அடுத்து நாம் செய்யப் போகும் பாயசம் சதசதயம்! பெயரே புதுசா இருக்கில்லை? இதை அதிகம் திருநெல்வேலிக்காரங்களோ அல்லது நாகர்கோயில், கேரளப்பகுதி/பாலக்காடு பிராமணர்களோ செய்வார்கள். அவர்களில் பெரும்பாலோருக்கு ஐயப்பன் தான் குலதெய்வமாக இருப்பான். ஒவ்வொரு வருஷமும் ஐயப்பனுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றுகூடி சாஸ்தாப்ரீதி என்னும் பூஜையைப் பொதுவில் செய்து ஊர்க்காரர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய அளவில் சமாராதனைச் சாப்பாடு போடப்படும். இது திருநெல்வேலி ஜில்லா கல்லிடைக்குறிச்சி கிராமத்துக்காரர்கள் இந்த சாஸ்தா ப்ரீதி நடக்கையில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வந்து சேர்ந்து கொள்வார்கள் என முன்னெல்லாம் சொல்லுவார்கள். இப்போ எப்படினு தெரியலை. எனக்கு இது தெரியவந்தது நாங்க அம்பத்தூரில் வீடு கட்டும்போது தான்.
எங்களுக்கு வீடு கட்டிக்கொடுத்த ஒப்பந்ததாரர் பாலக்காட்டுக்காரர். அவர் வீட்டில் அடிக்கடி பகவதி பூஜை, சாஸ்தா ப்ரீதி எல்லாம் பண்ணுவார்கள். அப்போது தான் அங்கே அரவணைப் பாயசமும், சதசதயமும் சாப்பிட்டுப் பின்னர் அவங்களிடம் செய்முறையும் கேட்டு அறிந்து கொண்டேன். அப்போதெல்லாம் நம்மவரும், எங்க பையரும் தொடர்ந்து 3 வருஷங்கள் சபரிமலை போய்க் கொண்டிருந்ததால் இதைப் பண்ணிப் பார்க்கலாம் என்னும் எண்ணமும் தான். ஆனால் அப்போல்லாம் பண்ணவே முடியலை. பின்னர் பல வருஷங்கள் கழிச்சு ஒரு தரம் பண்ணினேன். ஆனால் அது அரவணை. சதசதயம் பண்ணவே இல்லை. இப்போச் செய்முறையைப் பார்ப்போம். அங்கே நெல்லைத் தமிழர் முழிச்சுட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கார் கோபமா! கதை சொல்லிண்டே இருக்காங்களேனு!
சதசதயம் பண்ணத்தேவையான பொருட்கள்:
பச்சரிசி ஒரு ஆழாக்கு.
இதைச் சாதமாக வடித்துக்கொள்ளலாம். வெண்கலப்பானையிலேயே வடிக்கலாம். இப்போதெல்லாம் குக்கரில் வைக்கிறார்கள். சாதம் குழையலாம், தப்பில்லை.
வெல்லம் சுமார் அரைக்கிலோ பாகுவெல்லம் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
ஏலக்காய்ப் பொடி சுமார் பத்துப் பனிரண்டு ஏலக்காயைப் பொடித்தது.
தேங்காய் நல்ல பெரியதாக ஒன்று. கிராமங்களில் சாஸ்தாப்ரீதி பண்ணும்போது நூறு தேங்காய்களின் தேங்காய்ப் பாலை எடுத்துக் குறைந்து நூறு லிட்டராவது பாயசம் பண்ணுவார்களாம். நமக்கு இங்கே ஒன்று போதும். தேங்காயை உடைத்துத் துருவி முதல் பால், இரண்டாம் பால், மூன்றாம் பால் என எடுத்துக்கொள்ள வேண்டும்.
தனியாக ஓர் அரைமூடித் தேங்காயைப் பல்லுப் பல்லாகக் கீறி வைத்துக் கொள்ளவேண்டும்.
கதலிப்பழம் (தேன் கதலி என்பார்கள்) அது இல்லைனால் நம்ம பூவனே போதும். 2 அல்லது மூன்று கனிந்ததாக.
நெய் சுமார் கால் கிலோ
வடித்த சாதத்தை ஓர் வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நெய்யைப் பாதி விட்டுக் கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பொடி செய்த வெல்லத்தை நீரில் போட்டுக் கரைத்துக் கொண்டு கல், மண் இல்லாமல் வடிகட்டி அடுப்பில் ஓர் அடிகனமான பாத்திரத்தில் அல்லது உருளியில் போட்டுக் காய்ச்சவேண்டும்.. வெல்லம் நன்கு கரைந்து வரும்போது மசித்த சாதத்தை அதில் போட்டு நன்கு கிளறிக் கொடுக்கவும். தேவையானால் அரை டீஸ்பூன் உப்பைச் சேர்க்கவும். இனிப்பைத் தூக்கிக் காட்டும். பின்னர் மூன்றாம் பாலை விட்டுக் கொதிக்க விடவும். அது சேர்ந்து வரும்போது இரண்டாம் பாலை விட்டு விட்டுக் கதலிப்பழங்களை வில்லை வில்லையாக நறுக்கிப் பாயசத்தில் சேர்க்கவும். இரண்டாம் பாலை ஊற்றிக் கொதி வந்து சேர்ந்து வந்ததும் முதல் பாலை விட்டு அடுப்பை அணைக்கவும். ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும். மிச்சமிருக்கும் நெய்யில் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய்க் கீற்றுக்களைப் பொன்னிறமாக வறுத்துச் சேர்க்கவும். முந்திரிப்பருப்பெல்லாம் வேண்டாம். வேண்டுமானால் பிடித்தால் சுக்கை நன்றாகப் பொடி செய்து சேர்க்கலாம். பழத்தைப் பாயசத்தில் இருந்து நீக்காமல் அதோடு இலையில் பாயசத்தை விட்டுக் கொண்டு சூடாகச் சாப்பிட்டுப் பார்க்கவும்.
