காராவடை வேணுமா? யாரும் எப்படினு கேட்கலை. நானும் வீட்டிலே பண்ணலை. இங்கே(புகுந்த வீடு) காராவடை அவ்வளவாப் பிடிக்கிறதில்லை. அதனால் பிறந்த வீடு போறச்சே அங்கே பண்ணினால் சாப்பிடறதோடு சரி! :)))) ஆனாலும் எப்படிப் பண்ணுவாங்கனு பார்க்கலாம். பார்க்க உ.கி. போண்டா மாதிரித் தான் இருக்கும். ஆனால் போண்டா இல்லை.
தேவையான பொருட்கள்: ஒரு சின்ன கிண்ணம் அரிசி, ஒரு டேபிள் ஸ்பூன் து.பருப்பு களைந்து ஊற வைக்கவும். அரிசி எவ்வளவோ அவ்வளவு உளுத்தம்பருப்பைத் தனியாகக் களைந்து ஊற வைக்கவும். கடலை மாவு ஒரு கிண்ணம். ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்புக் களைந்து தனியாக ஊற வைக்கவும். தேங்காய் விருப்பமிருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் பொடிப் பொடியாகக் கீறி வைத்துக் கொள்ளவும். மி.வத்தல் அவரவர் காரத்துக்கு ஏற்ப ஐந்து அல்லது ஆறு, உப்பு, பெருங்காயம். பச்சை மிளகாய் ஒன்று அல்லது இரண்டு. கருகப்பிலை. பொரிக்க சமையல் எண்ணெய்.
நன்கு ஊறிய அரிசியையும் துவரம்பருப்பையும் மிளகாய் வத்தல், உப்பு, பெருங்காயம் சேர்த்து நல்ல நைசாக அரைக்கவும். தனியே வைக்கவும். உளுந்தை நன்கு கொட கொடவென அரைக்கவும். அரைத்த உளுந்து மாவில் கடலை மாவு, அரைத்து வைத்த அரிசி து.பருப்பு மாவைச் சேர்த்து, பச்சை மிளகாய்ப் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கருகப்பிலை, தேங்காய்க் கீறல்கள், ஊறிய கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கவும். தண்ணீர் சேர்க்கவே கூடாது. மாவில் இருக்கும் நீரே போதும். எல்லாம் சேர்ந்து மாவு கையால் உருட்டிப் போடும் பதத்துக்கு வரும் வரை கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும். காய்ந்ததும் மாவை போண்டா போடுவது போல் கைகளால் எடுத்து உருட்டி காய்ந்த எண்ணெயில் போடவும். மெல்லிய இரும்புக் குச்சி அல்லது மெல்லிய கத்தி இருந்தால் வேகும் வடையைத் திருப்பிப் போடும்போது அதால் குத்தி விடவும். இரண்டு மூன்று இடங்களில் இப்படிக் குத்திவிட்டால் எண்ணெய் உள்ளேயும் போய் நன்கு வெந்து கொள்ளும். நன்கு வெந்ததும் மேலே மிதந்து வரும் காராவடைகளை எண்ணெயை வடித்துத் தட்டில் போடவும். இது மேலே மொறு மொறுவெனவும் உள்ளே மடிப்பு மடிப்பாக ஓட்டை போட்டுக் கொண்டு மிருதுவாகவும் இருக்கும். தொட்டுக் கொள்ளக் காரமான பச்சைக்கொத்துமல்லிச் சட்னி, புதினாச் சட்னி போன்றவை நன்றாக இருக்கும்.
இதையே கொஞ்சம் சுலபமான வழியில் செய்ய. அரிசியை ஊறவைத்து வடிகட்டிக் காயவைத்து மெஷினில் அரைத்த அரிசி மாவு ஒரு கிண்ணம். இதற்கு ஒரு கிண்ணம் உளுந்து ஊற வைத்துக் கொட கொடவென அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடலை மாவு ஒரு கிண்ணம், மற்றச் சாமான்கள் தேங்காய்க் கீறல், கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், கருகப்பிலை, இவற்றோடு மிளகாய் வற்றல் போட்டு அரைக்காமல் மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். கொட கொடவென அரைத்த உளுந்த மாவில் அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலந்து கொண்டு கருகப்பிலை, கடலைப்பருப்பு, தேங்காய்க்கீறல், பச்சை மிளகாய் போன்றவற்றைக் கலக்கவும். இது ரொம்பக் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் போல் நீர் சேர்க்கலாம். மற்றவை முன் சொன்னாற்போல் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு போண்டா போல் உருட்டிப் போடவேண்டும். இது ருசி மாறும்.