ரவாதோசை என்பது முன் பதிவில் சொன்ன முறையிலேயே பெரும்பாலும் செய்யப்படும். சில சமயம் இட்லிக்கு அல்லது தோசைக்கு அரைத்த மாவு கொஞ்சம் போல் மிஞ்சும் இல்லையா? அப்போ அதிலே ரவை, கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, கம்பு மாவு, சோள மாவு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைக் கலந்து தோசை வார்க்கலாம். இதற்கு மைதா மாவு சேர்க்கணும்னு அவசியம் ஏதும் இல்லை. ஆனால் என்னோட அம்மா அரிசியையும், உளுந்தையும் ஊற வைச்சு அரைச்சும் ரவா தோசை, கேழ்வரகு தோசை போன்றவை செய்வாங்க. அதுக்கு எப்படிச் செய்யணும்னா, மாலை தோசை வார்க்கணும்னா காலையிலேயே அரிசி, உளுந்தை ஊற வைச்சு அரைக்கணும். காலை செய்யணும்னா முதல்நாள் மாலையில் ஊறவைச்சு அரைக்கணும்
அரிசி ஒரு கிண்ணம்
உளுந்து முக்கால்கிண்ணம்
இரண்டையும் சேர்த்துக் கழுவி ஊற வைக்கவும். பச்சரிசி என்றால் இரண்டு மணி நேரமும் பச்சரிசி, புழுங்கலரிசி இரண்டும் கலந்தது எனில் மூணு மணி நேரமும் ஊறட்டும். ஊறியதை நன்கு நைசாக அரைத்து உப்புப் போட்டுக்கலந்து புளிக்க வைக்கவும்.
ஒரு கிண்ணம் ரவை அல்லது கேழ்வரகு மாவு/கோதுமை மாவு/சோள மாவு/கம்பு மாவுக்கு மேலே சொன்னபடி அரைத்த மாவில் பாதியைப் போட்டுக் கலக்கவும். நன்கு கலந்து கரைத்துக் கொள்ளவும். ரொம்ப நீர்க்கவும் கரைக்கக் கூடாது. ரொம்பக் கெட்டியாகவும் இருக்கக் கூடாது. கரைத்த மாவில் கருகப்பிலை, கொத்துமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, தேவையானால் வெங்காயம் ஆகியவை சேர்க்கவும். கடுகு தாளிக்கவும். தோசையாக ஊற்றவும்.
இந்த மாவு நான்கு பேர்களுக்குப் போதலைனால் மிச்சம் இருக்கும் அரைத்த மாவில் முன் சொன்னது போல் கலந்து கொண்டு தோசை வார்க்கத் தேவையான பொருட்களைச் சேர்த்துக் கொண்டு தோசை வார்க்கவும். சட்னி, சாம்பார் ஆகியவற்றோடு பரிமாறவும்.