எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, May 26, 2013

காராவடை வேணுமா?

காராவடை வேணுமா?  யாரும் எப்படினு கேட்கலை.  நானும் வீட்டிலே பண்ணலை.  இங்கே(புகுந்த வீடு) காராவடை அவ்வளவாப் பிடிக்கிறதில்லை.  அதனால் பிறந்த வீடு போறச்சே அங்கே பண்ணினால் சாப்பிடறதோடு சரி! :)))) ஆனாலும் எப்படிப் பண்ணுவாங்கனு பார்க்கலாம்.  பார்க்க உ.கி. போண்டா மாதிரித் தான் இருக்கும்.  ஆனால் போண்டா இல்லை.

தேவையான பொருட்கள்:  ஒரு சின்ன கிண்ணம் அரிசி, ஒரு டேபிள் ஸ்பூன் து.பருப்பு களைந்து ஊற வைக்கவும்.  அரிசி எவ்வளவோ அவ்வளவு உளுத்தம்பருப்பைத் தனியாகக் களைந்து ஊற வைக்கவும்.  கடலை மாவு ஒரு கிண்ணம்.  ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்புக் களைந்து தனியாக ஊற வைக்கவும். தேங்காய் விருப்பமிருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் பொடிப் பொடியாகக் கீறி வைத்துக் கொள்ளவும்.  மி.வத்தல் அவரவர் காரத்துக்கு ஏற்ப ஐந்து அல்லது ஆறு, உப்பு, பெருங்காயம்.  பச்சை மிளகாய் ஒன்று அல்லது இரண்டு. கருகப்பிலை.  பொரிக்க சமையல் எண்ணெய்.

நன்கு ஊறிய அரிசியையும் துவரம்பருப்பையும் மிளகாய் வத்தல், உப்பு, பெருங்காயம் சேர்த்து நல்ல நைசாக அரைக்கவும்.  தனியே வைக்கவும்.  உளுந்தை நன்கு கொட கொடவென அரைக்கவும்.  அரைத்த உளுந்து மாவில் கடலை மாவு, அரைத்து வைத்த அரிசி து.பருப்பு மாவைச் சேர்த்து, பச்சை மிளகாய்ப் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கருகப்பிலை, தேங்காய்க் கீறல்கள், ஊறிய கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கவும்.  தண்ணீர் சேர்க்கவே கூடாது.  மாவில் இருக்கும் நீரே போதும்.  எல்லாம் சேர்ந்து மாவு கையால் உருட்டிப் போடும் பதத்துக்கு வரும் வரை கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.  காய்ந்ததும் மாவை போண்டா போடுவது போல் கைகளால் எடுத்து உருட்டி காய்ந்த எண்ணெயில் போடவும்.  மெல்லிய இரும்புக் குச்சி அல்லது மெல்லிய கத்தி இருந்தால் வேகும் வடையைத் திருப்பிப் போடும்போது அதால் குத்தி விடவும்.  இரண்டு மூன்று இடங்களில் இப்படிக் குத்திவிட்டால் எண்ணெய் உள்ளேயும் போய் நன்கு வெந்து கொள்ளும். நன்கு வெந்ததும் மேலே மிதந்து வரும் காராவடைகளை எண்ணெயை வடித்துத் தட்டில் போடவும்.  இது மேலே மொறு மொறுவெனவும் உள்ளே மடிப்பு மடிப்பாக ஓட்டை போட்டுக் கொண்டு மிருதுவாகவும் இருக்கும்.  தொட்டுக் கொள்ளக் காரமான பச்சைக்கொத்துமல்லிச் சட்னி, புதினாச் சட்னி போன்றவை நன்றாக இருக்கும்.

இதையே கொஞ்சம் சுலபமான வழியில் செய்ய.  அரிசியை ஊறவைத்து வடிகட்டிக் காயவைத்து மெஷினில் அரைத்த அரிசி மாவு ஒரு கிண்ணம்.  இதற்கு ஒரு கிண்ணம் உளுந்து ஊற வைத்துக் கொட கொடவென அரைத்து எடுத்துக் கொள்ளவும்.  கடலை மாவு ஒரு கிண்ணம், மற்றச் சாமான்கள் தேங்காய்க் கீறல், கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், கருகப்பிலை, இவற்றோடு மிளகாய் வற்றல் போட்டு அரைக்காமல் மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.  கொட கொடவென அரைத்த உளுந்த மாவில் அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலந்து கொண்டு கருகப்பிலை, கடலைப்பருப்பு, தேங்காய்க்கீறல், பச்சை மிளகாய் போன்றவற்றைக் கலக்கவும்.  இது ரொம்பக் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் போல் நீர் சேர்க்கலாம்.  மற்றவை முன் சொன்னாற்போல் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு போண்டா போல் உருட்டிப் போடவேண்டும்.  இது ருசி மாறும்.

