எலுமிச்சைச் சாதம் அவ்வளவா போணி ஆகலை. அதனால் பரவாயில்லை. இப்போ வேறே சாதங்களைப் பார்ப்போம். அடுத்து வருவது வெல்லச் சாதம். சர்க்கரைப் பொங்கலுக்கும் இதுக்கும் வித்தியாசம் உண்டு. பொங்கல் அரிசி, பருப்புச் சேர்த்துப் பால் விட்டுக் குழையப் பண்ணுவோம். பின்னர் வெல்லம் சேர்த்துக் கிளறுவோம். தேங்காய்த் துருவல் சேர்ப்பதில்லை. தேவையானால் தேங்காயப் பல்லுப் பல்லாகக்கீறிச் சேர்க்கலாம். ஆனால் பதினெட்டாம் பெருக்குப் போன்ற விசேஷ நாட்களில் வெல்லச் சாதமே பண்ணுவார்கள்.
இதுக்கும் சாதத்தைப் பொல பொலவென வடிச்சுக்கணும். ஒரு தட்டில் நெய்சேர்த்துக் கிளறி ஆற விட வேண்டும். தேங்காயைச் சீராகத் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பூத்துருவலாக இருக்க வேண்டும். இப்போது அடுப்பில் வாணலி(அலுமினியம்)யை வைத்து அல்லது வெண்கல உருளியில் ஒரு கிண்ணம் தேங்காய்த் துருவலைப் போட்டு அதிலேயே வெல்லத் தூள் அரைக்கிண்ணம் சேர்க்கவும். நல்ல பாகு வெல்லமாக இருந்தால் நல்லது.
வெல்லமும் தேங்காயும் சேர்ந்து வரும். பாகு பதம் வரும்போது ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கிளறவும். அடியில் ஒட்டாமல் வரும். அடுப்பை நிறுத்திக் கீழே இறக்கி வைத்துவிட்டு ஆறிய நெய் சேர்த்த சாதத்தைப் போட்டுக் கிளறவும். சாதமும் பூரணமும் நன்றாய்க் கலக்க வேண்டும். நன்கு கலந்த பின்னர் ஏலக்காய் ஐந்தாறை எடுத்துப் பொடி சேய்து சேர்த்துக் கலக்கவும். இதற்கு முந்திரிப்பருப்பெல்லாம் தேவை இல்லை. விரும்பினால் போட்டுக் கொள்ளலாம்.
அடுத்து எள்ளுச் சாதம்
இதுக்கும் வடித்த சாதத்தை ஆற வைச்சு உப்புச் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு நன்கு கலந்து விடவும். நல்ல கறுப்பு எள்ளைக் களைந்து கொண்டு வடிகட்டிப் பின்னர் வெறும் இரும்பு வாணலியில் போட்டு நன்கு வாசனை வரும்படி வறுக்கவும். 50 கிராம் எள்ளுக்கு இரண்டு பட்டை மிளகாய் (மிளகாய் வற்றல்) சேர்க்கவும். எள்ளை வறுத்த சூட்டிலேயே வத்தலையும் போட்டு அதற்கேற்ற அளவில் உப்புச் சேர்க்கவும். சாதத்தில் ஏற்கெனவே உப்புப் போட்டிருப்பதால் கவனமாக உப்புச் சேர்க்க வேண்டும். பின்னர் கொஞ்சம் ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டுப் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு சிலர் இதற்குத் தாளிக்கும் வெள்ளை உளுத்தம்பருப்பும் சேர்ப்பார்கள். தோசை மிளகாய்ப் பொடி மாதிரி இருக்கும் என்பதால் நான் சேர்ப்பதில்லை. இந்த எள்ளுப் பொடியைத் தேவையான அளவுக்குச் சாதத்தில் போட்டு நன்கு கலக்கவும். இதுக்கும் மோர்க்குழம்பு நன்றாக இருக்கும். எள்ளுப்பொடி/மோர்க்குழம்பு என் புக்ககத்தில் பிரபலமான ஒன்று. சாதாரண நாட்களிலேயே சனிக்கிழமை அன்று ஒரு மாறுதலுக்காக இதைச் செய்வார்கள்.
