இது குறிப்பாய் மதுரைப் பக்குவம்னு சொல்லலாம். அல்லது எங்க வீடுகளில் மட்டும் செய்து வரலாம். தெரியலை. ஆனால் யாரும் அதிகம் செய்து பார்த்திராத இதை நம்ம ரங்க்ஸ் கல்யாணத்துக்கு முன்னாடி தனியாச் சமைச்சுச் சாப்பிடறச்சே சாம்பார்ங்கற பேரிலே புளியே போடாமல் செய்து வந்திருக்கார். கல்யாணம் ஆனதுக்கப்புறமா என்னால் முடியாமல் போகும் தினங்களில் குழந்தைங்களுக்கு இந்த சாம்பாரைச் செய்து மேலே தெளிவாக் கிடைப்பதை ரசம்னு ஊத்திட்டு, அடியிலே கெட்டியா இருப்பதை சாம்பார்னு சொல்லிப்பார். இத்தோட அருமையான காம்பினேஷனா காரட்+தக்காளி+வெள்ளரிக்காய்+வெங்காயம்+கொத்துமல்லி+மிளகு+உப்பு சேர்த்த சாலட். தினம் தினம் புளி சேர்த்து சமையல் என்றால் ரொம்பவே சலிப்பாய் இருக்கும். அதற்கு ஒரு மாற்று இது. இப்போ நம்ம செய்முறை பத்திப் பார்ப்போமா? சாம்பாராவே தான் பண்ணுவேன். எனோட அம்மா இதை வாரம் ஒருமுறையாவது பண்ணுவாங்க. அதிலே போடும் மிளகாயெல்லாம் பிஞ்சு மிளகாயாக இருக்கும் என்பதால் மிளகாயோடு சேர்த்தே சாப்பிட்டிருக்கோம். இங்கே சின்ன மிளகாயே காரம் அதிகமா இருக்கு. சுமார் நாலு பேருக்குத் தேவையான அளவு
புளியே இதுக்கு வேண்டாம். ஆகவே இன்னிக்கு நோ புளி டேனு வைச்சுக்குங்க.
தக்காளி பெரிது எனில் 2
நடுத்தர அளவு எனில் 3 அல்லது 4
பச்சை மிளகாய்ப் பிஞ்சு எனில் 50 கிராம் அல்லது 5 பச்சை மிளகாய்(காரமுள்ளது)
சாம்பார்ப் பொடி அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் கால் டீ ஸ்பூன்
துவரம்பருப்பு குழைய வேக வைத்தது ஒரு கிண்ணம்
உப்பு தேவையான அளவு
கருகப்பிலை, கொத்துமல்லி
தாளிக்க எண்ணெய்
கடுகு, வெந்தயம்,
பெருங்காயம் ஒரு துண்டு
தேவையான அளவு தண்ணீர் குழம்பில் சேர்க்க. ஒரு கிண்ணம் போதும்.
தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பை முன்னதாக நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நான் ஸ்டிக் கடாய், வாணலி அல்லது உருளியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம், கருகப்பிலை தாளித்து நறுக்கி வைத்த தக்காளி, பச்சைமிளகாயைப் போட்டு வதக்கவும். மஞ்சள் பொடி, சாம்பார் பொடி சேர்த்துக் கொஞ்சம் வதக்கி விட்டு ஒரு கிண்ணம் நீரை ஊற்றித் தேவையான உப்புப் போடவும். தக்காளி நன்கு வேகும் வரை காத்திருந்து பின்னர் வெந்தபருப்பில் ஒரு கரண்டி நீர் விட்டுக் கரைத்துக் கொதிக்கும் குழம்பில் ஊற்றவும். ஒருகொதி வந்ததும் இறக்கிக் கொத்துமல்லி போடவும். சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற எதோடும் துணை போகும். இதிலேயே சின்ன வெங்காயமும் வதக்கிச் சேர்க்கலாம். அல்லது பெரிய வெங்காயம் நறுக்கி வதக்கிச் சேர்க்கலாம். சுவை மாறுபடும். படம் எடுத்திருக்கேன்.
அப்பாடா, ஒரு வழியாய் சமைக்கிறச்சேயே நினைவாய்ப் படம் எடுத்துட்டேன். :)
குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். செய்து பார்த்துடலாம்.
ReplyDeleteஶ்ரீராம், மதுரையிலெல்லாம் பிஞ்சுப் பச்சை மிளகாய் கிடைக்கும். அதிலே தான் புளிமிளகாய் (நான் செய்யும் முறை) செய்வார்கள். அந்த மிளகாய் எனில் இந்த சாம்பாருக்கு நல்லா இருக்கும். பச்சைமிளகாய் வேண்டாமெனில் குடைமிளகாய் போட்டுக்கலாம்.
Deleteபச்சை மிளகாய் காரத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது . கண்ணில் நீர் வந்து விடுமளவிற்கு அல்லவா பச்சை மிளகாய் காரம் ஏறும்.
ReplyDeleteஒரு நாள் போட்டுப்பாருங்க ராஜலக்ஷ்மி, பச்சைமிளகாய்க் காரத்துக்கும், தக்காளியின் புளிப்புக்கும் சமமாகவே இருக்கும். சாம்பார்ப் பொடிபோடுவது சும்மா நிறம் கொடுக்கவே. இல்லை எனில் குடைமிளகாயும் தக்காளியும் மட்டும் போட்டும் செய்து பாருங்கள்.
Deleteசெய்து பார்க்கிறோம் அம்மா... நன்றி...
ReplyDeleteபாத்திரத்தை படமெடுத்துட்டு சாம்பார் படம்னு சொன்னா எப்படி.. ஒரே ஒரு முறை சாப்பிட்டிருக்கிறேன். என் ப்ரெண்ட் ஜேம்ஸ் வீட்டில் க்ரிஸ்மஸ் போது. ப மியை நெய்யில் முழுசா வறுத்து போட்டு சாம்பார்ல போட்டிருந்தாங்க. ஒரே ஒரு முறை. சாப்பிட்டதற்கு காரணம் இருக்கிறது.
ReplyDeleteபுளிமிளகாய் உண்டு. கெடாமல் போடுவதில் அம்மா கெட்டிக்காரி. நீங்கள் ச்பொல்லி இருக்கும் புளி இல்லாத குழம்பு கனு அன்று ஆஜிப் பாட்டி செய்வார். அப்பா அந்த மணம் மறக்க முடியாதது. தளரக் கரமீதுன்னு பெயர் வேற.
ReplyDeleteபடிக்கவும் பார்க்கவும் நல்லா இருக்கு. செய்யச் சொல்லி சாப்பிட்டும் பார்த்துடலாம்!
ReplyDelete