நேத்திக்கு ரஞ்சனி மைதா பரோட்டா பத்தின எச்சரிக்கை போட்டிருந்தாங்க. இணையத்திலே சில ஆண்டுகளாக இது உலவி வருது. ஆனால் உண்மையா பரோட்டாவே சாப்பிடக் கூடாதா? தாராளமாய்ச் சாப்பிடலாம். கோதுமை மாவில் செய்திருந்தால். இன்னிக்குக்காலம்பர வெளியே போயிட்டு வர நேரம் ஆகும் என்பதால் வழக்கமான இட்லி, தோசை வேண்டாம், வேறே ஹெவியாக்காலை ஆகாரம் கொடுனு ரங்க்ஸ் கேட்க, சட்டுனு உ.கி. எடுத்துக் குக்கரில் வேகப் போட்டுட்டு, கோதுமை மாவைக் கொஞ்சம் போல் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்தேன்.
வெங்காயம் இல்லை. அதனால் என்ன? மத்தது இருந்தது. தக்காளி, பச்சை மிளகாய், கருகப்பிலை, இஞ்சி போன்றவை இருந்தன. கடாயில் எண்ணெய் ஊற்றி ஜீரகம் தாளித்துக் கொண்டு இஞ்சி ப,மி, கருகப்பிலை, பெருங்காயம் போட்டு வதக்கித் தக்காளி நறுக்கிப் போட்டு வதக்கிக் கொண்டு, வெந்த உருளைக்கிழங்கில் அரை டீஸ்பூன் மி.பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு நீர் விட்டுக் கலந்து உதிர்த்தாப்போல் வதக்கிய தக்காளியில் கொட்டிக் கலந்து தேவையான உப்புச் சேர்த்தேன். இறக்கும் முன்னர் லவங்கம், லவங்கப்பட்டை, ஏலக்காய் வறுத்துப் பொடித்த தூள் ஒரு கால் டீஸ்பூன் சேர்த்துக் கீழே இறக்கிப் பச்சைக் கொத்துமல்லி சேர்த்தேன்.
இப்போப் பரோட்டா.
வெங்காயம் இல்லை. அதனால் என்ன? மத்தது இருந்தது. தக்காளி, பச்சை மிளகாய், கருகப்பிலை, இஞ்சி போன்றவை இருந்தன. கடாயில் எண்ணெய் ஊற்றி ஜீரகம் தாளித்துக் கொண்டு இஞ்சி ப,மி, கருகப்பிலை, பெருங்காயம் போட்டு வதக்கித் தக்காளி நறுக்கிப் போட்டு வதக்கிக் கொண்டு, வெந்த உருளைக்கிழங்கில் அரை டீஸ்பூன் மி.பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு நீர் விட்டுக் கலந்து உதிர்த்தாப்போல் வதக்கிய தக்காளியில் கொட்டிக் கலந்து தேவையான உப்புச் சேர்த்தேன். இறக்கும் முன்னர் லவங்கம், லவங்கப்பட்டை, ஏலக்காய் வறுத்துப் பொடித்த தூள் ஒரு கால் டீஸ்பூன் சேர்த்துக் கீழே இறக்கிப் பச்சைக் கொத்துமல்லி சேர்த்தேன்.
இப்போப் பரோட்டா.
இதான் பிசைந்த மாவு. ஹிஹிஹி,கொஞ்சமா இருக்கேனு பார்க்கிறீங்களா? மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் அப்புறமாக் கடைசிப் பரோட்டா பண்ணறச்சே நினைப்பு வந்தது. மாவை எடுத்துக் கொண்டு உருட்டி அதில் வெண்ணெய் தடவி மடித்துப் போட வேண்டும். மீண்டும் வெண்ணெய், மடித்துப் போடணும். இம்மாதிரி நான்கைந்து முறையாவது வெண்ணெய் தடவி மடித்துப் போட்டால் நன்கு உள்ளே லேயர் லேயராக வரும். வெண்ணெய் தடவிக் கீழே பார்க்கலாம்.
இது வெண்ணெய்னு சொல்லித் தெரியவேண்டாம். :))))))
வெண்ணெய் தடவி இரண்டு மூன்று முறை மடித்துப் போட்டாச்சு. மடித்ததைக் கடைசியில் இப்படிக் கீழே காண்கிறாப்போல் சுருட்டணும்.
சுருட்டினதை நீள வாட்டத்திலே எடுத்து அப்படியே மடிக்கணும். கீழே பாருங்க.
இந்த மாதிரி உள்ளுக்குள்ளே மடிப்புக்களோடு சுருட்டணும். சுருட்டியதை அப்படியே மீண்டும் குழவியால் சமன் செய்து இடணும்.