இந்த எள்ளுப்பொடி தென் மாவட்டங்களில் காரமாக இல்லாமல் வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்துப் பண்ணூவார்கள். அங்கே எல்லாம் காரமான எள்ளுப் பொடியைப் பார்க்க முடியாது. எள்ளை நன்கு வறுத்த பின்னர் மிக்சி ஜாரில் அதோடு வெல்லப் பொடியைச் சேர்த்துக் கொண்டு ஒரே சுத்துச் சுத்திவிட்டுத் தேங்காய்த் துருவலையும் சேர்ப்பார்கள். உப்புச் சேர்க்காமல். இதில் தான் சாதம் கலப்பார்கள். புரட்டாசி சனியன்று வெங்கடாசலபதி சமாராதனையில் இந்த எள்ளுச் சாதம் அங்கெல்லாம் பிரபலமான ஒன்று.
பெருங்காயம் கூட போட வேண்டாம் என்கிறீர்களா? ஒருமுறை செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteNo perungayam to ellu rice.
Deleteஎள்ளின் வாசனையே போதும் ஸ்ரீராம். பெருங்காயம் தேவை இல்லை.
Deleteநம் வீட்டிலும், எள்ளுச்சாதம் இப்படித்தான் கீதாக்கா. வெல்லம் சேர்த்து. உ ப போடாமல்.
Deleteசில உ ப வறுத்துப் போட்டும் செய்யறாங்க. நீங்க சொல்வது போல் எள்ளு மிளகாய்ப் பொடி போன்று ஆகிவிடும். (அதாவ்து கடலைப்பருப்பு எல்லாம் போடாமல்)
ஆனால் சாதத்துக்கு நான் சேர்ப்பதில்லை உங்க மெத்தட் தான்.
தோசை இட்லிக்கு உ ப மட்டும் சேர்த்துச் செய்யும் எள்ளுப் பொடி ரொம்ப நன்றாக இருக்கும். உ ப எள்ளு மிள்காய் வறுத்து உப்பு போட்டுப் பொடித்து.
கீதா
ஸ்ரீராம் எள்ளுச்சாதத்துக்குப் பெருங்காயம் தேவையில்லை. அது கொஞ்சம் சுவையை மாறுபடச் செய்யும் என்பதோடு எள்ளு வாசனையே போதும் அதுதான் தூக்கலாகவும் இருக்கும்.
Deleteகீதாக்கா சொன்னதுதான்.
கீதா
வெல்லச் சாதம் இதுவரை சுவைத்தது இல்லை. எள்ளுச் சாதம் சாப்பிட்டது உண்டு. இப்போதெல்லாம் எள்ளுப்பொடி, பருப்புப்பொடி போன்ற பொடி வழிகள் வீட்டில் செய்வதில்லை.
ReplyDeleteநெல்லையும் சொல்லி இருகாரே. எனக்கு ஆச்சரியமா இருக்கு வெங்கட். ரொம்பவே எளிதாய்ப் பண்ணிடலாம்.
Deleteஇந்த கலந்த சாதங்(னை)களை கு கு போலும் வேண்டாம் என்று சொல்லிவிடும். சைவ இறால் (பனீர்) தொக்கு, சைவ மட்டன் (சோயா உருண்டைகள்) சுக்கா, சைவ அயிரை மீன் (வாழைப்பூ) குழம்பு என்று புது விதமாக ஏதாவது எழுதுங்களேன். உதாரணமாக சைவ கோழி (காலிபிளவர் பகோடா) குருமா செய்முறை என்று பதிவிடலாம்.
ReplyDeleteஅந்தக்கால சினிமாக்களில் கிளப் டான்ஸ் இருந்தது போல் இவை வாசகர்களை இழுக்கும்.
Jayakumar
வருபவர்களையும் வரவிடாமல் செய்துவிடுவீர்கள் போலிருக்கே
Deleteஅவருக்கு இதில் ஒரு சந்தோஷம்! :(
Deleteஇதுவரை வெல்லச் சாதம் எண்ணியதில்லை. சாப்பிட்டதும் இல்லை. செய்துபார்க்கணும்
ReplyDeleteஆச்சரியமா இருக்கு நெல்லை. அப்போப் பதினெட்டாம்பெருக்குக்குச் சர்க்கரைப் பொங்கல் ப்ண்ணுவாங்களோ?
