ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்தே. இந்தப் பக்கத்தில் பின்னூட்டங்கள் உடனடியாக வெளியாகும் வகையில் அமைத்திருந்தேன். அதனால் எனக்கு மின் மடல் வராமல் பின்னூட்டங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனால் இப்போது அதை மாற்றி விட்டேன். மட்டுறுத்தலுக்கு உட்பட்டுப் பின்னூட்டங்கள் வெளியாகும் வகையில் மின் மடலுக்கு வரும்படி மாற்றிவிட்டேன். ஆகையால் படிக்கும் நண்பர்கள் பின்னூட்டங்கள் உடனே வெளியாகவில்லையே என எண்ண வேண்டாம். இப்போ ஒரு பாரம்பரிய செய்முறைக் குறிப்பைப் பார்ப்போமா?
நாளை காரடையான் நோன்பு. எல்லாப் பெண்களுக்கும் நாளை கட்டாயமாய் நோன்பு இருக்கும். இதை சாவித்திரி நோன்பு என்றும் சொல்வதுண்டு. இதற்கு நிவேதனமாக அரிசி மாவில் செய்த வெல்லக் கொழுக்கட்டை, (ஒரு சிலர் அடை என்பார்கள்) உப்புக் கொழுக்கட்டை பண்ணுவாங்க. சாவித்திரி காட்டில் கிடைத்த வரகரிசியில் மாவாக்கி, அங்கே கிடைத்தக் காராமணிகளைப் போட்டு, சுள்ளிகளைப் போட்டு எரிய வைத்து வைக்கோலிலேயே அடைகளையும் வேக வைத்து எடுத்தாள் என்பது செவிவழிக் கூற்று. பல காலம் என்னோட அம்மா காரடையான் நோன்புக்காகவே மாட்டுக்காரர்களிடம் கேட்டு வைக்கோல் வாங்கி வந்து சுத்தம் செய்து வைத்துக் கொண்டு, இட்லிக் கொப்பரையில் துணி போடும் இடத்தில் அதற்கு பதிலாக வைக்கோலைப் போட்டு அதில் இந்தக் கொழுக்கட்டை/அடைகளைத் தட்டிப் போட்டு வேக வைப்பார்.
இப்போ அதெல்லாம் யாருக்கும் தெரியாத ஒன்று. :))) அடை செய்முறையை மட்டும் பார்ப்போம். இதை நோன்பன்று மட்டும் தான் செய்து சாப்பிடணும்னு இல்லை. சாதாரணமான நாளிலும் மாலை டிஃபனுக்குச் செய்யலாம். வாங்க , மத்தியானமா அடுத்த பதிவுக்குப் போய் அடை செய்வது எப்படினு பார்க்கலாம்!

Comment Moderation கீழே Email moderation requests to என்பதில் உங்களின் மின்னஞ்சல் முகவரியை இடவும்... மின் மடலில் வந்து விடும்...
ReplyDeleteஒன்றிக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளும் இடலாம்...!
வாங்க டிடி, நீங்க சொல்றாப்போல் பல ஆண்டுகளாகச் செய்து வரேன். இந்த ஜம்ப் ப்ரேக் பத்தித் தான் தெரியாது. அதையும் சோதனை முயற்சியாப் பண்ணி இருக்கேன். பார்க்கலாம். :))))
Deleteஅடடா... மதியம் தானா...?
ReplyDeleteஇல்லை, இன்னிக்குக் கொஞ்சம் வேலை குறைச்சல், அதனால் இப்போ ஒரு மணி நேரம் ஓய்வு கிடைச்சிருக்கு, வந்துட்டேன். :))))
Deleteவருடத்தில் ஒரு நாள் மட்டும் தான் செய்யறாங்க! மற்ற நாளிலும், மாதத்திற்கு ஒரு முறையேனும் செய்யலாம் தான்! :)))
ReplyDeleteஆமாம், ஒரு நாள் மாலை டிஃபனுக்கு வைச்சுக்கலாம். :))))
Delete