எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, January 24, 2016

உணவே மருந்து--- மிளகு

மிளகு எப்போது என்று தெரியாத காலத்தில் இருந்தே நம் நாட்டில் உணவில் காரம் சேர்ப்பதற்குப் பயன்பட்டு வருகிறது. மிளகாய் வெளிநாட்டில் இருந்து வந்த காரணத்தால் இப்போதும் மிகவும் ஆசாரம் பார்ப்பவர்கள் மிளகாயை உணவில் சேர்ப்பதில்லை. மிளகாயை உணவில் சேர்ப்பவர்கள் கூட விசேஷ நாட்கள், பண்டிகைகள், சிராத்தம் போன்ற தினங்களில் மிளகாய் சேர்க்க மாட்டார்கள்.  தமிழ்நாட்டில்  பெருமாள் கோயில்களில் புளியோதரை தயாரிக்க மிளகையே பயன்படுத்துகிறார்கள். கோயிலில் வெளியே பிரசாதக்கடைகளில் விற்கும் புளியோதரை அல்ல!  கோயிலில் கோஷ்டி நடைபெறும்போது தருவார்களே அந்தப் புளியோதரை! அதான் ஒரிஜினல் பிரசாதம்! :)
Image result for மிளகு

படத்துக்கு நன்றி கூகிளார்

கேரளம் நீண்ட நெடுங்காலமாக மிளகை வணிகத்தில் பயன்படுத்தி வருகிறது.  ஒரு கால கட்டத்தில் பணத்துக்குப் பதிலாக மிளகைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ஏற்றுமதியில் மிளகு சிறந்த லாபத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது; அது இன்னமும் தொடர்கிறது. தென்னிந்தியத் தட்பவெப்ப நிலை மிளகுக் கொடி வளர்ந்து படருவதற்கு ஏற்றதாக அமைந்திருப்பதால் தென்னிந்தியாவிலேயே மிளகு அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்தியாவிலிருந்தே மிளகு, ஏலக்காய், கிராம்பு போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததால் உலகின் வர்த்தகத்தையே ஒரு காலத்தில் அது மாற்றி அமைத்தது என்றால் மிகை இல்லை.  ஏனெனில் லண்டனில் மிளகின் விலை ஐந்து ஷில்லிங் ஏறியதால் தான் வர்த்தகம் செய்யக் கிழக்கிந்தியக் கம்பெனி துவங்கப்பட்டு இந்தியாவுக்கு வாணிகம் செய்ய வந்து ஆளவும் தொடங்கினர். ஆகையால் உலகின் வரலாற்றை முக்கியமாய் இந்தியாவின் வரலாற்றை மாற்றி அமைத்ததில் மிளகின் பங்கு முக்கியமானது.

ஐரோப்பியக் குடும்பங்களில் திருமணத்தின்போது பெண்ணிற்கு மிளகைச் சீதனமாகக் கொடுக்கும் மரபு இருந்து வந்ததாகவும், அதன் மூலம் அந்தப் பெண்ணின் செல்வச் செழிப்பை எடை போட்டதாகவும் கூறுகின்றனர். நறுமணப் பொருட்களின் தேவையும் ஐரோப்பிய நாடுகளில் அதிகம் இருந்து வந்தது. ஆகவே இந்தியாவில் அதன் உற்பத்தி அதிகம் என்பதால் இந்தியாவுக்கான கடல் வழி வாணிகத்திற்கென முயன்று கடல்வழியைக் கண்டுபிடித்தனர். இதன் மூலமே இந்தியாவை ஆளவும், அமெரிக்கக் கண்டங்கள் கண்டு பிடிக்கவும் வகை செய்தது.

