இப்போ ஒரு அவசரப் பதிவு. நேத்திக்கு எங்க வீட்டு மெனு மிளகு குழம்பு, பருப்புத் துவையல், ஜீரகம், மிளகு உடைத்துப் போட்ட ரசம்னு ஜி+லே பகிர்ந்திருந்தேனா! புவனா கணேசன் என்ற சிநேகிதி மிளகு குழம்பும், பருப்புத் துவையலும் சாப்பிட்டதில்லை என்ரு சொல்லி இருந்தார். செய்முறை தரேன்னு சொல்லி இருந்தேன். இங்கே மிளகு குழம்பின் செய்முறை!
நான்கு பேர்களுக்கு!
புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு
வறுக்க
மிளகாய் வற்றல், நான்கு அல்லது ஐந்து
மிளகு ஒரு டேபிள் ஸ்பூன்(மிளகு காரம் தூக்கலாக இருந்தாலே நன்றாக இருக்கும். வேண்டாம் என்பவர்கள் குறைத்துக் கொள்ளலாம்.)
பெருங்காயம் ஒரு துண்டு
மஞ்சள் தூள் அல்லது விரலி மஞ்சள் ஒரு துண்டு(மஞ்சள் எனில் எண்ணெயில் வறுத்துக்கலாம்)
உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
கருகப்பிலை ஒரு கைப்பிடி
உப்பு தேவையான அளவு
தாளிக்க, வறுக்க நல்லெண்ணெய் இருந்தால் நல்லது. ஒரு சின்னக் கிண்ணம் எண்ணெய்.
தாளிக்கக் கடுகு மட்டும்
மிளகு குழம்பில் ஜீரகம் வைக்க வேண்டாம். மிளகு காரத்தை அமுக்கிவிடும். ஆகவே முதலில் புளியை(கறுப்புப் புளியாக இருந்தால் நல்லது. பிடிக்காதவர்கள் கறுப்பில்லாப் புளியும் பயன்படுத்தலாம்.) வெறும் வாணலியில் அல்லது கரி அடுப்பு இருந்தால் கரி அடுப்பில் சுட்டு விட்டு நீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். கரைத்த ஜலம் மூன்று கிண்ணம் வரை இருக்கலாம். இதைத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் விடவும். மிளகாய் வற்றல், பெருங்காயம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். உளுத்தம்பருப்பையும் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் மிளகைப் போடவும். மிளகு வெடிக்கும் வரை அடுப்பில் வைத்து வெடிக்க ஆரம்பித்ததும் எடுத்து வைக்கவும். பின்னர் மஞ்சள் துண்டாக இருந்தால் எண்ணெயில் போட்டு வறுக்கவும். மஞ்சள் பொடி எனில் அரைக்கையில் மிக்சி ஜாரில் போட்டுக்கலாம். கருகப்பிலையையும் மிச்சம் எண்ணெயில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
வதக்கிய பொருட்கள் ஆறியதும் அவற்றை மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும். புளி ஜலத்தில் மஞ்சள் பொடியைச் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் அதே வாணலி அல்லது கல்சட்டியைக் காய வைத்துக் கொண்டு மிச்சம் இருக்கும் எண்ணெயை ஊற்றவும். கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கலந்த புளிக்கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும். உப்புச் சேர்க்கவும். கரண்டியால் நன்கு கலக்கிவிட்டுக் கொதிக்க விடவும். நன்கு கொதித்துச் சேறு போல் ஆகும்போது எண்ணெயும் பிரிந்து வர ஆரம்பிக்கும். அப்போது கீழே இறக்கவும். கல்சட்டி எனில் துணியைப் பிடித்துத் தான் இறக்க வேண்டும். இடுக்கியால் பிடித்தால் கல்சட்டி உடைந்து வரும். :)
இதோடு சேர்த்துச் சாப்பிடத் தான் பருப்புத் துவையல்
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு ஒரு சின்னக் கிண்ணம்,
மிளகாய் வற்றல் நான்கு
பெருங்காயம் ஒரு துண்டு
உப்பு தேவைக்கு
புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு(ஊற வைத்துக் கொள்ளவும்)
தேங்காய்த் துருவல் (தேவையானால்) ஒரு டேபிள் ஸ்பூன்
வறுக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்
தாளிக்கக் கடுகு ஒரு டீஸ்பூன்
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மிளகாய் வற்றல், பெருங்காயம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். துவரம்பருப்பையும் களைந்து போட்டுச் சிவக்க வறுக்கவும். அதை எடுத்ததும் அந்த வாணலியின் மிச்ச எண்ணெயிலேயே தேங்காய்த் துருவலையும் போட்டு வறுக்கவும். நன்கு ஆற விடவும். ஆறிய பொருட்களை உப்பும் ஊற வைத்த புளியையும் சேர்த்துக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நன்கு நைசாக அரைக்கவும். வெளியே எடுத்துக் கடுகு தாளிக்கவும். தேங்காய்த் துருவல் இல்லாமலும் பருப்புத் துவையல் பண்ணலாம்.

