ரச வகைகளில் அடுத்து நாம் பார்க்கப் போவது கொள்ளு ரசம். கொள்ளை ஊற வைத்து வேக வைத்தும் ரசம் வைக்கலாம். அல்லது கொள்ளை வறுத்து மிளகு, ஜீரகத்தோடு பொடித்துக் கொண்டும் ரசம் வைக்கலாம். எங்களுக்குக் கொள்ளு ஒத்துக்கொள்ளுவது இல்லை. முன்னால் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இப்போக் கொள்ளு, கண்டந்திப்பிலி, பிரண்டை, பூண்டு போன்றவை ஒத்துக்கொள்வதில்லை. என்றாலும் ரசம் வைத்திருக்கேன். கொள்ளை ஊற வைத்து முளைக்கட்டிச் சுண்டல் செய்திருக்கேன். நன்றாக இருக்கும். உடல் இளைக்கக் கொள்ளை விடச்சிறந்த தானியம் இல்லை. இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு என்பார்கள். தினம் ஏதேனும் ஓர் முறையில் கொள்ளைச் சேர்த்து வந்தால் கட்டாயமாய் உடல் இளைக்கும். சாம்பாருக்கு வேகவிடும் பருப்பில் பாதிக்குப் பாதிக் கொள்ளைப் போட்டும் செய்யலாம். இதோடு வெந்தயத்தையும் சேர்த்துச் சாம்பார் செய்தால் நன்றாக இருக்கும்.

கொள்ளு ரசம் 1 தேவையான பொருட்கள் புளி ஓர் எலுமிச்சை அளவுக்கு, ரசப்பொடி ஒரு டீஸ்பூன், உப்பு தேவைக்கு, பெருங்காயம் சிறிதளவுக்கு, தக்காளி தேவையானால் சின்னதாக ஒன்று, பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு, மிளகு, ஜீரகம், கருகப்பிலை ஊற வைத்துக்கொண்டு அதோடு கொள்ளையும் சேர்த்து ஊற வைக்கவும். ஜீரக ரசத்துக்குத் துவரம்பருப்பு ஊற வைப்போம். அதற்கு மாற்றாக இங்கே கொள்ளு. அல்லது ஊறிய கொள்ளைத் துவரம் பருப்பு வேக வைப்பது போல் வேக வைத்துக்கொண்டு மிளகு ஜீரகம் கருகப்பிலையோடு சேர்த்து அரைத்தும் விடலாம். இது அவரவர் ருசிக்கு ஏற்பச் செய்து கொள்ளவும்.
புளி ஜலத்தை உப்பு, ரசப்பொடி, தக்காளி, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிடவும். புளி வாசனை போகக் கொதித்ததும் ஊற வைத்திருந்த பொருட்களைக் கொரகொரவென அரைத்துக் கொண்டு ரசத்தில் விட்டு விளாவவும். ரசம் கொதித்து வந்ததும் கீழே இறக்கி நெய்யில் கடுகு, ஜீரகம் தாளித்துக்கொண்டு கருகப்பிலை, கொத்துமல்லி தூவவும்.
இதே வேக வைத்த கொள்ளு என்றால் வேக வைத்த பருப்பை அப்படியே ரசத்தில் போட்டால் அடியில் தங்கிவிடும். பின்னர் அடியில் இருப்பதைத் தூரக் கொட்டி விட்டால் கொள்ளுச் சேர்த்ததின் பலன் தெரியாது. ஆகவே மிளகு, ஜீரகம், கருகப்பிலையைப் பச்சையாக எடுத்துக்கொண்டு வெக வைத்த கொள்ளையும் சேர்த்து மிக்சியில் ஒன்றிரண்டாக அரைத்து ரசத்தில் விடவும். இம்முறையில் கொள்ளு நன்கு மசிந்து விடும் என்பதால் உடம்பில் சேரும்.
வறுத்து அரைத்த கொள்ளு ரசம் 2. தேவையான பொருட்கள்.