Deleteஆமாம். இனிப்புக்குச் சர்க்கரைப் பொங்கல்தான்.
Deleteஎள்ளுச்சாதம் என் வீட்டில் (அம்மா) மற்றும் இளமையில் வெல்லம் சேர்த்ததுதான் சாப்பிட்டிருக்கிறேன். எனக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும் என்பதால் எள் சாதம் அவ்வளவு இஷ்டம். மனைவி வெல்லம் சேர்க்கமாட்டார் காரமா இருக்கும். என் வற்புறுத்தலுக்காக எனக்கு மாத்திரம் இனிப்பு சேர்த்துப் பண்ணுவார்.
ReplyDeleteஹாஹா, நெல்லை, உங்க மனைவி மாதிரி நான் மட்டும் எங்க வீட்டில் பண்ணி இருந்தால் என் மாமியார் என்னைப் பிறந்த வீட்டுக்கே அனுப்பி இருப்பார். தினசரி சமையலில் இருந்து எதுவும் மாற/மாற்றக் கூடாது. அதுவும் என் கடைசி நாத்தனார் அம்பத்தூரில் உள்ளூரிலேயே இருந்ததால் தினம் தினம் எங்க வீட்டு வந்துடுவார். சமையல் என்னனு கேட்டுட்டு சாம்பார் வைக்கலைனால், உடனே ஒரு அமர்க்களம் நடக்கும். உடனே பருப்புப் போட்டு சாம்பார் தான் வைக்கணும். இருந்து சாப்பிட்டு விட்டுப் போவார். அவங்க வீட்டில் ரசம், கூட்டுனு பண்ணினாலோ, துவையல், வத்தக்குழம்புனு பண்ணினாலோ அழுது கொண்டே இங்கே வந்துடுவார். பல வருஷங்கள் இது தொடர்ந்தது. ஒரு தரம் தேங்காய்ச் சட்னிக்கு நான் பொ.கடலை (ரங்க்ஸுக்குப் பிடிக்கும்) வச்சு அரைச்சதுக்கு அமர்க்களம் பண்ணி அரைக்கக் கூடாதுனு சொல்லப் பின்னர் வேறு வழியில்லாமல் நானும் வெறும் தேங்காய் மட்டுமே அரைச்சு வைக்க சாயங்காலம் நம்மவர் வந்து தட்டைத் தூக்கிப் போட்டு அமர்க்களம் செய்ய அதன் பின்னர் நாத்தனார் கொஞ்சம் அடங்கினார். இது நடக்கையில் கல்யாணம் ஆகி (எனக்கு) 30 வருஷம் இருக்கும். :)))))))))
Deleteகடைசி நாத்தனார் வந்துட்டால் அவங்க சொல்றது தான் வீட்டில் செய்யணும். மாமாவுக்குச் சாப்பாடு போடக் கூட என்னை விட மாட்டாங்க. நான் எங்க வீட்டுப் பழக்கத்தில் போட்டுடுவேன் என்று சொல்லிக் கொண்டு என் மாமியாரையும் அவங்களையும் தவிர யாருமே செய்யக் கூடாதுனு பிடிவாதமா இருப்பாங்க. எல்லாத்தையும் கடந்து தான் வர வேண்டி இருந்தது. :))))))
Deleteஎனக்கும் காரம் சேர்த்த எள்ளுப் பொடி, மிளகாய்ப்பொடிக்கு எள் சேர்ப்பது எல்லாமே கல்யாணம் ஆகி வந்து தான் தெரியும் நெல்லை. அநேகமாய்த் தஞ்சை ஜில்லாச் சிறப்புனு நினைக்கிறேன். ஆனா உங்க மனைவி மாதிரி நான் வெல்லம் போட்டு எள்ளுப் பொடி பண்ணிச் சாதம் கலந்தால் வீட்டிலேயே இருக்க முடியாது. இஃகி,இஃகி,இஃகி.
