எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, October 25, 2013

வெந்தயக் குழம்புன்னா என்னனு தெரியுமா?

சரி, இப்போ கொஞ்சம் வேகமா வெந்தயக் குழம்பை ஒரு பார்வை பார்த்துட்டு சில, பல தீபாவளி பக்ஷணங்களையும் ஒரு பார்வை பார்த்துடுவோம்.  ஏற்கெனவே சிலது எழுதி இருக்கேன்.  அதிலே இல்லாதது ஏதேனும் இருக்கானு பார்த்துட்டுக் கொடுக்கணும். :)

வெந்தயக் குழம்புக்குத் தேவையான பொருட்கள்:

புளி எலுமிச்சை அளவு,

தேவையான அளவு உப்பு,

மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்,

இவற்றில் ஏதேனும் ஒரு காய் , முருங்கை, கத்திரி, அவரை, கொத்தவரை, பறங்கிக்காய் போன்றவை துண்டங்களாக நறுக்கியவை ஒரு கைப்பிடி அளவுக்கு, உதாரணமாக முருங்கை என்றால் ஒன்று, கத்திரிக்காய் இரண்டு, அவரை நாலைந்து, கொத்தவரை ஒரு கைப்பிடி, பறங்கிக்காய் ஒரு சின்ன துண்டு என ஏதேனும் ஒரு காயை நறுக்கி வைக்கவும்.

கருகப்பிலை,

பெருங்காயம்,

மி.வத்தல்,

கடுகு,

க.பருப்பு,

உ.பருப்பு,

து,பருப்பு,

வகைக்கு அரை டீஸ்பூன்

வறுத்துப் பொடிக்க:

மி.வத்தல் நான்கிலிருந்து ஆறு வரை.  காரம் வேண்டுமெனில் இன்னும் இரண்டு போடலாம்.

ஒரு டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு,

ஒரு டீஸ்பூன் வெந்தயம்.

சமையல் எண்ணெய் தேவையான அளவு, ஒரு சின்னக் கிண்ணம் அல்லது ஒரு குழிக் கரண்டி அளவு தேவைப்படும்.

இவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளலாம். அல்லது வெந்தயத்தை மட்டும் வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு மி.வத்தலும், து.பருப்பும் எண்ணெயில் வறுத்துக்கலாம்.  பொடி செய்கையில் மஞ்சள் பொடியைச் சேர்த்துக் கொண்டுவிடவும்.  புளியைக் கரைத்து இரண்டு கிண்ணம் வருகிறாப்போல் வைத்துக் கொள்ளவும்.

கல்சட்டி, வாணலி, அல்லது அடி கனமான உருளி, நான் ஸ்டிக் பாத்திரம் ஏதேனும் ஒன்றில் எண்ணெயை ஊற்றிக் கொண்டு காய்ந்ததும், கடுகு, க.பருப்பு, உ,பருப்பு, து,பருப்பு வகைகளைப் போட்டுக் காய்ந்த மிளகாய், கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு தானையும் போட்டு நன்கு வதக்கவும்.  பின்னர்  புளிக் கரைசலைச் சேர்த்து, உப்பையும் சேர்க்கவும்.  புளி வாசனை போகக் கொதித்ததும், தான் வெந்துவிட்டதா என்றும் பார்த்துக் கொண்டு வறுத்துப் பொடித்த பொடியைத் தேவையான அளவு சேர்க்கவும். ஒரு சின்னத் துண்டு வெல்லம் சேர்க்கலாம்.  இது அவரவர் இஷ்டம். பொடியைப் போட்ட பின்னர் குழம்பை அதிகம் கொதிக்க விடாமல் கீழே இறக்கவும்.  எண்ணெய் பிரிந்து மேலே வந்திருக்கும்.  வெந்தய வாசனையோடு குழம்பு நன்றாக இருக்கும்.  அரிசி அப்பளம் சுட்டு இந்தக் குழம்போடு சாதத்தில் ஊற்றிச் சாப்பிட சுவையோ சுவை.  மோர் சாதத்துக்கும் அருமையான துணை.  ஒரு சிலர் இதில் தேங்காய்த் துருவல் சேர்க்கின்றனர். இன்னும் சிலர் காய்களுக்குப் பதிலாக ஏதேனும் வற்றல்களும் போடுகின்றனர்.  அவரவர் விருப்பம் போல் செய்யலாம்.

