எங்கள் ப்ளாக் எங்கள் ப்ளாகில் "திங்க"ற கிழமைக்குப் போட்ட பதிவு இது! இங்கேயும் ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு போட்டேன்.
கொஞ்ச நாட்களாக வெங்காயம் அலர்ஜியாக ஆகி விட்டது. சாப்பிடுவோம். இல்லைனு சொல்லலை. இப்போ மாமியார் ஸ்ராத்தம் வந்தப்போ அதுக்காகப் பத்து நாட்கள் முன்னர் வெங்காயம், பூண்டு, மசாலாக்களை நிறுத்தியதில் இருந்து அந்தப் பழக்கத்திலேயே இருக்கோம். இன்னும் மாற்றவில்லை. கிராம்பு, ஏலக்காய் மட்டும் மசாலா சாமான்கள் போடும் இடத்தில் சேர்த்துப் பண்ணுகிறேன். அந்தச் சமயம் மடர் பனீர் வெங்காயம், பூண்டு இல்லாமல் பண்ணினேன். அதை இங்கே பகிர்கிறேன்.
பொதுவாகக் காய்ந்த பட்டாணியில் மடர் பனீர் அதிகம் பண்ணினாலும் இப்போப் பட்டாணிக்கான பருவம் என்பதால் பச்சைப் பட்டாணி கிலோ 40 ரூபாய் விலையில் கிடைப்பதால் அதை வாங்கி உரித்து வைத்துக் கொள்கிறோம். இந்த மடர் பனீர் செய்வதற்குத் தேவையான சாமான்கள்.
பச்சைப் பட்டாணி ஒரு கிண்ணம் சுமார் 200 கிராம். உரித்துக்கழுவி வெந்நீரில் போட்டு வைக்கவும்.
தக்காளி 4, பனீர் சுமார் 100 கிராம் அளவுக்கு. எடுத்துக் கழுவித் துண்டங்களாக்கி வைக்கவும்.
இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, புதினா (இருந்தால்) இஞ்சி/பச்சை மிளகாய் அவசியம். மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைத் துருவிக் கொள்ளலாம். அல்லது பொடியாக நறுக்கிக் கொள்ளலாம்.
தக்காளியை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் வைத்து விட்டுப் பின்னர் தோலை உரித்துக் கொண்டு மிக்சியில் போட்டுச் சாறாக எடுத்துக்கொள்ளலாம். அல்லது இரண்டு தக்காளியை மட்டும் நறுக்கிக் கொண்டு இரண்டு தக்காளியை ப்யூரியாக மேற்சொன்ன முறையில் எடுத்துக்கலாம். இப்போது அடுப்பில் குக்கர், கடாய் ஏதாவது ஒன்றை வைத்து விட்டு ஒரு மேஜைக்கரண்டி சமையல் எண்ணெய்/வெண்ணெய்/நெய் ஏதானும் ஒன்றை விட்டுக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் வைத்திருக்கேன். நான் பண்ணிய அன்று ச்ராத்தம் முடிந்து விட்டதால் சோம்பு, ஜீரகம், லவங்கப்பட்டை சின்னத்துண்டு, மிளகு முழுதாக நாலைந்து, பச்சை ஏலக்காய், கிராம்பு வகைக்கு ஒன்று. கறுப்பு ஏலக்காய் இருந்தாலும் போடலாம். வாசனை தூக்கும். நம்மவருக்குப் பிடிப்பதில்லை.
பின்னர் பச்சை மிளகாய், இஞ்சியைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் நறுக்கிய தக்காளித் துண்டுகளைப் போடவும். ப்யூரி எடுத்திருந்தால் அதைத் தனியாக வைக்கவும். பின்னர் சேர்க்கலாம். எனக்கு எல்லாம் போட்டால் அதிகம் ஆகிவிடும் என்பதால் தக்காளித்துண்டங்களை மட்டும் போட்டு நன்கு வதக்கினேன். தக்காளி வதங்கியதும் அதிலே மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி, மிளகாய்த்தூள் கால் தேக்கரண்டி, தனியாத்தூள் ஒரு தேக்கரண்டி, கரம் மசாலா கால் தேக்கரண்டி, ஜீரகப் பொடி கால் தேக்கரண்டி செர்த்து நன்கு வதக்கினேன். ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் சேர்த்தேன். தக்காளி நன்கு வெந்து குழையும் வரை வதக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு கிண்ணம் நீரைச் சேர்த்துத் தக்காளியை வதக்க/வேக விடலாம்.
தக்காளி சேர்ந்து கொதித்து வரும்போது பச்சைப்பட்டாணியைச் சேர்க்கவும். ப்யூரி எடுத்திருந்தால் இப்போது நீருக்குப் பதிலாக அதைச் சேர்க்கவும்.