ReplyDeleteவெல்லப்பொடி சேர்க்காமல் எள்ளு சாதம் மனைவி செய்தால் அதற்கு கஸ்டமர் நான் இல்லை. ஹா ஹா ஹா. ஆனால் மிளகாய்ப்பொடிக்கு எள்ளு (கருப்பு) வறுத்துச் சேர்க்காமல் இருந்ததில்லை. அது சரி, பெண்கள், அவங்க வீட்டுச் சமையலை (அம்மாவிடம் கற்றுக்கொண்டது) எப்படி தன் குழந்தைகளுக்குக் கடத்துவாங்க? இப்படி, வாய்த்த கணவன், தன் வீட்டு முறையிலேயே செய்து போடணும் என்றால்? இன்று இந்த டாபிக் வீட்டில் வந்தது. கணவன், அவனுக்குத்தான் இப்படிச் செய்யணும் என்று சொல்வானே தவிர, என் குழந்தைகளுக்கும் அப்படியே செய் என்று சொல்லமாட்டானே. அதனால் அவங்களுக்கு, தன் வீட்டு முறையிலேயே செய்துகொடுக்கலாமே
Deleteஆமாம் கீதாக்கா எனக்கும் மிளகாய்ப்பொடிக்கு எள் சேர்ப்பது எல்லாம் திருமணத்திற்குப் பின் தான் அது வரை அது சேர்த்து தெரியாது.
Deleteஆமாம் தஞ்சை ஜில்லா செய்முறை என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. ஏன்னா அதுக்கு அப்புறம்தானே தெரிந்து கொண்டேன்.
கீதா
மாமியார் இல்லைனால் எங்க வீட்டு முறையிலும் சமைத்துப் போடுவேன். மாமனார் உள்பட மைத்துனர்கள் எல்லோரும் சாப்பிடுவாங்க. கடைசி நாத்தனார் வந்தால் தான் கஷ்டம். உடனே அம்மாவுக்குச் செய்தி போயிடும். மாமனார் இதுவும் ஒரு மாறுதலா இருக்குனு சொல்லிட்டா உடனே அப்பாவுடன் கிட்டத்தட்டச் சண்டை போடுவாங்க. மாமனாரோ கண்டுக்க மாட்டார். நேரே எங்க வீட்டுக்கே போய்ச் சாப்பிட்டு வருவார். (பின்னாடித் தெருதானே எங்க வீடு. அண்ணா, மன்னி இப்போவும் அங்கே தான் இருக்காங்க. கடைசி நாத்தனாரும் அங்கே தான் இருக்காங்க. நல்லவேளையா நாங்க அம்பத்தூரிலிருந்து கிளம்பினோம்னு பேசிப்போம். :))))))
Deleteமாமனார் சாப்பாட்டு ரசிகர். விதம் விதமாச் சமைத்துப் போட்டால் பிடிக்கும். நாங்க த;னியா இருந்தப்போ எல்லாம் அவர் வந்திருக்கார். ரசித்துச் சாப்பிடுவார். ஆனால் கூட்டுக்குடும்பமா இருந்தப்போ மாமியாரை மீறி எதுவும் செய்ய முடியாது. நாங்க சேர்ந்து இருந்தவரை மாமனார் மாமியார் இல்லாதப்போ எல்லாம் சில உணவுகளைச் சமைத்துத் தரச் சொல்லிச் சாப்பிடுவார். அடிக்கடி மத்தவங்க வீட்டில் இருந்தும் உணவுகளை வாங்கி வைத்துக் கொண்டு சாப்பிடுவார்.