20 comments:

 1. மாறும் ருசியையும் செய்து பார்த்திடுவோம்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி, இரண்டாம் செய்முறை கொஞ்சம் பஜ்ஜி மாவு மாதிரி வரும். :)))) முதல் செய்முறை தான் அசல்! :))))

   Delete
 2. ருசியான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜராஜேஸ்வரி.

   Delete
 3. காராவடை சுவைத்தது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாதேவி, நன்றி.

   Delete
 4. ஞாயிற்றுக் கிழமை கொறிக்க ஏதாவது வேண்டும் என்னும்போது செய்ய உதவும். ஒரு தடவை செய்துடலாம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம், ஒரு தரமாவது இங்கே பண்ணிப் பார்க்க ஆசை, ரங்க்ஸ் கிட்டே சொல்லிப் பயமுறுத்தி வைச்சுட்டு நாளைக்கோ, நாளன்னிக்கோ செய்யப் போறேன். படம் எடுக்கணும். படம் எடுத்தால் போடுவேன். வழக்கம் போல் பார்க்காதீங்க! :)))))

   Delete
 5. இட்லி பதிவிலேயே கேட்கணும்னு நினைச்சேன்.. காராவடைனா என்னாங்கோனு.. தேங்க்ஸ்.

  ReplyDelete
  Replies
  1. அப்பாதுரை, இது மதுரை ஸ்பெஷலாக்கும். :))))

   Delete
 6. பெங்களூரில் இதை வேறே பெயர் சொல்லி விற்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. அது வேறே அப்பாதுரை, சில இடங்களில் மத்தூர் வடைனும், சில இடங்களில் மங்களூர் போண்டோனும் சொல்றாங்க. :))))

   Delete
  2. மங்களூர் போண்டா.. அதேதான்.
   (இல்லையா?)

   Delete
  3. அப்படித்தான் நினைக்கிறேன். :))))

   Delete
 7. ரிசிபி நல்லா இருக்குங்க..இந்த வகை ஐட்டங்களை சாப்பிட்ட கையோடு தண்ணீர் குடிக்காமல் சூடாய் காபி குடித்தால்.. அடடா..அடடா...

  ReplyDelete
  Replies
  1. மோகன் ஜி, அதுவும் ஃபில்டர்காஃபி, பாலும் கறந்த பால்! ஹிஹிஹி, நம்ம வீட்டுக்கு வாங்க இன்னிக்கும் கறந்த பால் காஃபி தான். :))))))

   Delete
  2. கறந்த பாலா.. கிராமங்கள்ளலயே ஆவின் மாதிரி வந்துருச்சே?

   Delete
  3. ஹிஹிஹி, இங்கே இன்னமும் மாடுகள் கட்டிக் கறந்த பால் தான். அதுவும் பசுவின் பால். :)))) சென்னையிலே கூட அம்பத்தூரில் கறந்த பால் தான் வாங்கிட்டு இருந்தோம். அதுக்குனு சில பால்காரர்கள் இருக்காங்க. எருமை மாடு வைச்சிருந்தா எருமைப் பால் கிடைக்கும். பசும்பால் வைச்சிருந்தா பசும்பால் கிடைக்கும். :))))) ஆவின் பாலே வாங்கினதில்லை. ஒரு அவசரத்துக்கு எப்போவானும் வாங்கி இருக்கலாம். சில விசேஷங்களுக்கு முப்பது பேருக்கு மேல் இருக்கையில் வாங்குவோம். பத்துப் பேர் வரையில் நாங்க வாங்கற பால் காரர் கிட்டேயே கிடைச்சுடும். :))))

   Delete
 8. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 9. நன்றி டிடி, பார்த்துட்டேன்.:)))))

  ReplyDelete