ஹிஹிஹி, பாதாம்பருப்பு என்றாலே ஶ்ரீராம் நினைவில் வரார். :)) முன்னொரு தரம் பாதாம் அல்வா பண்ணினதை எழுதி இருந்தப்போ அவர் டிஃபனுக்கு பாதாம் அல்வா கேட்டது குறித்துச் சொல்லி இருந்தார். முந்தாநாள் கிருஷ்ணனுக்கும் பாதாம், முந்திரி போட்டுப் பாயசம் பண்ணினேன். மத்தவங்க எப்படிப் பண்ணுவாங்களோ தெரியலை. நாம தான் எல்லாத்திலேயும் தனி ஆச்சே! இங்கே நம் செய்முறை கொடுக்கிறேன். ரொம்பவே சுலபம் தான்.
நான்கு பேருக்குப் பாயசம் செய்ய:
பால் 250 கிராம்
பச்சரிசி ஒரு சின்னக் கிண்ணம் அல்லது ஐம்பது கிராம்
தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்
ஒரு நடுத்தர அளவு காரட் ஒன்று
பாதாம் ஐம்பது கிராம்
முந்திரி பத்து
ஏலக்காய்,
குங்குமப் பூ(தேவையானால்) ஒரு டீஸ்பூன் பாலில் ஊற வைக்கவும்.
நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
கிஸ்மிஸ் பழம் ஒரு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை 150 கிராம் அல்லது இரண்டு கிண்ணம்
பாதாம், முந்திரியைக் கழுவி ஏலக்காய், அரிசி சேர்த்து ஊற வைக்கவும். குறைந்தது 2 அல்லது மூன்று மணி நேரம் ஊற வேண்டும். ஏலக்காயை அதில் போடவில்லை எனில் தனியாகப் பொடி செய்து ஓரமாக வைக்கவும். காரட்டைப் பொடியாகத் துருவவும், அல்லது நறுக்கவும். ஊறிய அரிசி, பாதாம், முந்திரி, தேங்காய்த் துருவல், காரட் துருவல் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். ரவை மாதிரி இருத்தல் வேண்டும். நன்கு ஜலம் விட்டுக் கரைத்து வைக்கவும்.
அடுப்பில் அடி கனமான பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றிக் கரைத்து வைத்த மாவுக்கரைசலை ஊற்றிக் கொண்டே இன்னொரு கையால் கரண்டியால் கிளறவும். சிறிது நேரம் கைவிடாமல் கிளற வேண்டும். அடிப்பிடித்துவிட்டால் ருசியே போயிடும். நீர் தேவை எனில் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம். பாயசம் கெட்டியாக வேண்டுமா, நீர்க்க இருக்க வேண்டுமா என்பது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. நான் தோசை மாவு பதத்துக்குக் கரைத்து வேக விட்டேன். கரைசலில் அரிசி, பருப்பு தெரியக் கூடாது. அவை நன்கு கரைந்ததும், சர்க்கரை சேர்க்கவும். பக்கத்தில் பாலைக் காய்ச்சிக் குறுக்கி வைக்கவும். சர்க்கரை கரந்து பாயசம் சேர்ந்து வரும்போது குறுக்கிய பாலைச் சேர்க்கவும். பாலைச் சேர்த்ததும் பாயசம் நீராக வரக்கூடாது. சிறிது நேரம் கொதிக்க விடவும். பின்னர் கீழே இறக்கி ஏலப்பொடி, குங்குமப் பூவைப் பாலில் நனைத்துக் கரைத்து விடவும். மிச்சம் உள்ள நெய்யைச் சூடாக்கித் திராக்ஷைப் பழங்களைப் போட்டு மிதக்க விட்டுப் பரிமாறவும். இதைச் சூடாகவும் சாப்பிடலாம். ஆற வைத்தும் சாப்பிடலாம். பாதாம் கீர், பாதாம் அல்வா போன்றவை பின்னர்.