தோசையம்மா தோசை,
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு ஐந்து
அம்மாவுக்கு நாலு
அண்ணனுக்கு மூணு
அக்காவுக்கு ரெண்டு
பாப்பாவுக்கு ஒண்ணு
திங்கத் திங்க ஆசை
திரும்பக் கேட்டால் பூசை!
தோசைக்கு மயங்காதவர்கள் உண்டோ? எங்க வீட்டிலே வாரம் ஏழு நாட்கள் தோசை இருந்தாலும் அலுக்காது. இந்த தோசையை வெறும் அரிசி மாவு, உளுந்து மாவு தோசைனு செய்யாமல் கேழ்வரகு தோசை, தக்காளி தோசை, ரவா தோசை, கோதுமை தோசைனு விதம் விதமாய்ச் செய்யலாம். முதல்லே தக்காளி தோசையைப் பார்ப்போமா?
தக்காளி தோசை:
தேவையான பொருட்கள்:
அரிசி இரண்டு கிண்ணம்
உளுந்து அரைக்கிண்ணம்
து.பருப்பு அரைக்கிண்ணம்
தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்,
தக்காளி பெரிதாக இருந்தால் மூன்று, நிதானமான நடுத்தர அளவுக்கு 4
பச்சை மிளகாய் நான்கு அல்லது ஐந்து(அவரவர் காரத்துக்கு ஏற்றாற்போல் கூடவோ, குறைவாகவோ போடலாம்.)
இஞ்சி ஒரு சின்னத் துண்டு.
மிளகு, சீரகம் (ஊற வைத்து அரைக்கையில் சேர்க்கவும்) வகைக்கு ஒரு டீஸ்பூன்.
கொத்துமல்லி, கருகப்பிலை
சமையல் எண்ணெய் ஒரு சின்னக் கிண்ணம்
அரிசி, பருப்பு வகைகளை நன்கு களைந்து கொண்டு சுமார் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டர் அல்லது மிக்சி ஜாரில் அரிசி, பருப்பு வகைகளைப் போட்டுப் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, ஜீரகம், தேங்காய்த் துருவல் போட்டுக் கொஞ்சம் அரைக்கவும். ஒன்றிரண்டாக அரைபட்டதும் தக்காளியைத் தோல் நீக்கிச் சேர்க்கவும். தோல் நீக்க வெந்நீரில் ஊற வைக்கவும். தக்காளியைப் போட்டு நீர் விடாமல் நன்கு அரைக்கவும். நல்ல நைசாகவே அரைக்கலாம். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, கருகப்பிலை, கொத்துமல்லி நறுக்கிச் சேர்க்கவும்.
பின்னர் அடுப்பில் தோசைக்கல்லைப் போட்டு மாவு ரொம்பக் கெட்டியாக இருந்தால் தேவையான நீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். தோசையாக ஊற்றவும். எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும். இருபக்கமும் நன்கு வெந்ததும். சூடாக இருக்கையிலேயே சாம்பார் அல்லது தேங்காய்ச் சட்னி, கொத்துமல்லிச் சட்னியுடன் பரிமாறவும்

நீங்கள் சொல்வது பச்சரிசி தானே மேடம்.
ReplyDeleteபுளிக்க வைக்க வேண்டியதில்லையா? அரைத்த உடனேயே தோசை ஊற்றலாமா?
பச்சரிசியிலும் செய்யலாம். புழுங்கலரிசி, பச்சரிசி சமமாய்க் கலந்தும் செய்யலாம். அரைத்த உடனே தோசை ஊற்றலாம். :)
Deleteஇதோ வந்துட்டேன் அம்மா... ஹிஹி...
ReplyDeleteசெய்முறை குறிப்பிற்கு நன்றி...
வாங்க டிடி, நன்றிக்கு நன்றி. :)
Deleteகொஞ்சமாகத்தான் அரைக்கவேண்டும், இல்லையா? உடனே செலவு செய்து விட வேண்டும். வைத்திருக்க முடியாது இல்லை?
ReplyDeleteஆமாம், ஶ்ரீராம், உடனே செலவு செய்துவிட வேண்டும். இதோடு சின்ன வெங்காயத்தை உரித்து ஒன்றிரண்டாக அரைத்தும் தோசை வார்க்கலாம். :))))
DeleteTF
ReplyDeleteநீங்க எழுதற சமையல் குறிப்புகளோட ஸ்பெஷாலிட்டியே உடனே செஞ்சு பாக்கணுன்னு தோண்றது தான். நிச்சயம் ட்ரை பண்ணுவேன். பச்சரிசின்னாலும் மூன்று மணி நேரம் ஊற வைக்கணுமா அம்மா!!..
ReplyDeleteகொஞ்சம் ஊறினால் தான் தோசை நன்றாக வார்க்க வரும் பார்வதி. :)))) அடைக்குக் கூட நான் ஊற வைத்தே அரைப்பேன். :))) எண்ணெய் கொஞ்சமாகவும் செலவாகும். :)
Deleteதோசைன்னவுடனே வந்துட்டேன்... ஏன்னா என் பொண்ணுக்கு தோசை... தோசைன்னு மூணு வேளையும் போட்டால் கூட அதையே தின்பாள்.. ஸ்கூலுக்கும் அதையே கேட்பா. சரி.. சரி இந்த தக்காளி தோசையையும் ட்ரை பண்றேன்..........
ReplyDeleteபண்ணிட்டு எப்படி வந்ததுனு சொல்லுங்க உஷா அன்பரசு. உங்க கதை தினமலரில் பரிசு பெற்றதுக்கு வாழ்த்துகள்.
Deleteதக்காளி தோசை பிரமாதமாக இருக்கிறது...
ReplyDeleteநானும் இதை செய்வதுண்டு... முன்பு எழுதியும் இருக்கேன்..
http://www.kovai2delhi.blogspot.in/2011/12/blog-post.html
வாங்க ஆதி, வந்து பார்க்கிறேன். நன்றி.
Deleteதக்காளி தோசையா .... ஓகே. முன்னர் செய்ததுண்டு.... திரும்ப செய்துடலாம்!
ReplyDeleteசெய்ங்க, செய்ங்க, போரடிச்சால் பின்னே என்ன செய்யறதாம்? :))))
Delete