எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, March 7, 2020

பாரம்பரியச் சமையலில் பலாப்பழப் பச்சடி போன்றவை!

பலாப்பழக் காலம் நெருங்கி விட்டது. அரைக்காயாக இருந்தாலும் சரி, பலாப்பழமாக இருந்தாலும் சரி, நான்கு பேருக்குத் தேவையான அளவு சுமார் 12 சுளைகள்.  வெல்லம் தூள் செய்தது ஒரு கிண்ணம், அரிசி மாவு கரைத்து விட 2 டீஸ்பூன். தாளிக்க நெய் ஒரு டீஸ்பூன், கடுகு, பச்சை மிளகாய் ஒன்று

Image result for பலாப்பழப் பச்சடி

படத்துக்கு நன்றி கூகிளார்

பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை அல்லது கனமான பாத்திரத்தை வைத்து நறுக்கிய சுளைகளைப் போட்டு நீரைத் தேவையான அளவுக்கு விட்டு வேகவிடவும். தேவையானால் கால் டீஸ்பூன் உப்புச் சேர்க்கலாம். சுளைகள் நன்கு வெந்ததும் வெல்லத்தூளைச் சேர்த்துக் கரைய விடவும். வெல்லம் நன்கு கரைந்ததும் அரிசிமாவைக் கரைத்து விட்டு நெய்யில் கடுகு, பச்சை மிளகாய் தாளிக்கவும்.

இதையே வெல்லம் சேர்த்துக் கரைந்த பின்னர் தேங்காய் அரை மூடியைத் துருவிக் கொண்டு நன்கு அரைத்துச் சேர்க்கவும். கெட்டியாகவேண்டுமெனில் அரிசி மாவை அந்தத் தேங்காயோடு சேர்த்து அரைத்து விடவும். தேங்காய் சேர்த்த பின்னர் அதிகம் கொதிக்கவிடாமல் ஏலக்காயைப் பொடித்துப் போட்டு நெய்யில் முந்திரிப்பருப்பு, திராக்ஷை தாளிக்கவும்.

பழப்பச்சடிகள்: தக்காளிப் பழப் பச்சடி முதலில். நான்கு பேருக்குத் தேவையான அளவு கால்கிலோ தக்காளி நன்கு சிவந்த பழங்களாக எடுத்துக் கொண்டு கொதிக்கும் தண்ணீரில் போட்டுப் பாத்திரத்தை மூடி அடுப்பை அணைத்துவிடவும். சிறிது நேரம் கழித்துத் தக்காளிகளை எடுத்து ஆறவிட்டுத் தோலை உரித்தால் தோல் மட்டும் உரிபடும். இவற்றை மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஓர் அடிகனமான பாத்திரத்தில் போட்டுக் கொதிக்கவிடவும். இந்த அளவுக்குச் சுமார் 200 கிராம் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை சேர்த்ததும் பச்சடி நீர்க்க ஆகிவிடும். ஆகவே நன்கு கொதிக்கவிடவும்.  சர்க்கரை நன்கு கெட்டியாகிப் பச்சடியும் கெட்டியான பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்து ஏலக்காய் சேர்த்து நெய்யில் முந்திரிப்பருப்பு, திராக்ஷை போன்றவற்றை வறுத்துச் சேர்க்கலாம்.

மேற்சொன்ன மாதிரித் தக்காளிப் பச்சடியைக் கெட்டியாகப் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும். ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, வாழைப்பழம், திராக்ஷை போன்றவற்றை எடுத்துக் கொண்டு திராக்ஷையை நன்கு கழுவி வைத்துக்கொள்ளவும். மாதுளை முத்துக்களை எடுத்துத் திராக்ஷையோடு சேர்க்கவும். ஆப்பிள், வாழைப்பழம், கொய்யா ஆகியவற்றை ஒரே அளவில் நறுக்கிக் கொள்ளவும். ஆரஞ்சை உரித்துத் தோலை நீக்கிச் சுளைகளை எடுத்துக்கொள்ளவும். பேரீச்சம்பழம் இருந்தால் கொட்டை நீக்கி நறுக்கிக் கொள்ளவும். எல்லாப்பழக்கலவையையும் ஓர் வாயகன்ற பாத்திரத்தில் போட்டுக் கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் செய்து வைத்திருக்கும் தக்காளிப் பச்சடியைக் கொட்டிக் கலக்கவும். பெரிய விசேஷங்கள், கல்யாணங்கள், நிச்சயதார்த்தம், கிரஹப்ரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் பண்ணும் பழப்பச்சடி இது. எங்க வீட்டில் சின்ன சமாராதனை, வீட்டு மட்டுக்கும் பண்ணும் ஹோமங்கள், மற்றும் சில விசேஷ நிகழ்வுகளுக்கு இந்தப் பச்சடியை முதல் நாளே தனியாக செய்து வைத்துக் கொண்டு விடுவேன்.இதை சுமார் பத்து நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.

