எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, May 16, 2014

பருப்புக் கலவை சப்பாத்திக்கு!



படத்துக்கு நன்றி கூகிளார்:

ஹிஹிஹி, முதல்லே இதைப் போடணும்னு நினைக்கலை. அதான் நேத்திக்குப் படம் எடுக்கலை.  திரும்ப ஒரு நாள் பண்ணுவேன். அப்போ நினைவா எடுத்துடணும். முடிச்சுப் போட்டு வைச்சுக்கறேன்.  செரியா?

எப்போவும் சப்பாத்திக்குக் காய்கள் ஏதானும் தான் பண்ணுவேன். மத்தியானம் சாப்பாடுக்குச் சப்பாத்தி பண்ணினால் சில சமயம் தால், ரொட்டி, சப்ஜி பண்ணிட்டு மோர்சாதமாச் சாப்பிட்டுக்குவோம்.  நேற்று ராத்திரிக்குச் சப்பாத்தி.  திரும்பத் திரும்ப காய் எல்லாம் பண்ணி அலுத்துப் போச்சு. ரங்க்ஸ் கிட்டே கேட்காமலேயே மிக்சட் தால் பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டு மாலை காஃபி கலக்கும்போதே தால் எல்லாம் எடுத்து ஊற வைச்சேன்.  நான் இரண்டு பேருக்குத் தான் பண்ணினேன்.  இங்கே அளவு நான்கு பேருக்கானது சொல்றேன்.

துவரம்பருப்பு  ஒரு சிறு கிண்ணம்

கடலைப்பருப்பு  அரைக்கிண்ணம்

பாசிப்பருப்பு         அரைக்கிண்ணம்

உளுத்தம்பருப்பு  கால் கிண்ணம்

நான்கையும் நன்கு கழுவிக் களைந்து குறைந்தது ஒருமணி நேரம் ஊற வைக்கவும்.

தேவையான பொருட்கள்

தாளிக்க

ஜீரகம், சோம்பு

பச்சை மிளகாய்  2

இஞ்சி      ஒரு சின்னத் துண்டு

கருகப்பிலை

மி.வத்தல் ஒன்று

பெருங்காயம் (தேவையானால்)

வெங்காயம்   2 பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

தக்காளி         3 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

மிளகாய்த் தூள்  ஒரு டீஸ்பூன்

தனியாத் தூள்  ஒரு டீஸ் பூன்

மஞ்சள் தூள்   அரை டீஸ்பூன்

ஜீரகத் தூள்       அரை டீஸ்பூன்

மிளகுத் தூள்   கால் டீஸ்பூன்

வெந்தயப் பொடி  கால் டீஸ்பூன்

கரம் மசாலாப்பொடி  அரை டீஸ்பூனில் இருந்து ஒரு டீஸ்பூனுக்குள் அவரவர் தேவைக்கேற்ப

தயிர் கெட்டியாக அரைக்கிண்ணம்

உப்பு தேவையான அளவு

பச்சைக் கொத்துமல்லி அலங்கரிக்க

சர்க்கரை  ஒரு டீஸ்பூன்

எண்ணெய்  ஒரு டேபிள் ஸ்பூன்


ஊறிய பருப்பைத் தேவையான உப்புச் சேர்த்து, மஞ்சள் பொடி கால் டீஸ்பூன் போட்டு நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாய் அல்லது வாணலி அல்லது ப்ரஷர் பானில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், முதலில் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும், ஜீரகம், சோம்பு தாளித்துப் பின் பச்சை மிளகாய், இஞ்சி, மி.வத்தல், பெருங்காயம் சேர்க்கவும்.  வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.  வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.  தக்காளி சேர்த்து வதக்கிக் கொண்டே மஞ்சள் பொடி, மி.பொடி. த.பொடி சேர்க்கவும்.  கொஞ்சம் வதக்கி விட்டுத் தயிர் அரைக்கிண்ணம் சேர்க்கவும்.  தக்காளி நன்கு வேகும் வரை தயிர் சேர்த்து வதக்கவும்.  பின்னர் ஜீரகப் பொடி, மிளகு பொடி, வெந்தயப் பொடி, கரம் மசாலாப் பொடி சேர்த்து சற்றுக் கிளறி விட்டு வேக வைத்த பருப்பை இதில் சேர்க்கவும்.  ஒரு மூடியால் மூடிச் சிறிது நேரம் கொதிக்க விடவும்.  பருப்பு தானே கெட்டியாக தோசை மாவு பதத்துக்கு வந்துவிடும்.  கொத்துமல்லி சேர்க்கவும்.

ஃபுல்கா ரொட்டி அல்லது பரோட்டா, (பராந்தா) வோடு பரிமாறவும்.