Deleteநாங்க சேர்ந்து இருக்க ஆரம்பிச்ச புதுசில் தோசைக்கு, சப்பாத்திக்குத் தக்காளிச் சட்னி, வெங்காயச் சட்னி, வெஜிடபுள் குருமா, வெங்காயப் பச்சடி, வெஜிடபுள் சாதம் எனப் பண்ணிட்டு மாமியாரிடம் நன்றாக வாங்கிக் கட்டிப்பேன். கிட்டத்தட்ட தினத்தந்தி தலைப்புச் செய்தி போல அது எல்லோருக்கும் போகும். சிரித்துக் கேலி செய்வார்/ அதெல்லாம் சமைத்தால் பின்னர் அடுப்பை நன்றாக அலம்பிட்டு அந்தச் சமையலைத் தனியாக எல்லாவற்றுடன் சேர்க்காமல் வைக்கணும் என்பார். எங்க ரூமில் கொண்டு வைச்சுப்பேன். :)))))) வேலை செய்யும் பெண்ணிறுக் காஃபி கொடுத்தாலே அடுப்பை அலம்பணும் என்பார். ஆகவே தனியாக இருந்த ஸ்டவ்வில் தான் அவளுக்குக் காஃபி கொடுப்பேன். . நான் வீட்டுக்குள் வரமுடியாத சமயங்களில் அந்த ஸ்டவ்வில் தான் எனக்குக் காஃபி, சாப்பாடு எல்லாம். :)))))) நாத்தனார்கள் மூவரும் பொதுவான சாப்பாட்டைச் சாப்பிடலாம். தடை இல்லை. எனக்கும் வேலை செய்யும் பெண்ணிற்கும் தான் தனியாகப் பண்ணுவாங்க.
Deleteவெல்லச்சாதம் தான், கீதாக்கா இங்க சர்க்கரைப் பொங்கல்னு கோவில்ல பிரசாதம். அதுல தேங்காயைத் துருவிப் போட்டிருப்பாங்க இல்லைனா நீங்க சொன்னது போல் கீறிப் போட்டிருக்காங்க. சர்க்கரைப் பொங்கல் போல நன்றாகத் திரட்டி எல்லாம் செய்வதில்லை. பொதுவாகவே இங்கு நம்ம ஊர் சர்க்கரைப் பொங்கல் போல இல்லை கோவில்களில்
ReplyDeleteகீதா
நிமிஷாம்பா, தலக்காவேரி போன்ற கோயில்களில் உள்ள லட்டு நன்றாக இருக்கும். கர்நாடகா சர்க்கரைப் பொங்கலில் தேங்காய் துருவல்/கொட்டைத்தேங்காய் சில்லுகள் போட்டிருப்பாங்க. மேல்கோட்டையில் என்னடான்னா, சர்க்கரைப் பொங்கலையே மேல்கோட்டையில்தான் கண்டுபித்தாங்க என்று சொல்கிறார்கள் (அப்புறம் ஆண்டாள் மூடநெய் முழங்கை வழிவார என்றெல்லாம் கேட்கக்கூடாது)
Deleteசர்க்கரைப்பொங்கல் எல்லாம் மிகப் பழைய உணவு வகை. சங்கத் தமிழில் மோர்க்குழம்பு பற்றிக் கூட வந்திருக்கு. ஆண்டாள் எல்லாம் சொன்னது மேல்கோட்டை வரை வந்திருக்க வாய்ப்பு இருக்கு. ராமானுஜர் மூலமாத் தெரிஞ்சிருக்கும்.
Deleteவெல்லச்சாதம் உண்டு பதினெட்டாம் பெருக்கிற்கு. இதே மெத்தட்தான் கீதாக்கா.
ReplyDeleteஆமாம் தென்மாவட்டங்களில்தான் வெல்லம் போட்ட எள்ளுச்சாதம்.
கீதா
எங்க வீட்டு முறையில் செய்யப்படும் கத்திரிக்காய்க் கூட்டு, மோர்க்குழம்பு (எனக்குப் பிடித்த உணவு) இதெல்லாம் நாங்க தனியாக இருக்க ஆரம்பிச்சப்புறமாச் செய்ய ஆரம்பித்தேன். ஆனால் ஒரேயடியாய் அப்படி இல்லாமல் மாற்றி மாற்றிப் பண்ணுவேன். பெரும்பாலும் சாம்பார் வாரம் இரு முறை தான். பொரிச்ச குழம்பு, மோர்க்குழம்பு, வற்றல் குழம்பு, துவையல்,டாங்கர் பச்சடி, பிசைந்த சாத வகைகள்னு மாத்தி மாத்திப் பண்ணுவேன். சாம்பாரே தினம் பண்ணினதில்லை.
ReplyDelete