Image result for பழப் பச்சடி

 படத்துக்கு நன்றி கூகிளார்.

12 comments:

 1. அன்பு கீதா,
  பழவகைகள் சேர்ந்த பச்சடி மிகப் பிரமாதமான செய்முறையோடு விளக்கி இருக்கிறீர்கள்.
  இது குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் நோயே அண்டாது.
  பலாப்பழம் பார்க்கவே ஆசையாக இருக்கிறது.
  இங்கு இடைக்குமான்னு பார்க்கிறேன்.
  நலமாக இருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, பழமாகக் கொடுத்தாலே இந்தக் காலத்துக் குழந்தைகள் சாப்பிடுவது இல்லை. இதெல்லாம் எங்கே! :( பலாப்பழம் எனக்கும் பிடித்தது, அங்கே சக்கை கிடைக்குமே!

   Delete
 2. பலாப்பழப் பச்சடி - பச்சடியாக சாப்பிடுவதை விட சுளையாகச் சாப்பிடவே பிடித்திருக்கிறது. பலாப்பழம் சாப்பிடவே சீசனில் ஊருக்கு வர வேண்டும் போல இருக்கிறது! :) வடக்கே இருப்பவர்களுக்கு பலாக் காய் தெரிந்த அளவிற்கு, அதனை பழமாகவும் சாப்பிடலாம் என்பதே தெரிந்திருப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. பலா, நுங்கு, நல்ல மாவடு/மாங்காய்/மாம்பழம் - இதெல்லாம் நீங்க மிஸ் பண்ணறீங்க. அங்க வாழப்பூலாம் கிடைக்குதோ?

   Delete
  2. வாழைப்பூவெல்லாம் யார் வீட்டிலாவது பூத்திருந்தால் கொடுப்பாங்க, நாங்க இருந்தப்போ! அதே போல் முருங்கைக்காயும்! இப்போல்லாம் தில்லியில் பூஷணி, புடலை,போன்றவையும் கிடைக்க ஆரம்பித்து விட்டன.

   Delete
  3. பலாப்பழம் சாப்பிட ஊருக்கு வாங்க வெங்கட்!

   Delete
 3. அடக் கடவுளே.... இனிப்புப் பச்சடியா? மாங்காய் பச்சடி தவிர வேறு எதையும் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.

  இங்க பலாப்பழம் வர ஆரம்பித்துவிட்டது. 3 சுளை பத்து ரூபாய். நேற்று காலை சென்னையில் கால்கிலோ 50 ரூபாய்னு சொன்னாங்க.

  ReplyDelete
  Replies
  1. வீட்டில் நடக்கும் சமாராதனை, சின்ன அளவிலான விசேஷங்களுக்கு உங்க வீடுகளில் இனிப்புப் பச்சடி போட மாட்டாங்க போல! நாங்க இரு வகைப்பச்சடியும் போடுவோம். தயிர்ப்பச்சடி, வெள்ளரிக்காய், தக்காளி, காரட் போட்டு. அப்புறமா இனிப்புப் பச்சடி பழங்களோடு

   Delete
 4. ஏதோ... ஃப்ரூட் சாலட் மாதிரி பண்ணிட்டு அதனைப் பச்சடி என்று சொல்லும் தைரியம் எங்க கீதா சாம்பசிவம் மேடத்துக்குத்தான் உண்டு.

  உங்க தளம் லேப்டாப்புலதான் ஓபன் ஆகுது. அதனால்தான் படித்துக் கருத்திட தாமதம்

  ReplyDelete
  Replies
  1. கிட்டத்தட்ட ப்ரூட் சாலட் தான். ஆனால் இங்கே சொல்லி இருப்பது பழப்பச்சடி.

   Delete
 5. பலாப் பழப் பச்சடியா?  கேள்விப்பட்டதில்லை. வெங்கட் சொல்வது மாதிரி அப்படியே சாப்பிட்டுடலாம்!  ஹா..  ஹா..  ஹா...

  ReplyDelete
  Replies
  1. செய்து பாருங்க ஸ்ரீராம். பிடிக்கும்.

   Delete