எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, September 29, 2014

நவராத்திரிச் சுண்டல் வகைகள்! பச்சைப் பட்டாணிச் சுண்டல் 4

சாதாரணமாகப் பச்சைப் பட்டாணி ஊற வைத்து வேக வைத்தால் நன்கு குழைந்து விடும்.  ஆனால் இங்கே திருச்சியில் அவ்வளவு குழைவது இல்லை. இத்தனைக்கும் முதல் நாள் மதியமே ஊற வைக்கிறேன்.  கல்லுப் பட்டாணியை எல்லாம் அகற்றி விடுகிறேன்.  ஆனாலும் திருப்தி இருப்பது இல்லை.


பச்சைப்பட்டாணி கால் கிலோ

தாளிக்க எண்ணெய்  இரண்டு டீ ஸ்பூன்

கடுகு

பச்சை மிளகாய் இரண்டு

இஞ்சி ஒரு துண்டு

தேங்காய்ப்பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது தேங்காய்த் துருவல் அவரவர் விருப்பம் போல்

மாங்காய் கிடைத்தால் பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன்

கருகப்பிலை

கொத்துமல்லி

தேவையான உப்பு

பெருங்காயம்

சாம்பார்ப் பொடி ஒன்றிலிருந்து இரண்டு டீஸ்பூன் வரை(காரம் அவரவர் தேவைக்கு ஏற்ப)


பட்டாணியை முதல் நாளே நன்கு களைந்து கல்லுப் பட்டாணிகளை அகற்றி நன்கு நீர் ஊற்றி ஊற வைக்கவும்.  மறுநாள் காலையிலிருந்து மீண்டும் மீண்டும் களைந்து நீரை மாற்றிக் கொண்டிருக்கவும். பின்னர் குக்கரில் அல்லது ப்ரஷர் பானில் உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்ததும் பச்சை மிளகாய்ப் பொடியாக நறுக்கியது, இஞ்சி பொடியாக நறுக்கியது, கருகப்பிலை, பெருங்காயம் ஒவ்வொன்றாகச் சேர்க்கவும்.  வெந்த பட்டாணியை நீரை வடித்துவிட்டுச் சேர்க்கவும்.  சாம்பார்ப் பொடியைச் சேர்த்து நன்கு கலக்கும்படி கிளறவும்.  நன்கு கிளறி சாம்பார்ப் பொடி வாசனை போனதும், நறுக்கி வைத்த தேங்காய், மாங்காயைச் சேர்க்கவும்.  பச்சைக் கொத்துமல்லியைத் தூவிக் கீழே இறக்கவும்.  சுண்டல் விநியோகத்துக்குத் தயார்.4 comments:

 1. இப்போ எல்லாம் பதிவுடன் படத்தை உடனுக்குடன் இணைத்து விடுகிறீர்கள் போலவே....!

  சுண்டல் சுவையாய் இருக்கிறது. :)))

  ReplyDelete
  Replies
  1. சுண்டலில் நான் ரொம்பவே பிரபலமாக்கும்! நம்ம சுண்டல் சுவை ஊருக்கே தெரிந்தது!

   Delete
 2. பார்க்கவே சுவை. சாம்பார்ப்பொடி வாசனையோடு நன்றாக வந்திருக்கும்ம்ம்ம்ம்ம். தான்க்ஸ் கீதா,.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, சுண்டை சுவை நன்றாக இருந்ததா?

   Delete