எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, November 16, 2013

கொட்டும் மழைக்கு சூடான பஜியா!

நம்ம ஊர் தூள் பஜ்ஜியை வடமாநிலங்களில் பஜியா அல்லது பகோடா என்பார்காள்.  இதற்குத் தனிக் கடலைமாவும், எல்லாக் காய்களும் இருத்தல் நலம்.  அங்கே இதோடு கொத்துமல்லி, புதினா, பாலக் கீரை, வெந்தயக்கீரை போன்றவையும் சேர்ப்பது உண்டு. இவற்றை மட்டும் தனியாகக் கலந்தும் போடுவது உண்டு. 

தூள் பஜ்ஜி செய்முறை: 

கடலை மாவு இரண்டு கிண்ணம்,

மிளகாய்த்தூள் ஒரு டேபிள் ஸ்பூன்,

குடமிளகாய் பெரிது ஒன்று அல்லது பச்சை மிளகாய்  அல்லது பஜ்ஜி மிளகாய் இரண்டு அல்லது மூன்று.

பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை

உப்பு தேவைக்கு

கலக்க நீர்

பொரிக்க எண்ணெய்

காய்கள்: உ.கி.  பெரிது ஒன்று'

வெங்காயம்(தேவையானால்) பெரிது இரண்டு

புடலை, பீர்க்கை, செளசெள, கத்தரிக்காய் போன்ற காய்கள்  நறுக்கி வகைக்கு அரைக்கிண்ணம்,

கருகப்பிலை, கொத்துமல்லி, புதினா போன்றவை நறுக்கி இரண்டு டேபிள் ஸ்பூன்


கடலை மாவில் உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.  எந்த மாவும்  நீர் விட்டுக் கலப்பதற்கு முன்னால் கையால் நன்கு உப்பும், காரமும் சேரும்படி கலக்க வேண்டும்.  பின்னரே நீர் விட்டுக் கலந்தால் பஜ்ஜியாகப் போட்டால் உப்பலாக வரும்.  பஜியாவும் உப்பலாகவும் வரும்.  நன்கு கலந்த பின்னர் நீர் விட்டுக் கரைக்கவும்.  இட்லி மாவு பதத்துக்குக் கரைத்தால் போதும்.  நறுக்கிய காய்களை அதில் போட்டு கருகப்பிலை, கொத்துமல்லி, புதினா, பச்சை மிளகாய் போன்றவற்றையும் நறுக்கிப் போட்டு நன்கு கலக்கவும்.

பின்னர் வாணலியில் எண்ணெயைக் காய வைத்துக் கைகளால் அள்ளி எடுத்துத் தூவினாற்போல் காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.  இருபக்கமும் பொன் முறுவலாக வந்த பின்னர் எடுத்து வடிகட்டியில் போட்டு வடிகட்டவும்.  

இதைப் புளிச்சட்னி, பச்சைச் சட்னியுடன் பரிமாறலாம்.  பரிமாறும் முன்னர் மேலே காரட் துருவல், கொத்துமல்லி நறுக்கியது, வெங்காயம் பொடியாக நறுக்கியது ஆகியவற்றைத் தூவித் தரலாம்.  சாஸோடு சாப்பிடப் பிடித்தவர்கள் அதனோடும் சாப்பிடலாம்.

13 comments:

 1. வெளியே.. லேசா தூறல்.. இங்க சூடா பஜ்ஜி.. சாப்பிட நல்லாத்தானிருக்கும்.. செஞ்சி கொடுத்தா...! அவ்வ்வ்........

  ReplyDelete
  Replies
  1. வாங்க உஷா, உங்க (கணவர்) ரங்கமணியைச் செய்யச் சொல்லிடுங்க, பிரச்னையே இல்லை. :))))

   Delete
 2. Replies
  1. நன்றி டிடி, கணினிக்கு உடம்பு தேவலையா?

   Delete
 3. மழை பெரிய அளவில் இல்லை. இருட்டு மட்டும்! தூள் பகோடா நன்றாய்த்தான் இருக்கும். பச்சைச் சட்னி (குறிப்பாக வெங்காயம்) எப்படிச் செய்வது?

  என் பாஸ் காலை இட்லிக்கு அரைக்கும்போது கொஞ்சம் உளுந்துமாவு தனியாய் எடுத்து வைத்து சற்றுமுன் வபோண்டா மாதிரி போட்டுக் கொடுத்து விட்டார்! :))

  ReplyDelete
  Replies
  1. இங்கே இந்த வருஷத்துக்கு நேற்று இரவிலிருந்து தான் கொஞ்சம் மழைனு பேர். இன்னமும் விடாமல் தூறிக் கொண்டு இருக்கிறது. வெங்காயத்தில் பச்சைச் சட்னியா? இல்லைனா கொத்துமல்லியில் பச்சைச் சட்னியா? நீங்க கேட்பது எந்தச் சட்னி? வெங்காயம்+ப.மி+புதினா+கொ.மல்லி+இஞ்சி வைத்தும் பண்ணலாம். ப.மி+கொ.ம. அல்லது புதினாவில் அல்லது இரண்டும் கலந்தும் பண்ணலாம்.

   Delete
  2. இங்கே மழைக்குக் கொ.க. சுண்டல்.

   Delete
 4. வெங்காய காரச் சட்னி! வதக்காமல்! மதுரையில் அப்படிச் சாப்பிட்ட நினைவு இருக்கிறது. அரைத்த கொஞ்ச நேரத்தில் காலி செய்துவிட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. காரச் சட்னியை வெங்காயம் சேர்த்து அரைத்ததும் இரும்புச் சட்டியில் நல்லெண்ணெயில் கடுகு தாளித்து வதக்கிச் சாப்பிடலாம். இதை ஒரு வாரம் வரை கூட வைத்திருப்போம். நாங்க வெங்காயத் துவையல்சாதமே சாப்பிட்டிருக்கோம். ஆனால் மதுரையில் இருந்தவரைக்கும் சின்ன வெங்காயம் தான் சாப்பிட்டிருக்கேன்; பார்த்திருக்கேன். :)))

   Delete
 5. இங்கே குளிர் ஆரம்பிச்சாச்சு..... சாப்பிட இதமா இருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், அங்கே தான் மத்தியானம், காலம்பரனு கிடைச்சுட்டு இருக்குமே! அதன் மேலே காரட் தூவிக் கொத்துமல்லி போட்டுத் தருவாங்க, அருமையா இருக்கும்! :))))

   Delete
 6. தூள் பஜ்ஜி அருமை...:) சாப்பிடும் ஆவலைத் தூண்டியது..

  ReplyDelete
  Replies
  1. எனக்கு தூள் பஜ்ஜி தான் ஃபேவரிட்! :)))

   Delete