எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, October 3, 2014

நவராத்திரிச் சுண்டல் வகைகள்! வேர்க்கடலைச் சுண்டல்!

வேர்க்கடலைச் சுண்டல்

வேர்க்கடலை கால் கிலோ

தாளிக்க எண்ணெய்  ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு

மி.வத்தல்,

கருகப்பிலை

உப்பு தேவையான அளவு

பெருங்காயம்

தேங்காய்த் துருவல்  இரண்டு டேபிள் ஸ்பூன்

வேர்க்கடலையை முதல் நாளே களைந்து ஊற வைக்கவும்.  மறுநாள் வழக்கம் போல் நீரை மாற்றிக் கொண்டிருக்கவும்.  பின்னர் குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.  வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு, மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்து வெந்த வேர்க்கடலையை நீரை வடித்துவிட்டுச் சேர்க்கவும்.  இதற்கு மி.வத்தல், தனியா வறுத்துப் பொடி செய்த பொடி போடலாம் அல்லது சாம்பார்ப் பொடியே போடலாம்.  அவரவர் விருப்பம் போல்!  பின்னர் தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.  கீழே இறக்கி விநியோகம் செய்யலாம்


நவராத்திரி இல்லாத சாதாரண நாளில் வேர்க்கடலையை வேக வைத்துக் கொண்டு, பச்சை மிளகாய், இஞ்சி தாளித்துக் கொண்டு, கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் காரட் துருவல், தேங்காய்த் துருவல், சேர்த்துக் கிளறி இறக்கும்போது  வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்துப் பச்சைக் கொத்துமல்லி தூவி சாட் மசாலா மேலே சேர்த்துவிட்டுப் பின்னர் சாப்பிடலாம்.


3 comments:

  1. எத்தனை எத்தனை சுண்டலடா... அவை எல்லாம் தின்றால் இன்பமடா' என்று பாடலாமா? :))))

    ReplyDelete
    Replies
    1. பாடுங்க, பாடுங்க! பின்னூட்டம் எல்லாம் தானே மறுபடி வர ஆரம்பிச்சிருக்கு போல! :))))

      Delete