எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, October 6, 2019

பாரம்பரியச் சமையலில் பன்னீர் ரச வகை, பைனாப்பிள் ரசவகை!

ரச வகைகளில் அடுத்து நாம் பார்க்கப் போவது பொரித்த ரசம். இதற்குப் புளியோ, எலுமிச்சைச் சாறோ சேர்க்கக் கூடாது. துவரம்பருப்பைக் குழைய வேகவைத்துக் கொண்டு ஒரு கரண்டிப் பருப்பை நீரில் கரைத்து வைக்கவும். தக்காளி பழுத்ததாக நான்கு எடுத்து வெந்நீரில் போட்டுத் தோலை உரித்துக் கொண்டு கையால் அல்லது கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
வறுத்துப் பொடிக்க: துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், தனியா இரண்டு டீஸ்பூன், மி.வத்தல்2, பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு, ஜீரகம். ஜீரகத்தைத் தவிர மற்றவற்றை வறுத்து ஜீரகத்தோடு சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும்.

பருப்புக் கரைத்த நீரோடு தக்காளிச் சாறைச் சேர்த்து உப்புப் போட்டு மஞ்சள் பொடி, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். ரசம் நன்கு கொதித்ததும் பொடித்த பொடியைப் போட்டுத் தேவையான ஜலம் விட்டு விளாவவும். நுரைத்து வந்ததும் கீழே இறக்கி நெய்யில் கடுகு, ஜீரகம், கருகப்பிலை, ஓர் சின்ன மி.வத்தல் தாளித்துக் கொத்துமல்லி தூவவும்.

பைனாப்பிள் ரசம் இது மிக எளிதாகச் செய்து விடலாம். நான்கு பேருக்குப் பைனாப்பிள் ரசம் வைக்கத் தேவையான பொருட்கள்

புளி எலுமிச்சை அளவுக்கு எடுத்துக்கொண்டு ஊற வைத்து நீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

உப்பு தேவைக்கு, துவரம்பருப்புக் குழைய வேக வைத்தது ஒரு கரண்டி நீரில் கரைத்து வைக்கவும்.

தக்காளி ஒன்றே ஒன்று மட்டும் போதுமானது. பெருங்காயம் சின்னத் துண்டு

ரசப்பொடி இல்லைனால் சாம்பார்ப் பொடி. சாம்பார்ப் பொடி போட்டால் தனியா, துவரம்பருப்பு, மிளகு, ஜீரகத்தை வெறும் வாணலியில் அல்லது எண்ணெய் விட்டு வறுத்துக் கொண்டு பொடித்துக் கொள்ளவும். ரசப்பொடி போடுவதானால் மிளகு ஜீரகம் மட்டும் பச்சையாகப் பொடிக்கவும்.

பச்சை மிளகாய் தேவையானால் சின்னதாக ஒன்று, தாளிக்க நெய், கடுகு, ஜீரகம், கருகப்பிலை, கொத்துமல்லி

பைனாப்பிள் துண்டங்கள் நிதானமான அளவில் 6 துண்டங்கள். இரண்டு துண்டங்களைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நான்கு துண்டங்களைத் தனியாக அரைத்து எடுக்கவும்.

புளி ஜலத்தில் உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்துக் கொண்டு ரசப்பொடி போட்டுக் கொதிக்க வைக்கவும். அரைத்து வைத்திருக்கும் பைனாப்பிள் விழுதைச் சேர்க்கவும். ரசம் நன்கு கொதிக்கையில் துண்டாக வைத்திருக்கும் பைனாப்பிள் துண்டங்களை நெய்யில் வதக்கிச் சேர்க்கவும். துவரம்பருப்புக் கரைத்த நீரை விட்டு விளாவவும். நுரைத்துக் கொதித்து மேலே வரும்போது கீழே இறக்கிப் பொடி செய்து வைத்துள்ள பொடியைச் சேர்த்துக் கொண்டு/அல்லது மிளகு, ஜீரகப்பொடியைத் தூவி நெய்யில் கடுகு,ஜீரகம், கருகப்பிலை, கொத்துமல்லி தூவவும். சூடாகக் குடிக்கக் கொடுக்கவும்.

