எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, April 2, 2014

வெங்காயக் கறிவடாம் படங்களும் சில முக்கியக்குறிப்புகளும்!


படம் அன்னிக்கே எடுத்துட்டாலும் இன்னிக்குத் தான் அப்லோட் செய்ய முடிஞ்சது.  அதான் தனிப்பதிவாப் போட்டுட்டேன். :))))

முதல்நாளே ஊற வைச்ச சிவப்புக்காராமணி மேலே. காராமணி பிடிக்காது து.பருப்புனு சொன்னால் அதைக் காலம்பரவே ஊற வைச்சுக்கலாம்.
ஊற வைச்ச உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு
அரைத்த மாவு.
வெங்காயம் நறுக்கியது.  இத்துடன் கருகப்பிலை, கொத்துமல்லியும் சேர்த்துக் கலக்கணும்.
இப்படி உருட்டி வைக்கணும்.  ரொம்பவே மொழு மொழுனு உருட்டிட்டா உள்ளே சரியாக் காயாது.  ஆகவே கொஞ்சம் அப்படியே பக்கோடாவுக்குப் போடறாப்போல் உருட்டிப் போடணும்.  அப்போத் தான் நல்லாக் காயும்.


சில டிப்ஸ் கொடுக்கணும்.  இதோ வரேன்.  ஹிஹிஹி, அவசர வேலை ஒண்ணை முடிச்சுட்டு வந்தேன்.


குக்கர் வைக்கிறது இப்போ 99% பழக்கம் என்றாலும் இன்னமும் சிலர் அதில் சில முக்கியத் தவறுகளைச் செய்கின்றனர்.  பார்க்க எதுவுமே இல்லை என்பது போல் தெரிந்தாலும் அது தான் மிக முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை.

சமீபத்தில் என் உறவினர் குக்கர் வைத்ததும் உடனேயே அதில் வெயிட் எனப்படும் குண்டைப் போட்டு விட்டார்.  அம்மாதிரிப் போடுவது மிகத் தவறு.  குக்கர் நாமே தேய்த்தால் கூட அதிலிருந்து ஆவி வரும்வரை வெயிட் போடாமல் இருப்பது தான் நல்லது.  ஒரு வேளை தேய்க்கையில் ஏதேனும் சாதப்பருக்கையோ, பருப்புத் துணுக்கோ, காய்கள் வைப்பவர்களானால் காய்த்துணுக்கோ மிக நுண்ணிய அளவில் கூட அந்த ஆவி வெளிவரும் துவாரத்தில் இருப்பது உண்டு.  நன்றாக நீர் விட்டுக் கழுவவேண்டும்.  அப்படியும் பல சமயங்களில் அடைபடும்.  குண்டை உடனே போட்டுவிட்டால் அந்தத் துவாரத்தின் வழியே வெளிவர வேண்டிய அதிக அழுத்தம் நிறைந்த ஆவி உள்ளேயே தங்கிக் குக்கர் வெடிக்கும் அபாயம் உண்டு. துவாரத்தின் வழியாக ஆவி வெளி வர நேரம் கொடுத்தால் அந்த ஆவி பட்டு அதிலுள்ள நீரானது உள்ளே இருக்கும் துணுக்குகளை ஆவியோடு சேர்த்து வெளிக்கொண்டுவரும்.  இது தான் ஆபத்து இல்லாத முறை.

இன்னொன்றும் குக்கர் குறித்தே.  ஆவி வெளியே வந்து குக்கருக்கு வெயிட் போட்டு விசில் வரும்போது வெயிட் தூக்கிக் கொள்ள வேண்டும்.  தூக்கிக் கொண்டு நீண்ட சப்தமாக வரவேண்டும்.  விட்டு விட்டு வரக் கூடாது.  ஆவி வரும் துவாரத்தில் அடைப்பு இருந்தால் தான் விட்டு விட்டு வரும்.  ஆனால் பெரும்பாலும் விட்டு விட்டு வருவது தான் நல்லது என நினைக்கின்றனர்.  உள்ளே இருக்கும் அதிக அழுத்தம் நீண்ட சப்தத்தோடு வெளியேற வேண்டும்.  இந்த அழுத்தம் உள்ளேயே தங்குவது ஆபத்து.  அம்மாதிரி நீண்ட சப்தம் வந்தால் அது ஏதோ தப்பு என்பது போல் வெயிட்டின் தலையில் ஒரு கரண்டியை அல்லது இடுக்கியைப் பிடித்துக் குக்கரோடு சேர்த்து அமுக்கிக் கொண்டு நிற்கின்றனர்.  அழுத்தம் தாங்காமல் வெயிட் தூக்கிக் கொண்டு குக்கரின் உள்ளே உள்ள உணவுப் பொருள் எல்லாமும் வெளியேறி மூடியே தூக்கிக் கொண்டு திறக்கும் அபாயம் இதில் உண்டு.  சொன்னாலும் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றனர்.

அடுத்தது குக்கரின் சேஃப்டி வால்வ்.  முன்னெல்லாம் இதைச் சுற்றி ஈயப் பற்று வைத்திருந்தது.  அப்புறம் அதிக அழுத்தம், சூட்டில் அடிக்கடி ஈயம் உருகுவதால் முழுக்க முழுக்க ரப்பரினால் ஆன சேஃப்டி வால்வ் வந்தது.  அது கொஞ்சமாவது சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். உள்ளே உள்ள அதிகப்படி நீராவி அதன் மூலம் வெளியேற வேண்டும்.  அதை ஈயம் போட்டு முழுக்க முழுக்க அடைக்கின்றனர்.  இதுவும் மிகப் பெரிய ஆபத்து. குக்கர் வாங்கினதும், அவர்கள் கொடுக்கும் கையேடுகளைக் கவனமாகப் படித்துவிட வேண்டும். அப்போது தான் நாம் செய்வதில் என்னென்ன தவறு என்பது புரியவரும். 

7 comments:

 1. படங்களைப் பார்த்து விட்டேன். குக்கர் ஆவி வந்தவுடன்தான் வெயிட்டைப் போடவேண்டும்தான். நான் கூட குக்கர் வைத்ததுமே வெயிட்டை போட்டு விடுவேன்! (நான் சமையல் செய்ய நேரும்போது) :))

  ReplyDelete
  Replies
  1. இனிமேல் போடாதீங்க ஶ்ரீராம். :))))

   Delete
 2. டிப்ஸ்கள் மிகவும் உதவும்... நன்றி அம்மா...

  ReplyDelete
 3. திடீர் சென்னை வாசம். ஆகவே இப்பத்தான் படிக்க முடிந்தது:))!!!. படங்கள் ரொம்ப அருமை.குக்கர் டிப்ஸ்க‌ள் ரொம்ப உபயோகமானவை. மிக்க நன்றி அம்மா!

  ReplyDelete
  Replies
  1. எல்லாருக்கும் தெரிஞ்சது தான் பார்வதி, சும்ம்ம்மா நினைவூட்டினேன். டெல்லி போயிருந்தப்போ என் நாத்தனார் செய்ததை எல்லாம் பார்த்துட்டுத் தோன்றியது. :)))))

   Delete
 4. டிப்ஸ் - நல்ல நல்ல டிப்ஸ்! :))))

  ReplyDelete