இட்டதை காய்ந்து கொண்டிருக்கும் தோசைக்கல்லில், (நான் சப்பாத்திக்குத் தனிக்கல், தோசைக்குத் தனிக்கல் என வைத்திருக்கேன்.) கொஞ்சம் போய் அடியில் நெய் தடவிப் பரத்திவிட்டுப் போடணும். உடனடியாக வேக எண்ணெயோ அல்லது நெய்யோ(நெய்யே நல்லா இருக்கும், முடியாதவங்க நெய்யோடு கடலை எண்ணெய் கலந்துக்கலாம்.) விடக் கூடாது. ஒரு பக்கம் வெந்து இம்மாதிரி உப்பி வரும். அப்போ மறுபக்கம் திருப்பிட்டுக் கொஞ்ச நேரம் கழித்து நெய் ஊற்றினால், நன்கு உப்ப ஆரம்பிக்கும்.
உங்கள் பரோட்டா வெந்து கொண்டிருக்கிறது. விரைவில் ரெடியாயிடும். சாப்பிட வாங்க.
அப்பாடா, சமைக்கும்போதே படம் எடுத்து ஒரு வழியாப் போட்ட்டுட்டேன். இப்படித் தான் முறுக்குச் சுத்தும்போதும் எடுக்க நினைச்சு மறந்து போச்ச்ச்ச்ச்ச்! கிருஷ்ண ஜயந்திக்குச் சுத்தறச்சே படம் எடுத்துப் போட்டேன். ஆனால் இங்கே போடலைனு நினைக்கிறேன். :))))
mmmmmmmmmm ithu paroottaa:)))))))))00
ReplyDeleteவாங்க வல்லி, இது தான் பரோட்டா! :)
Deleteநான் இந்த மாதிரி பரோட்டா(மடிப்பு சப்பாத்தி என சொல்லுவோம்! :)) செய்வதுண்டு. ஆனால் வெண்ணெய் நெய் தடவாமல் ஆலிவ் ஆயில்தான் யூஸ் பண்ணுவேன். உங்க பரோட்டாவும் உருளை மசாலாவும் பார்க்கவே சாப்பிடத் தூண்டுது!
ReplyDeleteதமிழ்நாட்டிலே இதைச் சப்பாத்தினு தான் சொல்றாங்க! :))))
Deleteகீதாவா? கொக்கா? அப்படின்னு கேட்கத்தோணுது, இந்த பரோட்டா பதிவைப் பார்த்ததும்!
ReplyDeleteசுடச்சுட பரோட்டாவையும் பண்ணி, உடனே உடனே போட்டோவும் எடுத்து...கலக்கிட்டீங்க!
உருளைக்கிழங்கு கறி side-டிஷ்-ஆ? நான் பரோட்டா மாவுக்குள்ள வைத்து இடப்போறீங்கன்னு நினைச்சுட்டேன்.
//நான் தோசைக்கு தனிக்கல், சப்பாத்திக்கு தனிக்கல்//
என்னப் பொருத்தம் நமக்குள், இந்தப் பொருத்தம்!
வாங்க ரஞ்சனி, பாராட்டுக்கு நன்றி. உ.கி. பரோட்டா பண்ணற அன்னிக்குப் போடறேன் அதையும். :))))
Deleteசபாஷ்... சரியான போட்டி...!
ReplyDeleteஆனால் சப்பாத்தியை பரோட்டா / புரோட்டா (?) என்று சொல்வது தான் சிரமமாக இருக்கிறது... ஹிஹி... இன்னும் பலமுறை மடிக்கணுமோ...?
நன்றி...
டிடி, ஹாஹா, இதான் ஒரிஜினலா பரோட்டா/புரோட்டா! இங்கே கொடுக்கிறதெல்லாம் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா! :))) ஒரு முறையாவது வட மாநிலச் சுற்றுலா போய் இதை வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்க. பட்டர் பரோட்டானு கேட்டால் உங்களுக்கு நேரே சூடாய்ப் பண்ணித் தருவாங்க! :)))) சப்பாத்தி வேறே. அதையும் ஒரு நாள் போடறேன்.
Deleteசுடச்சுட படங்களுடன் பதிவு. நல்லாயிருக்கு, பார்க்க! மைதா மாவு+கோதுமை என்று கலந்து நாங்கள் செய்திருக்கோம்! வெண்ணெய் கைவசம் இருக்கும் ஒரு நாளில் இதை மறுபடி வெறும் கோ.மாவில் முயற்சி செய்துட வேண்டியதுதான்.