அடுத்து அரவணைப் பாயசத்தைப் பார்ப்போமா? கிட்டத்தட்ட சதசதயம் மாதிரித் தான். கொஞ்சமே வேறுபாடு!
அரவணைப் பாயசம்
ஐயப்பன் பூஜைக்கு அரவணைப் பாயசம் செய்யறது உண்டு. இதற்குத்
தேவையான பொருட்கள்:
நல்ல பச்சரிசியாக ஒரு கிண்ணம் சுமார் 200 கிராம். நெய் அரைகிலோவில் இருந்து ஒரு கிலோ வரையிலும் தாராளமாய்த் தேவை. வெல்லம் ஒரு கிலோ. தேங்காய் ஒன்று. உடைத்துப் பல்லுப் பல்லாகக் கீறிக்கொள்ளவும். ஏலக்காய்ப் பொடி.
வெண்கலப் பானை அல்லது திருச்சூர் உருளியில் அரிசியை நன்கு கழுவிக் களைந்து கொண்டு சாதமாகக் குழைத்துக் கொள்ளவும். ஒரு கிலோ நெய்யில் அரைகிலோ நெய்யை அந்தச் சாதத்தில் விட்டு நன்கு மசிக்கவும். தனியே எடுத்து வைக்கவும். அதே உருளியில் ஒருகிலோ வெல்லத்தைத் தூள் செய்து போட்டு நீர் சேர்த்துப் பாகு வைக்கவும். பாகு நன்கு காய்ந்து வரும்போது நெய்யில் கலந்த சாதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். நன்கு கிளறவும். வெல்லப் பாகும் சாதமும் சேர்ந்து வந்து கொதித்ததும், வெல்ல வாசனை போய்விட்டதா என உறுதி செய்து கொண்டு அடுப்பை அணைக்கவும். மிச்சம் நெய்யை ஒரு கடாயில் ஊற்றித் தேங்காய்க் கீறி வைத்திருப்பதை நெய்யில் வறுத்துக் கொட்டவும். ஏலப் பொடி சேர்க்கவும். இதற்கு முந்திரிப் பருப்புப் போட வேண்டாம்.
சூடாகவும் சாப்பிடலாம். ஆறினாலும் சாப்பிடலாம். நன்றாக இருக்கும். குறைந்தது ஆறு மாதங்களுக்கு வீணாகாது.
அடுத்து ஜவ்வரிசி, கடலைப்பருப்பு வெல்லப் பாயசம். இதுவும் தேங்காய்ப் பால் சேர்த்து. வெல்லம் போட்டுப் பண்ணும் பாயசங்களிலே தேங்காய்ப் பால் நன்றாக ஒத்துப் போகும்.
கடலைப்பருப்பு, ஜவ்வரிசி வெல்லப் பாயசம்:
தேவையான பொருட்கள் : 50 கிராம் கடலைப்பருப்பு. 50 கிராம் ஜவ்வரிசி, வெல்லம் 200 கிராம், தேங்காய்ப் பால் ஒரு கிண்ணம், ஏலக்காய்ப் பொடி சிறிது. முந்திரிப்பருப்பு, திராக்ஷைப் பழம் நெய்யில் வறுத்துக் கொள்ளவும். நெய் 50 கிராம்
கடலைப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துக் களைந்து கொண்டு வேக வைக்கவும். ஜவ்வரிசியையும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் வறுத்துக் கொண்டு நீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். தேங்காய் மூடியைத் துருவிக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டு அரைத்துப் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். வெல்லத்தைத் தூளாக்கவும். வேக வைத்த கடலைப்பருப்பு, ஜவ்வரிசியைக் கொஞ்சம் நீர் சேர்த்துக் கொதிக்க விட்டுக் கொள்ளவும். வெல்லம் சேர்க்கவும். வெல்ல வாசனை போகும் வரை கொதிக்க விடவும். தேங்காய்ப் பாலைக் கொஞ்சம்கொஞ்சமாகச் சேர்க்கவும். தேங்காய்ப் பாலைச் சேர்த்ததும் அதிக நேரம் கொதிக்க வேண்டாம். கீழே இறக்கி ஏலப்பொடி சேர்த்துக் கொண்டு நெய்யில் முந்திரிப் பருப்பு, திராக்ஷையை வறுத்துச் சேர்க்கவும். சூடான, சுவையான பாயசம் கொஞ்சம் வித்தியாசமாகத் தயார்.