குஜராத்தில் உளுத்தம்பருப்பில் லாடு செய்வது மிகவும் அதிகம். நல்ல தோல் நீக்கிய
வெள்ளை உளுத்தம்பருப்பு கால் கிலோ
வெல்லம் தூளாக (பாகு) கால் கிலோ
ஏலத்தூள்
முந்திரிப்பருப்பு, பாதம், பிஸ்தா(தேவையானால்)
கசகசா 50 கிராம்
நெய் நூறு கிராம்.
உளுத்தம்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொண்டு மாவாக்கவும். இதோடு தூள் வெல்லத்தைச் சேர்த்துக் கொண்டு நெய்யில் வறுத்த மு.பருப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கொள்ளவும். நெய்யைச் சூடாக்கிக் கலவையில் ஊற்றி லாடு பிடித்துக் கொள்ளவும். முன்னதாக ஒரு தாம்பாளத்தில் கசகசாவைப் பரத்திக் கொட்டி வைக்கவும். இந்தப் பரத்தலில் லாடை ஒரு புரட்டுப் புரட்டித் தனியாக எடுத்து வைக்கவும். இது பெண்களின் பல்வேறு பிரச்னைகளைத் தீர்ப்பதோடு அல்லாமல், இடுப்புக்கும் வலுவைத் தரும்.
மோகன் லாடு: இதிலே கொஞ்சம் வேலை அதிகம். என்றாலும் முடிஞ்சவங்க முயன்று பார்க்கலாம்.
கோதுமை மாவு கால் கிலோ
சர்க்கரை கால்கிலோ
மு.பருப்பு ஐம்பது கிராம்,
ஏலக்காய்த் தூள் ஒரு டீஸ்பூன்
பொரிக்க நெய் அல்லது டால்டா அல்லது ஏதேனும் வனஸ்பதி அரை கிலோ
கோதுமை மாவை சிறிதளவு உப்புச் சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை அரை மணி ஊற வைத்து மெலிதான பூரிகளாக இட்டு நெய்யில் பொரிக்கவும். நெய்யில் பொரித்தால் தான் நன்றாக இருக்கும். அவரவர் வசதிப்படி செய்யவும். நெய் இல்லை எனில் டால்டா அல்லது ஏதேனும் வனஸ்பதியில் செய்யலாம். பொரித்த பூரிகள் மொறுமொறுப்போடு இருக்க வேண்டும். ஆகவே நன்கு சிவக்கப் பொரித்தெடுக்கவும்.
இந்தப் பூரிகளை முன்னெல்லாம் கல்லுரலில் போட்டு இடிப்பார்கள். இப்போது அகலமான மிக்சி ஜாரில் போட்டுப் பொடியாக்கவும். சர்க்கரையையும் பொடித்துக் கொண்டு பூரிக் கலவையோடு சேர்க்கவும். வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலத்தூள் சேர்த்துக் கொண்டு உருண்டைகளாகப் பிடிக்கவும். முன் சொன்னது போல் கசகசாவிலும் புரட்டி எடுக்கலாம்.
இதையே வெல்லம் சேர்த்தும் செய்வது உண்டு. அது சூர்மா லாடு எனப்படும். ராஜஸ்தானில் தால் பாட்டியுடன், (காரமான தால், கெட்டியான பாட்டி) இந்த இனிப்பான சூர்மாவும் சில்லென்ற லஸ்ஸியும் மதிய உணவாக உண்பார்கள்.

இதையும் குறித்துக் கொண்டாயிற்று... நன்றி...
ReplyDeleteநிதானமாச் செய்து பார்க்கச் சொல்லுங்க.
ReplyDeleteநன்றி அம்மா!!!.. குறிச்சு வைச்சிட்டேன்!!...
ReplyDeleteநன்றி பார்வதி.
Deleteகுறித்துக் கொண்டேன். ஒருமுறைக்கு ஏதாவது ஒன்றுதான் செய்ய முடியும்! ;)
ReplyDeleteநீங்க வேறே ஶ்ரீராம், எங்க வீட்டில் பக்ஷணத் தொழிற்சாலை வைச்சிருந்தப்போ லாடு வகைகளே குறைந்தது இரண்டு இருக்கும். :))))
Deleteமோகன் லாடு, உளுத்தம்பருப்பில் லாடு என அனைத்தும் அருமை...
ReplyDeleteஇந்த முறை பட்சண வேலை முடிந்தாயிற்று. அப்புறம் ஒருநாள் செய்து பார்க்க வேண்டும்.
மெதுவாச் செய்து பாருங்க, இந்த மோகன்லாடு செய்முறையிலேயே (கிட்டத்தட்ட) சூர்மா லாடும் செய்யலாம். அது பத்திப் பின்னர் எழுதறேன். எல்லாம் வட இந்தியாவில் சாப்பிட்ட ஸ்வீட் வகைகளில் தெரிஞ்சு வைத்துக் கொண்டது தான். என்ன தான் இங்கே ஸ்வீட் எல்லாம் செய்தாலும் இதிலே ராஜஸ்தானையும், குஜராத்தையும் அடிச்சுக்க முடியாது. :))))
Delete