ReplyDeleteமைதாவை அதிகமாய்ச் சேர்க்கக் கூடாது ஶ்ரீராம், எப்போவானும் கோதுமை மாவு கம்மியா இருந்தால் மட்டுமெ ஒரே ஒரு கரண்டி சேர்ப்பேன். :))))) அப்போவும் ஓமமோ, அல்லது ஜீரகமோ மாவில் போட்டுப் பிசைந்துடுவேன்.
Deleteசரிதான்.... ஆனால் அன்று நான் சங்கீதாவில் வாங்கிச் சாப்பிட்டது!
Deleteஶ்ரீராம், தமிழ்நாட்டில் எந்த ஓட்டலில் பராந்தா வாங்கினாலும் புரோட்டா, அல்லது பரோட்டா எனக் கேட்டு வாங்காதீர்கள். பட்டர் பராட்டா எனக் கேளுங்கள். கோதுமை மாவில் செய்த மெலிதான சப்பாத்தி இரண்டு கொடுப்பார்கள். சில பெரிய ஓட்டல்களில் பட்டர் பராட்டா கோதுமை மாவிலேயே செய்தும் கொடுப்பார்கள். அதுக்கு நீங்க வட இந்திய ஓட்டல்களுக்குப் போகணும். தி.நகர் எனில் போக் ரோடு ஆம்டாவாடி, அண்ணாநகர் சுக் சாகர், அகர்வால், இப்படி இருக்கு. கிருஷ்ணா ஸ்வீட்ஸிலே எல்லாம் வாங்கவே வாங்காதீங்க!
Deleteரஞ்சனி மேடம் பதிவு பார்த்தேன். ஏனோ எனக்கு நேற்று முழுதும் அவர் ப்ளாக்கில் கமெண்ட் பாக்ஸ் கண்ணில் படவே இல்லை. :))
ReplyDeleteஒளிஞ்சுட்டு இருந்திருக்கும். :))))
Deleteசத்தான பரோட்டா ..! பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...
ReplyDeleteநன்றி ராஜராஜேஸ்வரி, ரஞ்சனியின் தயவிலே இரண்டு நாட்களாக ஹிட் லிஸ்ட் எகிறி இருக்கு. :)))))
Deleteதிருமதி ரஞ்சனி மேடம் வலைதளத்திலிருந்து இங்கு வந்தேன்.பரோட்டா இக்காலக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கிறது."நான்" எனப்படும் சப்பாத்தி அதுவும் பாதி சப்பாத்தி மிகவும் பிடிக்கிறது.அதையே கோதுமை மாவில் செய்து பார்க்கலாம் இல்லையா?உங்கள் ஐடியாவுக்கு மிக்க நன்றி.பதிவைப் படித்ததும் வயிறும் மனமும் நிறைந்து விட்டது.பாராட்டுக்கள்.
ReplyDeleteவாங்க ருக்மிணி சேஷசாயி, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteவட இந்திய பரோட்டா - பொதுவாகவே ஸ்டஃப் செய்யப்பட்டது - உருளைக்கிழங்கு, வெங்காயம், முள்ளங்கி, கேரட் எனப் பலப் பல ஸ்டஃப் செய்யப்பட்ட பரோட்டாக்கள் தான்.
ReplyDeleteநீங்கள் சொல்வது சாதா பரோட்டா. பரோட்டாவுடன் தொட்டுக்கொள்ள ஊறுகாயும் தயிரும் தான் இங்கே காம்பினேஷன். தனியாக சப்ஜி தேவைப் படுவதில்லை.....
மடித்து, பரப்பி செய்வது நன்றாகவே இருக்கும். எனது பெரியம்மா இப்படித் தான் செய்வார்கள்.
வாங்க வெங்கட், ராஜஸ்தான். உ.பி. பஞ்சாபில் இத்தகைய மடித்துப் போட்டு இடப்பட்ட பரோட்டா பிரபலம். இந்த பரோட்டாவுக்குக் கட்டாயமாய் சப்ஜியும் இருக்கும். முதல் முதலாக 74-ஆம் வருஷம் ஆக்ராவில் இதோடு ஆலு மட்டரும் சாப்பிட்டுவிட்டுத் திணறியது இன்னும் நினைவில் இருக்கு. :)))))
Deleteசுவைத்தது.
ReplyDeleteநன்றி மாதேவி.
Deleteஹி..ஹி.. கீத்தாம்மா. புரோட்டாவைத்தேடி வந்த எனக்கு பராத்தாவைக் கொடுத்து ஏமாத்திட்டீங்களே :-))
ReplyDeleteவாங்க அமைதி, நாங்க புரோட்டாவுக்கு எதிரியாச்சே! பராட்டா தான் பிடிக்கும். :)
Delete