இது ரெண்டுமே எங்க அம்மாவோட ஸ்பெஷல்! சுவையானது, ஆரோக்கியமானது, சுகமானது.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், இதுக்கு எக்கச்சக்க வரவேற்புனு ஹிட் லிஸ்டும் சொல்லுது. :))))
Deleteநன்றி அம்மா...
ReplyDeleteநன்றி டிடி.
Deleteபடிக்கும் போதே சாப்பிடத் தூண்டுகிற பதிவு.
ReplyDeleteநன்றி ராஜலக்ஷ்மி.
Deleteஅம்மா, ஆதி இரண்டு பேருமே செய்வார்கள். இரண்டுமே நன்றாக இருக்கும்! :)
ReplyDeleteநன்றி வெங்கட்.
Deleteஇது என்னுடைய விருப்ப உணவு பட்டியல்ல ஒன்னு. தேங்கி கீதாம்மா
ReplyDeleteவாங்க விக்னேஷ், இங்கே வந்தது எப்படி??? :)
Deleteபருப்புத் துவையல் ஏற்கனவே எழுதியிருக்கீங்க. இன்னொரு லேப்டாப்ல புக்மார்க் செஞ்சு வச்ச நினைவு.
ReplyDelete(ஹிஹி... அப்பப்போ செஞ்சு சாப்பிட்டிருக்கேன்.. ரெசிப்பி சரிதான்.. செஞ்சவங்க பேர்ல தான் பிசகு.)
பருப்புத் துவையல் ஏற்கெனவே எழுதி இருக்கேன் தான். :))) இரண்டு அல்லது மூன்று முறைகளில் செய்யலாம். இதைச் செய்த முறையை இங்கே குறிப்பிட்டேன். :)))))
Deleteசுவையான குறிப்பு.. என் மாமியார் இந்த குழம்பிலேயே மாங்கொட்டையும் போடுவார்...:) அருமையாக இருக்கும்...
ReplyDeleteஅது தனி ஆதி. அதோடு சின்ன வெங்காயம், பூண்டு வதக்கிக் கூட மிளகு குழம்பில் சேர்ப்பார்கள். :))))
Deleteஇன்னைக்கு பண்ணி சாப்ப்ட்டாச்ச்.. சூப்பார் ருசி!!.. தாங்க்ஸ் கீதாம்மா..
ReplyDeleteநன்றி பார்வதி.
Deleteகுளிருக்கு இரண்டுமே நல்லாத்தான் இருக்கும்...
ReplyDeleteஆமாம், இங்கே நல்ல குளிர் இருக்கு! அதுக்கு நல்லாத் தான் இருக்கும். :)
Deleteசூப்பர் பகிர்வு.எனக்கு இரண்டுமே பிடிக்கும்.
ReplyDeleteநன்றி ஆசியா உமர். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Delete