இந்தப் பொடி நீண்ட நாட்கள் வரவேண்டுமெனில் வெறும் வாணலியில் சாமான்களைப் போட்டு நன்கு சிவக்க வறுத்துக் கொஞ்சம் கரகரப்பாகப் பொடி செய்து கொண்டு ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைத்துக் கொண்டு அவ்வப்போது தேவையான சமயம் எடுத்துப் பயன்படுத்தலாம்.  பொடி கைவசம் இல்லாமல் திடீரெனச் செய்கையில் எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து போட்டுப் பயன்படுத்தலாம்.

18 comments:

  1. விளக்கத்திற்கு மிகவும் நன்றி அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, நன்றிப்பா. தொடர்ந்து வருவதற்கும் நன்றி.

      Delete
  2. வாவ்..... மோர் சாதத்துடன் சாப்பிட அமிர்தம்! :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், தனியா இருக்கிறதாலே இதெல்லாம் விடாமப் படிச்சு வைச்சுக்கறீங்க போல! :)))))

      Delete
  3. பேச்சிலர்களுக்கு மிகவும் பயன்படும்... அருமையான விளக்கம்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்கூல் பையர், உங்களுக்குக் கொடுத்த பதிலைக் காக்கா கொண்டு போயிருக்கு! :)))

      பாராட்டுக்கு நன்றிங்க.

      Delete
  4. வெந்தய குழம்பு வாசம் கம கமக்கிறது.. தீபாவளிக்கு என்னென்ன ஸ்பெஷல் செய்ய போறிங்க... அப்படியே இப்படி எனக்கும் கொஞ்சம் அனுப்பி வச்சிங்கன்னா... அதையே அக்கம், பக்கம் கொடுத்து கதையை(பலகார பரிமாற்றத்தை) முடிச்சிடுவேன்...! ஹா... ஹா..!

    ReplyDelete
    Replies
    1. haahaahaah Usha Anbarasu, நீங்க திருச்சியிலே தான் இருக்கீங்களா? தினமலர், பெண்கள் மலரில் அடிக்கடி உங்கள் பெயரைப் பார்க்கிறேன். ரெண்டு பேரும் ஒண்ணு தானே? :))))) இந்த வருஷம் பண்டிகை கொண்டாட்டம் இல்லை. அதனால் அக்கம்பக்கம் பகிரக் கொஞ்சம் போல் ஏதேனும் செய்வேன். கட்டாயமாய் உங்களுக்கும் உண்டு. :))))

      Delete
  5. வித்தியாசமாக இருக்கிறது. குழம்புப் பொடிக்கு பதில் அந்த வறுத்து அரைத்த பொடியா? ஒருமுறை முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. குழம்புப் பொடி கலவை சாமான்களும் இதுவும் மாறும் ஶ்ரீராம், உண்மையில் இதைத் தான் வெந்தயக் குழம்பு என்று தென்மாவட்டங்களில், முக்கியமாய் மதுரையில் சொல்வோம். :)))

      Delete
  6. எனக்கு நல்ல காரம் வேண்டும்! உடம்புக்குக் கெடுதல்தான். இருந்தாலும் காரம் சாப்பிடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. காரம் வேணும்னா அதுக்கு ஏற்றாற்போல் தாளிப்பிலும், வறுத்துப் பொடி செய்தலிலும் மி.வத்தல் போட்டுக்கலாம்.

      Delete
  7. சுவையான வெந்தயக் குழம்பு....
    எங்கம்மா கொஞ்சமா தேங்காய் அரைத்து சேர்ப்பாங்க...

    ReplyDelete
    Replies
    1. தேங்காயும் சேர்க்கலாம், ஆதி! :)

      Delete
  8. மிளகாய் வத்தல், துப, வெந்தயம்.. இந்த மூணு தானா வறுத்துப் பொடிக்க?

    ReplyDelete
    Replies
    1. வாங்க அப்பாதுரை, ரொம்ப பிசி போல!:)))) ஆமாம், இது மூணு தான் வறுத்துப் பொடிக்கணும்.

      அது சரி, உங்க பதிவுக்கு வரமுடியுமா? நேத்து வரை வர முடியலை! எல்லாரும் அலறிட்டு இருக்கோம். :))))

      Delete
  9. super, migavum rusiyana kuzambu.... pagirvuku nandri amma.... Sundar rajan, Bangalore.

    ReplyDelete
    Replies
    1. Oh, Sundar Raj.G. Welcome, Welcome. New to blogging?? Thanks for your comments.

      Delete