும்போது பக்கத்தில் ரங்க்ஸ் மோர் சாப்பிட்டார். பரிமாறுபவர் அவருக்கு மோரைப் பரிமாறிவிட்டு அங்கேயே நின்று நான் திருக்கண்ணமுது சாப்பிட்டு முடித்து மோர் பரிமாறலாம் என்றதுமே மோர் பரிமாறினார்.


 சில மாதங்கள் முன்னர் சொந்தக்காரங்க வீட்டு விசேஷங்களில் சாப்பிட்டபோது சமையல் ஒப்பந்தம் எடுத்துச் செய்தவரும் தெரிந்தவரே எனினும்,  ரசம் சாப்பிட்டுக்கொண்டிருக்கையிலேயே மோருக்கு சாதத்தைத் தள்ளிவிட்டு அதன் மேல் மோரையும் ஊற்றிவிட்டுச் சென்றனர்.   கூட்டாஞ்சோறு சாப்பிடுவதை விட மோசமாக இருக்கும். ரொம்பவே மனதுக்கு வேதனையாக இருந்தது. இங்கே அப்படி நடக்கவில்லை.  சாப்பாடு வயிற்றுக்கு மட்டுமில்லாமல் மனதுக்கும் நிறைவாக இருந்தது.  இத்தனைக்கும் வீட்டு மனிதர்கள் யாரும் அங்கே வந்து நின்று கொண்டு பந்தி விசாரணையோ மேற்பார்வையோ பார்க்கவில்லை. எனினும் நல்ல முறையில் விருந்தினர்களை நடத்திய அந்தச் சமையல்காரரின் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள். இதை இங்கே எழுதக் காரணமே சாப்பிட வாங்க என்று சொல்லிவிட்டு எப்படிப் பரிமாறுவது என்பதையும் சொல்லவேண்டும் என்ற காரணமே!


8 comments:

  1. நீங்கள் சொல்வதும் சரி தான்... அவர்களுக்கு என்ன அவசரமோ...?

    இருந்தாலும் அதிலும் ஒரு சுவை உண்டு...

    ReplyDelete
    Replies
    1. அவங்களுக்குச் சீக்கிரம் இந்தப் பந்தி முடிஞ்சு அடுத்த பந்தி ஆரம்பிக்கணும், அதான்! :) மற்றபடி எனக்கு என்னமோ இப்படிச் சாப்பிடுவதில் அசௌகரியமாகத் தெரியும். :)

      Delete
  2. இந்த உபசரிப்புதான் மிக முக்கியம் இல்லையா கீதா.

    சாப்பிடாமலியே வயிறு ரொம்பிடும். அந்தக் குடும்பத்துக்கும், உணவு ஏறபாடு செய்தவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வல்லி, மனிதர்கள் அடுத்த மனிதர்களைப் புரிந்து கொள்ளுதல் என்பது ரொம்பவே முக்கியம் இல்லையா? அதான் இங்கே! :)

      Delete
  3. பந்தி உபசாரம் மிகவும் முக்கிய விஷயம். பல திருமணங்களில் இப்போது இது இல்லை. விரட்டி விரட்டி அடுத்த பந்தி போட்டு முடிக்கத் தான் நினைக்கிறார்கள்... :(

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பந்தி உபசரணை என்பதே இந்தக்காலத்தில் அரிதான ஒன்றாகப் போய்விட்டது! :(

      Delete
  4. நீங்கள் யார் அந்த பரிசாரகர் குழு என்பதைக் கேட்டு எழுதியிருக்கக்கூடாதோ? இது நிறைய பேருக்கு உபயோகமாக இருக்குமே... சீக்கிரம் அந்த amendmentஐ எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. கேட்கலாம், ஆனால் சீமந்தம் நடந்ததும் ஶ்ரீவைணவப் பெண்ணுக்கு, நடத்தியவர்கள், பரிசாரகர் குழு அனைவரும் ஶ்ரீவைணவர்கள். மத்தவங்களுக்குச் செய்வாங்களானு தெரியலை. இங்கே பலரும் ஒத்துக்கறதில்லை! :)

      Delete