உ.கி. கு.மி. காரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம் எடுத்து நறுக்கிக்கோங்க. பச்சை மிளகாய், இஞ்சி விழுது ஒரு டீஸ்பூன், வெங்காயம் நறுக்கியதில் கொஞ்சம் எடுத்துத் தக்காளியோடு அரைச்சு வைச்சுக்குங்க.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு ஜீரகம், சோம்பு தாளித்துக் கொண்டு வெங்காயம், தக்காளி விழுதைப்போட்டு வதக்கிக் கொண்டு, பச்சைமிளகாய் இஞ்சி விழுதையும் போட்டு வதக்கவும்,. நறுக்கிய காய்களைப் போட்டு வதக்கவும். மஞ்சள் பொடி, மி,பொடி, தனியாப் பொடி சேர்க்கவும். தேவையான உப்புச் சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும், தேவையான நீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும். காய்கள் நன்கு வெந்து வரும் நேரம் வறுத்த ஜீரகப் பொடியும் கரம் மசாலாப்பொடியும் சேர்த்து அதிகம் கொதிக்க விடாமல் கீழே இறக்கவும். பச்சைக் கொத்துமல்லி தூவவும். இதை மிக்சட் வெஜிடபுள் கறி என்றும் சொல்வார்கள். கிரேவி வேண்டாம் எனில் நீர் சேர்க்காமல் காய்களை வதக்கிக் கடைசியில் மேலே சொன்ன பொடிகளைச் சேர்த்துக் கீழே இறக்கலாம். பரிமாறும்போது முடிந்தால் கொஞ்சம் சீஸ் சேர்க்கலாம். வீட்டிலேயே பாலில் மேலே இருக்கும் ஏடுகளைச் சேர்த்து (மோர் சேர்க்காமல்) வைத்து ஒரு ஸ்பூனால் கலந்து கொண்டால் போதும். :)))))
மசாலா வாசனை தூக்கலாகத் தெரிய வேண்டுமெனில் அடுப்பில் எண்ணெய் வைத்ததும் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கரைய விடவும்.
ரஞ்சனி நாராயணனின் ஜி+இல் ஒருத்தர் கேட்டதுக்கு மேற்கண்ட சமையல் குறிப்பைக் கொடுத்தேன். அவசரமாக எழுதியது. என்றாலும் பரோட்டா, சப்பாத்திக்குத் துணை போகும் உணவு இது.

உ.கி. கு.மி என்றெல்லாம் போட்டு என்னை ஏன் பயமுறுத்தறீக...
ReplyDeleteஏதேனும் நான் வெஜ் சமாசாரமா
நான் வல்ல.
சுப்பு தாத்தா.
hihihஎங்க அணி நண்பர்கள் புரிஞ்சுட்டிருப்பாங்க. உ.கி. =உருளைக்கிழங்கு, கு.மி.=குடை மிளகாய்.
Deleteஅது சரி, நான் வெஜ்னா என்ன?????:P:P:P:P:P
சுவையாகவே இருக்கும் என்று தெரிகிறது. தேவைப்பட்டால் தேங்காய் கூட அரைத்து விடலாம்!
ReplyDeleteம்ம்ம்ம், கசகசா, தேங்காய், பொ.க. அரைத்து விடலாம் ஸ்ரீராம். க்ரேவி வேண்டாம்னா ஜலம் சேர்க்காமல் பண்ணிக்கலாம். :))))
Delete