கிறிஸ்துவுக்கு முன்னர் எகிப்து, கிரேக்கம் போன்ற நாடுகளில் பெரும் செல்வந்தர்களும், மன்னர்களும் மட்டுமே மிளகைப் பயன்படுத்தி இருக்கின்றனர். மிளகுக்குப் பெருமளவு தட்டுப்பாடும் அப்போது இருந்து வந்திருக்கிறது. அரபிக்கடலோரமாக நீர் மார்க்கவழியிலும், நில மார்க்க வழியிலும் குறைந்த அளவு மிளகே ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. எகிப்தும் உரோமாபுரிப் பேரரசும் இணைந்த பின்னர் கேரளத்திலிருந்து ஐரோப்பாவுக்குக் கடல் வழி வாணிகம் கப்பல்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. பருவக்காற்று வீசும் காலங்களில் சுமார் 120 கப்பல்கள் வரை இங்கே வந்துள்ளன. மிளகைத் தவிர மற்ற நறுமணப் பொருட்களும், முத்து, வைரம் போன்றவையும் மத்திய ஆசியாவுக்குச் செங்கடல் வரை கொண்டு செல்லப்பட்டுப் பின்னர் நில வழியாகவும், நைல் நதியின் கால்வாய்கள் மூலம் நீர் வழியாகவும் மத்திய தரைக் கடல் வரை எடுத்துச் செல்லப்பட்டுப் பின்னர் கப்பல் மூலம் கடல் மார்க்கமாக ரோமாபுரிக்குச் சென்றதாக அறிகிறோம்.  இனி மிளகுச் செடியின் வரலாறும் அதன் பயன்களும் குறித்து அடுத்து அறிவோம்.

மிளகு பற்றிய வரலாறு தொடரும்!



13 comments:

  1. Replies
    1. வாங்க டிடி, மிளகு வரலாறும் தொடரும்! :)

      Delete
  2. மிளகு பற்றிய வரலாறு அருமை!

    ReplyDelete
  3. உள்ளமெல்லா மிளகாயோ உன் பேரும் சுரைக்காயோ ?
    என்ற கண்ணதாசனின் பாடலில்,

    இருப்பது மிளகா மிளகாயா !!
    அந்தப் பாடலின் ஒவ்வொரு அடியில் இருக்கும் வார்த்தைகளையும் பதம் பிரித்து சொல்வர்.
    உள்ளமெல்லாம் இளகாயோ என்று அந்தப் பதங்களைப் பிரிக்கும்போது,
    நினைவுக்கு வந்தது.

    மிளகாய் ஆண்டி இன்ப்ள மேடரி. (வீக்கத்தைத் தணிக்கும் சக்தி உண்டு ) வோலினி போன்ற மருந்துகளில் காப்சிகம் இருப்பதைக் காணலாம்.

    மிளகு ஆண்டி பயாடிக் . ஆண்டி பைரடிக் . கிருமிகளைக் கொல்லும் திறனும் சுரத்தைக் குறைக்கும் திறனும் கொண்டது.

    எங்கள் வூட்டுக் கிழவி சாம்பாரில், சாம்பார் பொடி ( வத்தல் மிளகாய் கொண்டது ) போட்டுவிட்டு, கடைசியில் கொஞ்சம் மிளகு தூளையும் போடுவாள்.

    ஸோ , எங்க வூட்டு சாம்பார் காரம், குணம் எல்லாம் கொண்டது.
    அவளைப் போலவே.

    இந்த கமெண்டில் இருக்கும் ஜால்ரா சத்தம் கேட்கிறதா !!

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஜால்ரா சத்தம் பலமாகக் கேட்டுத் தான் என்னை எழுப்பி விட்டது! :) நான் சாம்பார்ப் பொடி அரைச்சாலும் சரி, அரைச்சு விட்ட சாம்பார் என்றாலும் சரி அரை டீஸ்பூன் மிளகு சேர்த்து வறுத்து அரைப்பேன். :)

      Delete
    2. சாம்பார்ப் பொடினு தயார் செய்யறது இல்லை. ரசப்பொடி தான். அதிலே கால் கிலோ மி.வத்தல் எனில் 50 கிராமிலிருந்து 100 கிராமுக்குள் மிளகு சேர்ப்பேன். :)

      Delete
  4. மிளகு பற்றிய தகவல்கள் நன்று....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க! நல்வரவு.

      Delete
  5. சுப்புத்தாத்தா-- உங்களுக்கு பாட்டு மறக்கலாமா? "ஒவ்வொரு பேச் சுரைக்காயா" (பேச்சு உரைக்காயோ.. பேய்ச் சுரைக்காயோ)

    அப்படியே.. மிளகில் பண்ணும் உணவின் சமையல் குறிப்பைச் சிறிதாகக் கொடுத்திருக்கலாம்.. தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. இன்னும் மிளகு புராணம் முடியலை நெல்லைத் தமிழன்! ஆகவே சமையல் குறிப்பும் வரும். :)

      Delete
  6. "பகைவன் வீடு சென்றால் பத்து மிளகோடு போ" என்பதே மிளகின் பெருமையை உணர்த்தும்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நானும் கேட்டிருக்கேன். :)

      Delete