இன்னிக்குக் காலம்பர காலை ஆஹாரம் ப்ரவுன் ப்ரெடில் சான்ட்விச். ப்ரெடில் வெண்ணெய் தடவி ஃபில்லிங்குக்கு ரெடியாக.
தக்காளியை ஜீரகம், சோம்பு, பச்சை மிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி, உப்பு, மி.பொடி, தனியாப் பொடி சேர்த்து வதக்கினேன். வெங்காயம் வேண்டுமானால் போட்டுக்கலாம். வெறும் தனியாப் பொடி மட்டும் கூடப்போட்டுக்கலாம். அவரவர் விருப்பம். உ.கி. வேக வைத்து மசித்துக் கொண்டு ப.மி. கருகப்பிலை, கொ.மல்லி, உப்பு, மி.பொடி சேர்த்துக் கொண்டு அதையும் ஃபில்லிங் செய்யலாம். இன்னும் பட்டாணியைக் குழைய வேக வைத்து மசித்து வைக்கலாம். இன்னும் நிறைய இருக்கு அவரவர் கற்பனைக்கு ஏற்ப.
ஃபில்லிங் முடிந்த ப்ரெட்கள் சான்ட்விச் டோஸ்டரில் வைச்சாச்சு. வைச்சு மூடி இரண்டு நிமிடத்தில் உங்கள் சான்ட்விச் ரெடி!
சான்ட்விச் ரெடியாகி விட்டது. சாதாரணமாக இது ஒருத்தர் சாப்பிடலாம் ஃபில்லிங்கைப் பொறுத்து.
இதையே இப்படிப் பாதியாக இருப்பதில் ஒரு பாதியை எடுத்து கடலைமாவு பஜ்ஜி மாவாக உப்பு, மி.பொடி போட்டுக் கரைத்துக் கொண்டு அதில் முக்கி எண்ணெயில் பொரித்தால் ஸ்டார் ஹோட்டல் ப்ரெட் பக்கோடா ரெடி. ஆனால் அது இன்னும் ஹெவியாக இருக்கும்.
சுலப டிஃபன்! எங்கள் பிரெட் டோஸ்டர் வீணாகி விட்டது! தோசை தவாவில் வைத்து செய்தோம் சென்றமுறை!
ReplyDeleteமானுவலாகச் செய்யும் ப்ரெட் டோஸ்டர் இருக்கு. இதை வாங்கினதும் அதை உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே போட்டுட்டேன். அதைத் தேடி எடுத்துட்டு நாளைக்குப் படம் எடுத்துப் போடறேன். :)))))
Deleteஇன்னும் வெங்காயம் வாங்கவில்லை போலேருக்கே...... (பரோட்டா செய்யும்போது சைட் டிஷ் செய்ய வெங்காயம் இல்லை, அதனால் என்ன என்று கேட்டிருந்தீர்கள்!)
ReplyDeleteஹாஹா, வெங்காயம் வாங்கியாச்சு. ஆனால் போடலை! இன்னிக்குச் சப்பாத்திக்கு தால் கூட வெங்காயம் போடாமல் தான்! :))))))
Deleteபிரெட் டோஸ்டர் எந்த கம்பெனி வாங்கலாம்...?
ReplyDeleteமுன்னால் சிங்கர் கம்பெனி போட்டுட்டு இருந்தாங்க. அது சரியா வேலை செய்யலை. ப்ரெஸ்டிஜில் போட்டிருக்கிறதாத் தெரியலை. எங்களோடது Baltra இது தவிர நோவா, ஸ்கைலைன் கூட இருக்கு. ஆனால் பல்ட்ரா தான் இரண்டு செட் பண்ணும்படியான அளவில் கிடைக்குது. நோவாவில், ஸ்கைலைனில் எல்லாம் ஜாஸ்தி ஒரு செட் தான் வைக்கலாம். கிச்சன்வேர் விற்கும் கடைகளில் அல்லது விவேக் போன்ற எல்க்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைகளில் கேட்டுப் பாருங்க. வேறு ப்ராண்டில் இருந்தால் சொல்வாங்க. பொதுவாக எலக்ட்ரானிக் பொருட்கள் பிலிப்ஸை அடிச்சுக்க வேறில்லை என்பது எங்களோட அனுபவம். எங்க தொலைக்காட்சிப் பெட்டி வாங்கி பதின்மூன்று வருடங்களுக்கும் மேல் ஆகிறது. ஒரே ஒரு முறை மின் அழுத்தம் ஏறி இறங்கியதில் ட்ரான்ஸ்ஃபார்மர் எரிஞ்சு போச்சு. மற்றபடி நல்லாவே இருக்கு. பிலிப்ஸில் கிடைக்குதானு பாருங்க. சிஎல்எஃப் பல்புகள் கூட பிலிப்ஸில் வாங்கிட்டுத் திரும்ப ஃப்யூஸ் போனதும் வாங்கின கடையிலேயே கொடுக்கலாம். சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்காக அவங்க கம்பெனியில் இப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்காங்க. வாங்கின பில்லைப் பத்திரமா வைச்சிருந்தா ஃப்யூஸ் போன பல்பைத் தூக்கி எறிய வேண்டாம். வாங்கும்போதே கடைக்காரரைக் கேட்டுடுங்க. இப்படி ஒரு ஏற்பாடு இருக்கானு!
ReplyDeleteவிதம் விதமான சாண்ட்விச்....
ReplyDeleteபல வீடுகளில் இங்கே காலை உணவே ப்ரெட் தானே.....
டோஸ்டர்களில் பல வகை கிடைக்கிறது. எல்லா விதமான கம்பெனிகளும் வைத்திருக்கிறார்கள் தனபாலன்.
ஆமாம், வட மாநிலங்களில் கிடைக்கலாம், தமிழ்நாட்டில் அதுவும் திண்டுக்கல்லில் கிடைக்கிறதானு தெரியலை! :))))) சென்னையில் கிடைக்கும்.
Deleteஇங்கும் பல வீடுகளில் காலை உணவு ப்ரெட்தான்.
ReplyDeleteஆமாம், பலரும் ப்ரெடையே காலை உணவாகக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து இடம் பெறுவது ஓட்ஸ்.
Deleteசாண்ட்விச் நல்லாருக்கு..
ReplyDeleteஇப்பல்லாம் அடுப்பில் நேரடியா தீயில் வைத்து செய்யற மாதிரியான டோஸ்டர்களும் இங்கே கிடைக்குது. அதுவும் நான்-ஸ்டிக்கில். கரண்ட் இல்லாத சமயங்களிலும் உதவுது. ஒரே ஒரு பிரச்சினைதான்.. ஒரு சமயத்தில் ஒரு சாண்ட்விச்தான் செய்யமுடியுது :-)
அதுவும் இருக்கு சாரல், இப்போ கரன்ட் இருக்கிறதாலே அதை உள்ளே போட்டாச்சு. அதிலேயும் ஒரே சமயம் இரண்டு வைச்சு க்ரில்லில் சுடும்படியாக இருக்கும். ஆனால் என்னோடது ஒண்ணு மட்டும் வைக்கிறது தான். அதையும் படம் எடுக்கணும். மறந்து போகுது.:))))
ReplyDelete