இதே போல் பீட்ரூட்டிலும் ரசம் செய்கின்றனர். சமீபத்தில் நாங்கள் சாப்பாடு வாங்கும் காடரர் பீட்ரூட்டில் ரசம் செய்து கொடுக்கிறார்.

Image result for பன்னீர் ரோஜா

பன்னீர் ரோஜா  முன்னெல்லாம் பூஜைக்கு இதான் பயன்படுத்துவாங்க!

பன்னீர் ரசம். முன் சொன்ன மாதிரிப் பருப்பு ரசம் தக்காளி போட்டு வைக்க வேண்டும். ரசம் விளாவுவதற்கு முன்னர் பன்னீர் ரோஜா இதழ்களை நன்கு அலம்பிக் கொதிக்கையில் சேர்க்கவேண்டும். ஒரு கொதி விட்டபின்னர் ரசம் விளாவ வேண்டும். இதற்கு மிளகு, ஜீரகப் பொடியை அதிகம் சேர்க்கலாம். ரசமும் நீர்க்க இருந்தால் நன்றாக இருக்கும்.

30 comments:

 1. பொரித்த ரசம் செய்துபார்க்க ஆவல்.

  ReplyDelete
  Replies
  1. ரொம்பவே எளிது செய்து பாருங்க!

   Delete
 2. பைனாப்பிள் ரசம்... சரவணபவனில் எப்போவோ சாப்பிட்டது. அவங்க ஒருவேளை நடுத் தண்டை உப்யோகிப்பாங்களோ? (சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் தட்டச்சு கஷ்டமா இருக்கு)

  ReplyDelete
  Replies
  1. சுண்டுவிரலுக்கும் தட்டச்சுக்கும் என்ன சம்பந்தம்?

   Delete
  2. நான் தட்டச்சு ரொம்ப வேகமாகப் பண்ணுவேன். சுண்டுவிரல் உபயோகிக்காம அ, ஷிஃப்ட் லாம் உபயோகிக்க கஷ்டமா இருக்கு. சுண்டுவிரல் நுனியை சீவிவிட்டேன்.

   Delete
 3. பன்னீர் ரோஜான்னா என்ன? கேள்விப்படாத ரசம்.

  தெரிஞ்சிக்க கேட்கறேன்..மாம்பழ ரசம் உண்டா?

  ReplyDelete
  Replies
  1. https://pbs.twimg.com/media/C7kWe-BUwAAWSTH.jpg

   edward rose என்று சொல்வாங்களே அதுதான் இந்த பெங்களூர் ரோஜாலாம் வரத்துக்கு முன்னாடி இதுதானே எல்லார் வீட்லயும் இருக்கும் இதில் தான் இந்த இதழ்களை வைத்துதான் பன்னீர் தயாரிக்கிறாங்க . பன்னீர் சொம்பில் ஊற்றி தெளிப்பாங்களே அந்த பன்னீர் இந்த ரோஜாவிலிருந்தே வருது பன்னீர் ரோஜாவிலிருந்தே குல்கந்து தயாரிக்கிறாங்க ..

   Delete
  2. மாம்பழ ரசம் இருங்க வந்துட்டே இருக்கு :))

   Delete
  3. பன்னீர் ரோஜா படம் சேர்த்திருக்கேன். சொன்னால் எல்லோருக்கும் புரியும்னு நினைச்சேன். ஏஞ்சல் விளக்கம் கொடுத்திருக்கார். இதில் தான் குல்கந்தும் செய்வார்கள். ராஜஸ்தானின் புஷ்கரில் இந்த ரோஜா நிறையவே உண்டு. அங்கே குல்கந்தும் நிறையக் கிடைக்கும்.

   Delete
  4. விளக்கத்துக்கு நன்றி ஏஞ்சல்! நீங்களாவது புரிஞ்சுண்டீங்களே!

