நேத்திக்கு இட்லி மாவு மிச்சம். செய்முறைப் பதிவிலே சொன்னபடிக்கு நான் ஒரு கிண்ணம் எல்லாம் போடலை. அரைக்கிண்ணம் தான் எல்லாமும் போட்டேன். அப்படியும் மிச்சம் தான். அதை இன்னிக்கு வேறே மாதிரிப் பண்ணப் போறேன். என்னனு யோசிச்சு வைங்க. ராத்திரி டிஃபன் செய்ததும் படம் எடுத்துப் போட்டுப் பகிர்ந்துக்கறேன்.
நீங்களே சொல்லிடுங்க...
ReplyDeleteஹை, யோசிக்க வேண்டாமா? :)
Deleteகுணுக்கு ...?
ReplyDeleteகிட்டத்தட்டக் கிட்டே வந்துட்டீங்க ராஜலக்ஷ்மி, அத்தனை மாவையும் எப்படி குணுக்காப் போடறது? அதனால் அடையாக வார்த்தேன். கொஞ்சம் பருப்புக்கள் சேர்த்து. :)))))
Deleteபடம் எடுத்து வைச்சிருக்கேன், மத்தியானமாப் போடணும். அடை வார்க்கிறச்சே பையர் ஃபோன் வந்ததாலே அதை எடுக்க மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்! :)
Deleteவார்த்தவுடன் எப்படி வந்தது என்றும் படம் போட்டிருக்கலாமே....
Delete+ கோதுமை மாவு..?
ReplyDeleteஇல்லை டிடி.
Delete'விடாதே பிடி'னு சொல்வாங்க அந்த ஐட்டத்தை.
ReplyDeleteஹாஹா! அப்பாதுரை, இது என்ன ப்ரொஃபைலிலே புதுசாப் படம்? :)
Deleteஓ அடையா..... :)
ReplyDeleteஅட?? ஆமாம், வெங்கட்!
Deleteபிடித்துவிட்டோம். :))
ReplyDeleteஹாஹா, மாதேவி, வாழ்த்துகள்.
Deleteயானும் அமேரிக்கக் குளிர் இடத்திலே ... எத்தனை எத்தனையோ வகைகளில் இட்லி செய்ய முயன்றிருக்கிறேன். சில முயற்சிகளை என் வலைத்தளத்தில் பதிந்திருக்கிறேன் (http://viruntu.blogspot.com). ஒன்றுமே முழு வெற்றியில்லை. அதென்ன மாயம் -- அரிசியிலோ, உழுந்திலோ, தண்ணீரிலோ, வெப்ப நிலையிலோ ... தமிழக இட்லி வெளிநாட்டில் வரவே வராது!
ReplyDeleteஇந்தக் காஞ்சி இட்லியையும் நடித்துப் பார்த்திருக்கிறேன். ஹ்ம்ம் ஹும்ம் ... ஒன்றும் சரியில்லை. ஆனால் அடை சரியாக, அமர்க்களமாக வந்தது!!! :-)
இட்லி தமிழகத்தில் மட்டுமே! புலம் பெயர்ந்த இடங்களில் கண்ட கண்ட சேர்க்கை (ஈனோ, பேக்கிங் சோடா போன்றவை). வயிற்றில் உப்புசம் உண்டாக்கும். ஜாக்கிரதை.
'காஞ்சி அடை' தயார். சாப்பிடலாம் வாங்க!
இப்படிக்கு,
ராஜம்
வாங்க ராஜம் அம்மா! லாங்க் கிரெயின் அரிசியிலே கூட இட்லி வரலையா? காஞ்சி அடை சாப்பிட இதோ வரேன். கொஞ்சம் லேட்(ஒரு மாசம்) :)
Delete