எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, July 3, 2014

என்னதான் திரும்பத் திரும்பச் சமைக்கிறது! :)

கொஞ்ச நாட்களா இந்தப்பக்கம் வர முடியலை. வேலையும் இருந்தது என்றாலும் திடீர்னு ஒரு அலுப்பு, சலிப்பு. எல்லாத்திலேயும் தான்.  அதுக்காக வழக்கமான வேலைகளைக் குறைச்சுக்கல்லாம் இல்லை.  அதது அததுபாட்டில் நடக்கிறது. தினம் தினம் என்ன டிஃபன் பண்ணறது?  அதுவும் இரண்டு வேளை பண்ணணும். இட்லி, தோசை, ஊத்தப்பம், ஆனியன் ஊத்தப்பம், வெந்தய தோசை, பொஹா எனப்படும் அவல் உப்புமா, புளி அவல், சேமியா, ரவை உப்புமாக்கள், அரிசி உப்புமா, ஜவ்வரிசி உப்புமா, புளி உப்புமா, மோர்க்கூழ், சப்பாத்தி, ஃபுல்கா ரொட்டி,  பரோட்டா(ஒரிஜினல், மைதா புரோட்டா இல்லை), பூரி, சேவை னு எல்லாமும் பண்ணி அலுத்தாச்சு.

திடீர்னு ஒரு வெற்றிடம் வந்தாப்போல் எண்ணம். அப்போத் தான் ரங்க்ஸ் காஞ்சிபுரம் இட்லி வேணாப் பண்ணேன் ஒரு மாறுதலுக்குனு கேட்டார். காஞ்சிபுரம் இட்லினாலே அதாலேயே என்னை அடிக்க வரும் மனுஷன் காஞ்சிபுரம் இட்லி கேட்கிறார்னா இந்த ஶ்ரீரங்கம் வெயிலிலே அவருக்கு ஏதோ ஆச்சுனு நினைச்சேன்.  சரினு நேத்திக்கு காஞ்சிபுரம் இட்லிக்குனு அரைச்சு வைச்சேன்.

சரியா ஒரு வேளைக்கு மட்டும் வராப்போல் அரைக்கணும்னு ரங்க்ஸ் சொல்றார்.  அது எப்படி முடியும்? கொஞ்சமாவது மிஞ்சாதா?  மிக்சி ஜாரில் முக்கால் பாகத்துக்காவது வரும்படி சாமான்களைப் போட்டால் தானே அரைபடும்.  இதெல்லாம் அவருக்குப் புரியறதில்லை. :( எல்லாம் அரை, அரை ஆழாக்குத் தான் போட்டேன்.  அதிலேயே மாவு மிச்சம். அதை எப்படியானும் செலவு செய்யணும்.  தினம் பத்துப் பேருக்குக் குறையாமல் சமைச்சுட்டு இப்போ இரண்டு பேருக்குச் சமைக்கிறது சொப்பு வைச்சு விளையாடுவது போல் இருக்கு. அப்படித் தான் விளையாடிட்டு இருக்கோம். :)  இன்னிக்குப் பண்ணும்போதே படங்களும் எடுத்துட்டேன்.  படங்களைக்கணினியில் இணைக்கணும்.  இணைச்சுட்டுச் செய்முறையும் எழுதறேன்.

7 comments:

  1. //தினம் பத்துப் பேருக்குக் குறையாமல் சமைச்சுட்டு இப்போ இரண்டு பேருக்குச் சமைக்கிறது சொப்பு வைச்சு விளையாடுவது போல் இருக்கு. அப்படித் தான் விளையாடிட்டு இருக்கோம். :) //

    :)))) கஷ்டம் தான். ஒருத்தருக்கு மட்டும் சமைக்கிறது இன்னும் கஷ்டம்!

    ReplyDelete
    Replies
    1. ஹெஹெஹெ ஒருத்தருக்குன்னா சமைக்கவே வேண்டாம்! :)

      Delete
  2. அம்மம் தினமும் என்ன செய்வது என்பது ஒரு பெரிய புதிர் தான். எதை நினைத்தாலும் இப்ப தானே சாப்பிட்டோம் என்றிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், மண்டையை உடைச்சுட்டு யோசிக்கணும்.

      Delete
  3. Replies
    1. நேத்திக்குத் தான் டிடி. நேத்திக்குத் தான் செய்தேன். அதிசயமா சூட்டோடு சூடாப் படங்களையும் எடுத்துப் போட்டுட்டேனே! :)

      Delete
  4. இங்கயும் இரண்டு பேருக்கு என்ன பண்ணினாலும் மிஞ்சு தான் போறது...:))

    ReplyDelete