   Delete
  5. மாம்பழ ரசம் நான் அதிகம் செய்தது இல்லை. மாம்பழம் போட்டு சாம்பார் மாமியார் பண்ணுவார். நம்ம ரங்க்ஸுக்குப் பிடிக்காது என்பதால் மாம்பழ ரசம், மாங்காய்ப் பச்சடி, மாம்பழ சாம்பார் எல்லாவற்றிற்கும் தடா! ஆகவே எதிர்பார்க்க வேண்டாம்.

   Delete
  6. மாம்பழப் பச்சிடி பிடிக்காதவங்களும் (அதில் வேப்பம்பூ போட்டு) உலகத்தில் இருக்காங்களா?

   Delete
  7. மாம்பழப்பச்சடி செய்தது இல்லை. மாங்காய்ப் பச்சடி தான் செய்வோம். புது வருஷத்துக்கு அதிலேயே வேப்பம்பூவைப் போடுவது உண்டு.

   Delete
 4. எல்லா ரசங்களும் சூப்பர்.
  முருங்கை இலை ரசம் எழுதிவிட்டீர்களா.
  பைன் ஆப்பிள் ரசம் பெண்ணும் நன்றாகச் செய்வாள்.

  எல்லாவற்றுக்கும் ஆர்வம் தான் வேண்டும்.
  உங்கள் புத்தகம் என் பெண் வாங்கிக் கொண்டால்
  பிரயோஜனமாக இருக்கும்.
  நன்றி கீதாமா.

  ReplyDelete
  Replies
  1. இல்லை ரேவதி, முருங்கை இலை ரசம் எழுதலை. உங்கள் பாராட்டிற்கு ரொம்ப நன்றி.

   Delete
  2. சென்ற ஜனவரி முதல் தேதி மைலாப்பூர் பக்கத்துல பார்த்தசாரதி சபா(?)ல ஸ்பெஷல் சாப்பாடு 850 ரூபாய்க்கு சாப்பிட்டேன். அதில் முருங்கை சதையை உபயோகப்படுத்தி ரசம் பண்ணியிருந்தாங்க. சூப்பரோ சூப்பர். (சும்மா நாலஞ்சு ஐட்டம்தான் நல்லா இருந்தது. காசு வேஸ்ட்)

   Delete
  3. கேரளாவில் இந்த முருங்கைச் சதையை வழித்து எடுத்து ஏதோ கூட்டு அல்லது ரசம்? என்னனு நினைவில் இல்லை. சாப்பிட்டிருக்கேன். ஆனால் பண்ணினது இல்லை. அதோடு நாங்க ஓட்டலுக்கு எல்லாம் புது வருஷத்தன்று (ஆங்கில வருஷம்) போனது இல்லை. சின்ன வயசில் அப்பா கூட்டிக் கொண்டு போவார். அது அநேகமாக என் கல்யாணத்துக்கு முன் வரை தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் ஓட்டலில் இருந்து டிஃபன் வாங்கிக் கொண்டும் வரச் சொன்னார். தம்பி போய் வாங்கி வருவான்.

   Delete
 5. ஆஆவ் !!! பன்னீர் ரசமா !! இது வரைக்கும் பெயர் கூட கேள்விப்பட்டதில்லையே ..இருங்க படிச்சிட்டு வரேன் 

  ReplyDelete
  Replies
  1. ஆஹா! ஏஞ்சல், பன்னீர் ரசம் நம்ம தமிழகத்துக் கல்யாணங்களிலே முன்னெல்லாம் ரொம்பவே பிரபலம். அதுவும் பெரிய பணக்காரங்கன்னா அவங்க வீட்டுக் கல்யாணங்களிலே பன்னீர் ரசமும், கோதுமைப் பாயசமும், பைனாப்பிள் ரசமும் அதிகம் பேசப்படும் விஷயம்.