புளி சின்ன எலுமிச்சை அளவு எடுத்து நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். உப்பு, தேவைக்கு, பெருங்காயம் சின்னத் துண்டு. தக்காளி தேவையானால். ரசப்பொடி சேர்த்தால் மி.வத்தல் வறுக்க வேண்டாம். இல்லை எனில் மி.வத்தல் ஒன்று, மிளகு ஒரு டீஸ்பூன், ஜீரகம் பச்சையாக, கொள்ளு இரண்டு டீஸ்பூன், கருகப்பிலை ஆகியவற்றை எண்ணெயில் சிவக்க வறுக்கவும். ரசப்பொடி சேர்த்தால் மி.வத்தல் இல்லாமல் மற்றவற்றை வறுத்துக்கொள்ளவும். புளி ஜலத்தில் முன் சொன்னமாதிரி உப்பு, பெருங்காயம் சேர்த்துத் தக்காளி போட்டால் அதையும் பொடியாக நறுக்கிச் சேர்த்துப் புளி வாசனை போகக் கொதிக்கவிடவும். வறுத்த பொருட்களைக் கொஞ்சம் நீர் சேர்த்து ரொம்பக் கொரகொரவென இல்லாமல் கொஞ்சம் நிதானமான கொரகொரப்பில் அரைத்துக் கொள்ளவும். விளாவத் தேவையான நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு புளி வாசனை போகக் கொதித்த ரசத்தில் விட்டு விளாவவும். நுரைத்து வந்ததும் கீழே இறக்கி நெய்யில் கடுகு, மி.வத்தல், கருகப்பிலை தாளிக்கவும். இந்த ரசத்துக்குக் கொத்துமல்லி தேவை இல்லை. பிடித்தால் போடலாம். தப்பில்லை.
ரேவதி முருங்கை இலை ரசம் கேட்டிருந்தார். நான் ரசமாகச் செய்தது இல்லை. ஆனால் சூப் மாதிரி நிறைய வைத்துச் சாப்பிட்டிருக்கோம். அதற்குத் தேவையான பொருட்கள்.

இளம் முருங்கை இலை இரண்டு கைப்பிடி, நன்கு ஆய்ந்து அலம்பிக்கொண்டு நறுக்கி வைக்கவும்.
இதற்கு நான் புளி சேர்த்தது இல்லை. நன்கு பழுத்த தக்காளி இரண்டு வெந்நீரில் போட்டுச் சாறு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
உப்பு தேவைக்கு, பெருங்காயம் சிறிதளவு, மிளகு இரண்டு டீஸ்பூன், ஜீரகம் இரண்டு டீஸ்பூன் இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். மஞ்சள் பொடி தேவையானால் கால் டீஸ்பூன்.
வதக்க நெய் இரண்டு டீஸ்பூன், வெண்ணெய் மேலே போட இரண்டு டீஸ்பூன், கொத்துமல்லித் தழை, புதினாத்தழை(பிடித்தமானால்(
வாணலியில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றிக்கொண்டு பொடியாக நறுக்கிய முருங்கை இலைகளைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். சுருள வதங்கும். வதங்கிய பின்னர் எடுத்து வைத்திருக்கும் தக்காளிச் சாறைச் சேர்க்கவும். உப்பு, பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்க்கவும். நன்கு கொதிக்கட்டும். சேர்ந்து வரும்போது தேவையான நீரைச் சேர்த்துக் கொண்டு வறுத்துப் பொடித்திருக்கும் மிளகு, ஜீரகப் பொடியைப் போட்டுக் கீழே இறக்கி வெண்ணெய் இரண்டு டீஸ்பூன் சேர்க்கவும். கொத்துமல்லித் தழை, புதினாத் தழை சேர்த்துக் குடிக்கலாம். இலைகளை வடிகட்டாமல் சாப்பிட்டால்/குடித்தால் நல்லது . பிடிக்கவில்லை எனில் வடிகட்டிக் கொண்டு அதன் மேல் வெண்ணெய் சேர்த்துக் கொத்துமல்லி, புதினா தூவிச் சாப்பிடலாம். இதைச் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னால் சாப்பிட்டு வந்தால் நல்லது. ஸ்ரீரங்கத்தில் இருந்தவரை அடிக்கடி/சொல்லப் போனால் தினம் தினம் செய்து சாப்பிட்டு வந்தோம்.
இத்துடன் ரச வகைகள் முடிந்தன. அடுத்துக் காய் வகைகளில் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.