பட்டாணியைச் சேர்த்ததும் தேவையான உப்பைப் போட்டுக்குக்கரை மூடவும். அது தயார் ஆவதற்குள்ளாக நறுக்கி வைத்திருக்கும் பனீர்த் துண்டங்களைக் கடாயில் நெய்யை விட்டுப் பிரட்டிக் கொள்ளவும். இரு பக்கமும் ப்ரவுன் நிறமாக வந்ததும் அடுப்பை அணைக்கவும். அதிகம் இருந்தால் ரப்பர் மாதிரி ஆகிவிடும்.
குக்கரில் இரண்டு விசில் கொடுத்தால் போதும். பின்னர் குக்கர் தானாக ப்ரஷர் குறைந்ததும் திறந்து வறுத்த பனீர்த்துண்டங்களைச் சேர்க்கவும். கொத்துமல்லி, புதினாப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். ஒரு சிலர் தக்காளி வதக்கும்போதே கொத்துமல்லி, புதினாவையும் போட்டு வதக்கிச் சேர்ப்பார்கள். அவரவர் விருப்பம்.
ஜெயின் மதத்தவர் பொதுவாக பூமிக்கு அடியில் விளைபனவற்றைச் சாப்பிட மாட்டார்கள். ஆகவே அவர்கள் உணவில் வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, காரட், முள்ளங்கி, பீட்ரூட், போன்ற மண்ணுக்கு அடியில் விளையும் காய்கள், கிழங்குகள் சேர்க்காமல் பண்ணுவதால் இதை ஜெயின் முறையிலான உணவு என்கிறோம். நாங்க பொதுவாக உருளைக்கிழங்கு வேகவைத்துப்பண்ணும் காரக் கூட்டே சப்பாத்திக்கு வெங்காயம், பூண்டு இல்லாமல் இப்படி ஜெயின் முறையில் பண்ணுவோம். அமாவாசை, விரத நாட்கள், மாதப் பிறப்பு, புண்யகாலம் போன்ற தர்ப்பண தினங்களில் சப்பாத்தியை இரவுக்கு எனத் தேர்வு செய்தால் இம்மாதிரித் தயார் செய்து சாப்பிடலாம்.
நன்றி. லிங்க்கைக் க்ளிக்கினால் தனி ஜன்னலில் திறக்குமாறு அமைக்கலாம்!
ReplyDelete"லிங்க்-ஆங்கிலம், க்ளிக்-ஆங்கிலம். ஜன்னல்-தமிழ் அல்ல. பேசாமல் அதற்கும் விண்டோ என்றே உபயோகித்திருக்கலாம்.
Deleteபுரியலையே ஶ்ரீராம்!
Deleteகலாம்!
Deleteஆனாலும் அக்காவுக்குப் புரியலையே...!
புரிஞ்சது. ஆனால் எனக்குத் தனியாகவே வருது. அதான் சொன்னேன். உங்களுக்கு ஏன் வரலைனு எனக்குப் புரியலைனு சொன்னேன். இஃகி,இஃகி,இஃகி!
Deleteமடர் பனீர் செய்முறை அருமைதான். இங்கேயும் இருந்தால் நல்லதுதான்.
ReplyDeleteநன்றி நெ.த.
Deleteநீங்க மைதா உபயோகிக்கிறீங்களா? நம்ம ஊர்ல பண்ணும் வீச்சு பரோட்டாலாம் பண்ணறீங்களா?
ReplyDeleteஹையோ, வீச்சுப் பரோட்டா இல்லை இல்லை புரோட்டா bhurotttaa எல்லாம் தெருவோரக் கடைகளில் மைதாவை அடிக்கையில் பார்த்தது தான். பண்ணினதையும் பார்த்தது இல்லை. சாப்பிட்டும் பார்த்தது இல்லை. தமிழ்நாட்டில் உள்ள வட இந்திய ரெஸ்டாரன்டுகள் கூட பராத்தா எனில் மைதா பராத்தாதான் கொடுக்கிறார்கள். ஆகவே இங்கெல்லாம் பராட்டாவே சாப்பிடுவதில்லை/சாப்பிட்டதும் இல்லை. மைதா கைவசம் இருக்கும். எப்போவானும் ஒரு கரண்டி/அரைக்கரண்டி எடுத்துக்கும்படி இருக்கும் அவசரத்துக்கு. ரவா தோசைக்குக் கூட அரிசிமாவோடு கோதுமை மாவு, உளுத்தமாவு சேர்த்துத் தான் வார்ப்பேன். அரைக்கிலோ மைதா வாங்கினால் அது பாட்டுக்குக் கிடக்கும். நானாகப் பார்த்துத் தீர்த்தால் உண்டு. வீச்சு பரோட்டானு நீங்கல்லாம் சொல்லித் தான் கேள்வி. பண்ணினதெல்லாம் இல்லை.
Deleteஇங்கேயும் சேமித்தது நன்று.
ReplyDeleteநம் ஊரில் பலருக்கும் புரோட்டாவிற்கும் பரோட்டாவிற்கும் உள்ள வித்தியாசம் புரிவதே இல்லை!
நன்றி வெங்கட். ஆமாம், பராத்தாவே வேறே! இங்கே கொடுக்கும் புரோட்டோ வேறே! புரோட்டான்னாலே ஓடிடணும் போல இருக்கும்.
Delete