   Delete
 6. பொரித்த ரசம் நல்லா இருக்கு .பன்னீர் இதழ் சேர்ப்பதால் பன்னீர் ரசமா .ஓகே :)ஆனாஎனக்கு செடில இருக்கிற மலரை தொடவும் பிடிக்காது :) அதனால் பன்னீர் ரசம் லிஸ்டை விட்டு நீக்கியாச்சு :)ஒருமுறை எங்கோ படிச்சேன் திராட்சையிலும் ரசம் செய்றாங்க .மாதுளம் ரசம் நான் செஞ்சிருக்கேன் 

  ReplyDelete
 7. அட! ஏஞ்சல்! நிஜம்மாவா? கல்யாணங்களில் பன்னீர் ரசம் மத்தியானச் சாப்பாட்டிலோ அல்லது மாப்பிள்ளை அழைப்பன்றோ கட்டாயமாய் முன்னெல்லாம் இருக்கும். இப்போல்லாம் ரசத்துக்கு அத்தனை முக்கியத்துவம் இல்லை. விதம் விதமான கலந்த சாதங்கள், பூரி, சனா, சப்பாத்தி, பராந்தா போன்றவை தான். மாதுளை ரசம் குடிச்சிருக்கேன். பண்ணியதில்லை.

  ReplyDelete
 8. எத்தனை வித ரசங்கள். பன்னீர் ரசம் இப்போதெல்லாம் பெரிதும் கல்யாணங்களில் வைப்பதில்லை. எங்கள் வீட்டுக்கு முன்பு வரும் ஒரு கேடரிங் சமையல் கலைஞர் இப்படி விதம் விதமாக செய்து தருவார். அவர் இப்போது இல்லை!

  மாம்பழ ரசம் - ஹாஹா... அதுவும் செய்து விட்டால் போயிற்று!

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், மாம்பழ ரசமெல்லாம் வைச்சால் நான் தான் சாப்பிடணும். மாங்காய் கொஞ்சம் செங்காயாகத் தித்திப்போடு இருந்தாலே மாமா அந்த ஊறுகாயைக் கிட்டே கொண்டு வராதேனு சொல்லிடுவார். :) மாம்பழ சாம்பார் பண்ணணும்னும் ஆசை தான்! எங்கே!

   Delete
 9. கீதாக்கா....எல்லாமே சூப்பர் ரசம்..நம்ம வீட்டுல போணியாகும் (நம்ம வீட்டுல இது பிடிக்க்ம் பிடிக்காதுனு கிடையாது என்பதால் என்ன செஞ்சாலும் போணியாகும். என்ன மெனு டிசிஷன் நம்ம கையில கிடையாது...ஹிஹிஹிஹி)

  பொரிச்ச ரசத்துல பாட்டி தனியா சேர்த்ததில்லை. மத்தடெல்லாம் அதே பொடிதான்...து ப மி வ மி, ஜீ வறுக்காமல்...துவாதசி அன்று பொரிச்ச ரசம் தான் செய்வாங்க பாட்டி புளி எலுமிச்சை சேர்க்க மாட்டாங்க என்பதால் ஆனால் மாமியார் வீட்டில் துவாதசியில் எலுமிச்சை ரசம் செய்வாங்க. புளி மட்டும் சேர்க்க மாட்ட்டாங்க...

  நீங்க தனியா சேர்த்திருக்கீங்க...இப்படியும் சேர்த்து செஞ்சுட்டா போச்சு...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பொரிச்ச ரசம் தனியா சேர்த்துப் பண்ணித் தான் பார்த்திருக்கேன். மிளகு , ஜீரகம் மட்டும் போட்டால் அதை எங்க வீட்டில் மிளகு ரசம்னு சொல்லிடுவாங்க அதோடு பொரிச்ச ரசத்துக்குப் புளி சேர்ப்பதில்லை. முன்னெல்லாம் கோடம் புளியில் பண்ணி இருக்கேன். அவ்வளவாய்ப் பிடிக்கலை.