14 comments:

  1. இதென்ன இவ்வளவு வேலை! நாங்கள் பா.ப மட்டும் வேகவைத்து, உ.கி. வெங்காயம், ப.மி. கொ.ம சேர்த்து இறக்கி எ.ப பிழிந்து விடுவோம்!

    ReplyDelete
    Replies
    1. குக்கரில் வேக வைக்கும் நேரத்தையும் சேர்த்து அரை மணி நேரத்தில் ஆயிடும். :)) இது வட மாநிலங்களில் பிரபலமான ஒன்று. என்ன அவங்க இதிலே பூண்டும் போடுவாங்க. நாங்க பூண்டு சாப்பிடறதில்லைனாலே சேர்ப்பதில்லை.

      வேலை எல்லாம் எதுவும் இல்லை. வெங்காயம், தக்காளி நறுக்கி வைக்கிற வேலை ஒண்ணு தான். மத்த எல்லாம் பொடி தயாரா இருப்பதாலே அதைச் சேர்க்க வேண்டும். அம்புடே! :)))))

      Delete
  2. இவ்வளவு பருப்பு இருக்கே... செரிக்குமா...?

    ReplyDelete
    Replies
    1. அடைக்கு எல்லாப் பருப்பும் போடறோம் இல்லையா? சாதாரணமா ஆமை வடைனாக் கூட நான் மூணு பருப்பும் போடுவேன்.:))

      இது என்ன நிறையனு நினைச்சீங்களா? எல்லாப் பருப்பும் சேர்ந்து 100 கிராமுக்குள் தான் வரும். :)))) செரிமானத்துக்கும் வாயுக் கோளாறு வருமோனு பயந்தாலும் பூண்டு சேர்த்துக்கலாம். :))))

      Delete
  3. இதுக்கு இங்கே ஓட்டு விழுமோனு யோசிச்சேன். அதே போல் விழலை. :)))))

    ReplyDelete
  4. நல்ல கலவை. வடக்கில் இந்த போல தால் வகைகள் மிகவும் அதிகம் உப்யோகிக்கும் ஒன்று. பொதுவாக குஜராத் போன்ற இடங்களில் தான் சர்க்கரை சேர்ப்பார்கள். தில்லியில் சேர்ப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், பொதுவா மசாலா சேர்க்கும் சாமான்களில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் மசாலாவைத் தூக்கிக் காட்டும் எனச் சொல்வார்கள். ராஜஸ்தானில் கூடச் சேர்ப்பது உண்டு. :)

      Delete
  5. இது எப்பொழுதும் செய்வதுதானே. ராஜ்மா எப்படி சமைப்பது என்று சொல்லுங்கள். வீட்டில் சமைத்தால், வட நாட்டில் உள்ள டேஸ்ட் வருவதில்லை. ஒரு வேளை வயதும் காரணமா என்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பக்கிரிசாமி, உங்களை இங்கே பார்த்ததில் சந்தோஷம் அதிகமா, ஆச்சரியம் அதிகமானு சொல்ல முடியலை! :)))

      ராஜ்மா இங்கேயே போட்டிருக்கேன். சுட்டி எடுத்து இங்கே போடுகிறேன். தாமதமாய்ப் பார்த்ததுக்கு மன்னிக்கவும்.

      Delete
    2. பக்கிரிசாமி, ராஜ்மாவுக்கான சுட்டி கீழே! :)))

      http://geetha-sambasivam.blogspot.in/2011/11/blog-post_5862.html

      Delete
  6. எத்தனை நாள் ப்ரிஜ்ல வச்சு சாபிட முடியும்?

    ReplyDelete
    Replies
    1. ம்ஹூம், பருப்பெல்லாம் காலம்பர சமைச்சது சாயந்திரத்துக்கே வைச்சுக்க முடியாது அப்பாதுரை. அப்போ அப்போ புதுசாப் பண்ணிச் சாப்பிடறது தான் உடலுக்கும் நல்லது.

      Delete
  7. துவரம்பருப்பு சாப்பிடுவதை விட்டாச்சு. ப.பருப்புதான் இங்க தால்.நீங்க சொல்லி இருக்கும் ரெசிபி நன்றாக இருக்கிறது.பார்க்கவே ஆசையாக இருக்குமா கீதா. பெண்ணிடம் சொல்கிறேன். தால் மக்கனி இல்லாமல் இதைச் சாப்பிடலாமே..பெருங்காயம் உண்டோ இதில்/.

    ReplyDelete
  8. வாங்க ரேவதி, தால் மக்கனியும் நல்லா இருக்கும். ஆனால் எல்லோருக்கும் பிடிக்கிறதில்லை! :)

    ReplyDelete