எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, March 31, 2014

குழம்பில் போடும் வெங்காயக் கறிவடாம்

ஏற்கெனவே வெங்காயக் கறிவடாம் குறித்து எழுதி இருக்கேன்.  ஆகையால் என்னடா இதுனு எல்லோரும் பார்ப்பீங்கனு தான் விளக்கம் கொடுத்துட்டேன்.  அது பொரிச்சுத் தொட்டுக்கொள்ள வைச்சுக்கறதுக்கு.  இது குழம்பு வைக்க. கூட்டு, கலந்த சாதம் போன்றவற்றில் போட்டுக் கலக்க. 

சிவப்புக் காராமணி ஒரு ஆழாக்கு அல்லது 200 கிராம்

இதை முதலிலேயே ஊற வைக்கணும்.  எட்டு மணி நேரமாவது ஊறணும், ஆகவே முதல்நாள் மாலை அல்லது இரவே ஊற வைக்கவும். 

மறுநாள் காலை அரை ஆழாக்கு உளுத்தம்பருப்பு, அரை ஆழாக்குக் கடலைப்பருப்புக் களைந்து ஊற வைக்கவும்.  காலை ஏழு மணிக்குள்  அரைச்சுப் போட்டுடறது நல்லது என்பதால் முடிந்தவரை காலை ஐந்து மணிக்குள்ளாக ஊற வைக்கவும்.  இல்லையென்றாலும் பரவாயில்லை.  ஒன்பது மணிக்குள்ளாகப் போட்டுடலாம்.

மேற்சொன்ன அளவுக்குத் தேவையான பொருட்கள்:

மிளகாய் வற்றல் பத்து அல்லது பனிரண்டு(காரம் வேண்டும் எனில் கூடப் போட்டுக்கலாம்)

தேவையான உப்பு

பெருங்காயம்

கருகப்பிலை, கொத்துமல்லி பொடிப் பொடியாக நறுக்கி வைக்கவும்

கால் கிலோவில் இருந்து அரைகிலோவுக்குள்ளாகப் பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் தோல் உரித்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஊற வைத்த சாமான்களை மி.வத்தல், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.  நன்கு நைசாகவே அரைக்கலாம்.  பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நறுக்கிய வெங்காயம், கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துவிட்டு நன்கு கலக்கவும். ஒரு பெரிய தாம்பாளத்தில் அடியில் எண்ணெய் தடவி அல்லது ப்ளாஸ்டிக் ஷீட்டை நன்கு அலம்பித் துடைத்து அதில் இந்த மாவை உருண்டையாகவோ அல்லது வடை போலவோ வைக்கவும்.  குறைந்தது மூன்று நாட்கள் (நல்ல வெயில் அடித்தால்) காய வேண்டும்.  காய்ந்த பின்னர் கையால் நொறுக்கிப் பார்த்தால் தூளாகும்.  அந்தப் பதம் வந்ததும் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

வெறும் குழம்பு வைத்தால் போடத் தான் ஏதும் இல்லை எனில் குழம்பை இறக்கும்போது இதை எண்ணெயில் பொரித்துச் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.  கூட்டுகளுக்குப் போடலாம். கீரையில் வெங்காய வாசனை பிடிக்கும் எனில் போடலாம்.  மசாலா சாதங்களிலும் சேர்க்கலாம்.  நாளை போடும்போது நினைவிருந்தால் படம் எடுத்துப் போடறேன். :))))

16 comments:

  1. மூன்று நாட்கள் தேவையா...? அடிக்கிற வெயிலுக்கு ஒரு நாள் போதும் போல... முடியலே அம்மா...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, டிடி, நான் கருவடாம், வத்தல்னு போட ஆரம்பிச்சா சூரியன் ஒளிஞ்சு விளையாடுவார். அதான்! இன்னிக்குப் பாருங்க காலம்பர இருந்து வெளியே வராமல் இருந்துட்டு அரை மனசா இப்போத் தான் சூரிய பகவான் வெளியே வந்திருக்கார். :)))) கறிவடாம் வைக்கிறச்சே கூட கொஞ்சம் யோசனையா இருந்தது.

      Delete
    2. மின் வெட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு:(

      Delete
  2. ரொம்பப் பிடிக்கும்! சுலபமாக இருக்கிறது. சென்னை வெய்யில் வறுத்தெடுக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. போடச் சொல்லுங்க ஒரே நாளில் காய்ஞ்சுடும். இன்னிக்குக் காலம்பர கறிவடாமுக்கு அரைக்கிறச்சே சூரியன் லீவு! :))) அப்புறமாத் தான் அது பெர்மிஷன்னு புரிஞ்சது.

      Delete
  3. என்ன இங்கேயும் கமெண்ட் அப்ரூவலுக்குப் பின் என்கிறது? புதிதாக இருக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, மாத்திட்டோமுல்ல! :))))

      Delete
  4. கருவடாம் தானே இது? நல்லா இருக்கும்...... சாப்பிட்டு இருக்கேன். இப்போல்லாம் அம்மா செய்வது இல்லை.!

    ReplyDelete
    Replies
    1. குழந்தைங்க கிட்டக்க இருந்தா செய்யத் தோணும். நானும் இன்னொருத்தருக்குக் கொடுக்கத் தான் செய்யறேன். :)))

      Delete
  5. சாப்பிடறதோட சரி :)

    ReplyDelete
  6. என் பாட்டி கையால் செய்த கருவடாம் நிறைய சாப்பிட்டிருக்கிறேன். கீரை கூட்டில் போட்டால் எனக்கு மிகவும் பிடிக்கும். ..:)) பழைய சாதத்துக்கும் நொறுக்கி சேர்த்து பிசைந்தால்... ஆஹா!

    இப்போதெல்லாம் மாமியார் போடுவதே இல்லை... பொருட்களும் வித்தியாசப்படும் என்று நினைக்கிறேன்....:))

    பூசணி சேர்ப்பார்களோ? எப்போதோ மாமியார் சொன்ன ஞாபகம்...:)

    ReplyDelete
    Replies
    1. வெள்ளைப் பூஷணிக்காயும் சேர்க்கலாம் ஆதி. அவங்க அவங்க ருசிக்குத் தகுந்தாப்போல் செய்யலாம் அல்லது பாதி பூஷணிக்காய், பாதி வெங்காயம்னு செய்யலாம். பொருட்களில் அதிகம் வித்தியாசம் இருக்காது. ஒரு சிலர் காராமணிக்குப் பதிலாகத் துவரம்பருப்பே போடுவாங்க. :)))))

      Delete
  7. படம் எடுத்தாச்சு, காலம்பர போட முடியலை, மின் வெட்டு. இப்போ விருந்தினர் வருகை. உட்கார முடியாது. :))))

    ReplyDelete
  8. இரண்டு விஷயம் பிடிபட்டது. ஒண்ணும்காராமணி கறிவடாத்துக்கு உதவும் என்பது. இன்னோண்ணு அப்பாதுரை என்பவர்பதிவுலகத்தில் இருக்கிறார் என்னும் விஷயம்>}}}

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை பதிவுலகிலே தான் இருக்கார். ஆனால் பிசியா இருக்கார் போல, அதான் யாரோட பதிவுக்கும் வரதில்லைனு நினைக்கிறேன். :)

      Delete