   Delete
 10. பைனாப்பிள் ரசம் இதே முறைதான்...கடைசியில் அரைத்தும் விட்டு என்று...பீட் ரூட் ரசம் இதை ஏஞ்சலின் தளத்தில் சொல்ல விட்டுப் போச்சு...நல்லாருக்கும். மாமியார் மாதுளை ரசம் செய்வாங்க. அதுவும் இதே போலத்தான் பைனாப்பிள் போல..அதே போல மாமியார் ரோஜா மாலை பன்னீர் ரோஜாதானே இதுக்கு எனவே மாலையாக வந்தால் அந்த ரோஜா னா உடனே நானும் மாமியாரும் அதை உதிர்த்து குல்கந்து செய்வோம். கொஞ்சம் இதழ்களில் ரசமும் மாமியார் செய்ததில் கற்றுக் கொண்டேன். அப்புறம் சித்தி ஒருவர் பன்னீர் திராட்சையில் ரசம் செய்ததையும் கற்றுக் கொண்டேன். பன்னீர் திராட்சை மட்டுமே வேறு எந்த திராட்சையுலும் செய்ய மாட்டார். வாசனையாக இருக்காது என்று. அப்புறம் நான் இந்த ரோஜா மாலையில் கிடைத்தால் மட்டுமே. இதழ்களை கொஞ்சம் உலர்த்து வைத்துக் கொண்டு ஹைதராபாத் வெஜ் ரைஸ் செய்யும் போது இந்த இதழ்களைச் சேர்ப்பதுண்டு. உறவினர்கள் நட்புகள் என்று பலரிடமும் கற்றது நிறைய கீதாக்கா...அப்போ எல்லாம் இது ஒன்னுதான்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா, அநேகமாப் பன்னீர் ரசம் தெரியாதவங்கன்னா அவங்க வாஷிங்டனில் திருமணம் படிக்காதவங்களா இருப்பாங்க! :) அநேகக் கல்யாணங்களில் இது கட்டாயமாய் முதல் இரண்டு நாட்களில் இடம் பெறும். மாதுளை ரசமோ, திராக்ஷை ரசமோ பண்ணியது இல்லை. கொஞ்சம் புளிப்பான ஹைதராபாத் திராக்ஷையில் களாக்காய் ஊறுகாய் மாதிரிப் போட்டுப் பார்த்திருக்கேன்.

   Delete
 11. அக்கா நம்ம வீட்டுல இதை பன்னீர் ரசம்னு சொல்லமாட்டாங்க பன்னீர் ரோஜா ரசம் பன்னீர் திராட்சை ரசம்னு...

  நெல்லி ரசம், (காட்டு நெல்லி இல்லைனா அருனெல்லி. அருனெல்லி நல்லாருக்கும்) முன்பு நம்ம வீட்டுல எலுமிச்சை மரம் இருந்தது நார்த்தை மரமும். அந்த இலைகளைப் போட்டும் செய்வாங்க. இளசா இருந்தா நல்லாருக்கும் இல்லைனா சில சமயம் கசப்பு வந்துவிடும்.

  ஓம ரசமும் செய்வாங்க என் பாட்டி வயிறு சரியில்லை என்றால் அன்று ஓம ரசம். வித்தியாசமான சுவையுடன் இருக்கும். இதையே என் ஆயுர்வேத டாக்டர் ஓமவல்லி இலை போட்டு ரசம் செய்து சாப்பிடச் சொன்னார். அப்புறம் ஓமவல்லி இலை பச்சடியும் சாப்பிடச் சொல்லியிருந்தார் சில வருடங்கள் முன்பு... இதை ஏஞ்சலின் தளத்துல சொல்ல முடியலை காலைல நெட் படுத்தல்...அதனால..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. எங்க வீடுகளில் ஓமத்தை மோர் ரசத்தில் அதிகம் போடுவாங்க. மோர் ரசத்தில் ஓமவல்லி இலைகளையும் வதக்கிச் சேர்ப்பாங்க. தனியாக ஓமரசம்னு பண்ணினது இல்லை. இப்போ கேடரர் ஓமக்குழம்புனு கொடுக்கிறார். பீட்ரூட் ரசமும் அவங்க கொடுத்துத் தான் பார்த்தேன். நெல்லிக்காயில் ரசம் பண்ணினேன், புளி சேர்க்காமல் ஆனால் பிடிக்கலை! அவ்வளவு ஒண்ணும் ருசியாக இல்லை.

   Delete