இப்போவே சொல்லிக்கிறேன். இந்த முறையில் நான் செய்தது இல்லை; இல்லை; இல்லவே இல்லை. ஆனால் யு.எஸ்ஸில் இருக்கும் என் மகளார் செய்கிறார். அவர் சொல்லித் தான் நான் இதைப் போடறேன். ஒரு புது மாதிரி ரவா லாடுவைப் பார்க்கப் போறோம். ஆனால் இதை ரொம்ப நாள் வைச்சுக்க முடியாது. வைச்சுக்கும் நாளிலேயும் குளிர்சாதனப் பெட்டியிலேயே வைக்கவும்.
ரவை ஒரு கப் பேணி ரவைனு கேளுங்க, ரொம்பவே நைசாக் கிடைக்கும்.
சர்க்கரை ஒரு கப்
தேங்காய்த் துருவல் ஒரு கப்
முந்திரிப்பருப்பு,
திராக்ஷை வகைக்குப் பதினைந்திலிருந்து இருபது வரை
ஏலக்காய்ப் பவுடர் ஒரு டீஸ்பூன்
நெய் இரண்டு டேபிள் ஸ்பூன் அல்லது ஒரு சின்னக் கிண்ணம்
பால் ஒரு சின்னக் கிண்ணம் அல்லது தேவைப்படும் வரை.
கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி ரவையை நல்லா வாசனை வரும்வரை வறுக்கவும். தனியா வைங்க. ஏலக்காய்ப் பவுடரைக் கலந்துடுங்க.
சர்க்கரையை மிக்சி ஜாரில் பொடித்துக் கொண்டு தனியா வைங்க.
இப்போ மிச்சம் நெய்யிலே முந்திரிப்பருப்பு, திராக்ஷையை வறுத்து ரவையோட சேர்த்துட்டு, அடுப்பில் கடாயில் மீதம் இருக்கும் சொச்சம் நெய்யில் தேங்காய்த் துருவலைப் போட்டு வறுக்கவும். தேங்காய் வறுபட்டதும், ரவை+மு.பருப்பு, திராக்ஷை+ஏலம் சேர்த்த கலவையைப் போட்டுச் சிறிது வறுக்கவும். இரண்டும் நன்கு கலந்ததும் சர்க்கரைப் பவுடரைச் சேர்த்து ஒரு நிமிஷம் வறுக்கவும். சர்க்கரை நன்கு கலந்துவிட்டது தெரிந்தால் அடுப்பை அணைத்துவிட்டுப் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கலவையில் ஊற்றிக் கொண்டே இன்னொரு கையால் கிளறவும். உருண்டைகள் பிடிக்க வரும் என்பது உங்களுக்குப் புரியும் சமயம் பால் ஊற்றுவதை நிறுத்தவும். கொஞ்ச நேரம் ஆற வைத்துவிட்டுச் சூடு பொறுக்கும் வண்ணம் இருக்கையிலேயே உருண்டைகள் பிடித்துக் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். உடனடியாகத் தின்று தீர்த்துவிடவும்.

நாங்களும் தொடர்ந்து வருகிறோம்... நன்றி அம்மா...
ReplyDeleteஇனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
வாங்க டிடி, தொடர்வதற்கு நன்றி.
Deleteஆங்கிலத்தில் படித்தேன்! அதேதானே இது?
ReplyDeleteஎன்னாது??? ஆங்கிலத்தில் படிச்சீங்களா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் துரோகி ப்ளாகர்! அது எப்படி உங்களுக்கு வந்தது? Family circle போட மறந்திருக்கேன் போல! :))) பெண், மாட்டுப் பெண், இன்னொரு உறவுக்காரர்கள் அவங்களுக்கெல்லாம் தமிழ் தெரியாது. அவங்களுக்காகப் போடறேன். :))))
Deleteசுவையான லாடு...
ReplyDeleteஇனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்.
வாங்க ஆதி, தீபாவளிக் கொண்டாட்டம் தொடங்கியாச்சா? இனிய தீபாவளி வாழ்த்துகள்.
Deleteநண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநானும் விட மாட்டம்ல... நீங்க செய்ற எல்லா பலகாரத்தையும் வாங்காம விடமாட்டம்ல...! எனக்கு தராம திங்க கூடாது ஆமாம்...
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
வாங்க உஷா அன்பரசு, நான் இது எல்லாமும் செய்யப்போறதா எங்கே சொன்னென்? ஹிஹிஹி, நான் செய்திருக்கிறது, கோதுமை+கடலைப்பருப்பு லாடு மட்டும். படம் எடுத்திருக்கேன். போடணும். :)))
Deleteஇந்தமுறையில் நம்ஊரிரும் செய்வார்கள். பாலுக்கு பதில் கன்டென்ட் மில்க் சோ்பதும் உண்டு. .
ReplyDeleteவாங்க மாதேவி, நன்றி.
Delete