எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, September 4, 2018

உணவே மருந்து! கம்பு! 2 கம்பில் அடை!

கம்பு அடை!

தேவையான பொருட்கள்

கம்பு ஒரு கிண்ணம்

இட்லி அரிசி+பச்சரிசி இரண்டும் சேர்ந்து அரைக்கிண்ணம்

துவரம்பருப்பு+கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து முக்கால் கிண்ணம். துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை மொறுமொறுவென்றும் நிறமாவும் வரும். என்றாலும் கம்பு சேர்ப்பதால் கொஞ்சம் நிறம் கம்மி தான்.

4  மி.வத்தல்+பச்சை மிளகாய் 2

உப்பு, பெருங்காயத் தூள், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) அல்லது சின்ன வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். அவரவர் விருப்பம் போல்.
கருகப்பிலை, கொத்துமல்லி. வேறு ஏதேனும் கீரையைக் கூடப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். நான்  ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்தேன்..  காலை சுமார் பத்து மணி அளவுக்கு ஊற வைத்தேன். மாலை நாலு மணி சுமாருக்கு அரைத்தேன். இரவுக்கான உணவு தயார். எந்தச் சிறு தானியம் போட்டாலும் கொஞ்சம் போல் இட்லிப் புழுங்கல் அரிசியும், பச்சரிசியும் சேர்த்தால் செய்வதற்கு எளிது.

இதே போல் கம்பில் தோசையும் வார்க்கலாம்.

கம்பு+புழுங்கல் அரிசி+பச்சரிசி  இரண்டு பங்கு கம்புக்கு புழுங்கலரிசியும், பச்சரிசியுமாய்க் கலந்து ஒரு பங்கு. முக்கால் கிண்ணம் உளுத்தம்பருப்பு, இரண்டு டீஸ்பூன் வெந்தயம். கம்பைத் தனியாக ஊற வைக்க வேண்டும். புழுங்கலரிசி+பச்சரிசியை ஒன்றாக ஊற வைத்துக் கொண்டு வெந்தயத்தையும் உளுத்தம்பருப்பையும் சேர்த்து ஊற வைக்கவேண்டும். கம்பை முதலில் அரைத்துக் கொண்டு பின்னர் அரிசிகளைச் சேர்த்து அரைக்க வேண்டும். நல்ல நைஸாகவே அரைக்கலாம். பின்னர் உளுத்தம்பருப்பு+வெந்தயம்  போட்டதை அரைக்க வேண்டும். இட்லி, தோசைக்கூ அரைப்பது போல் உளுத்தம்பருப்பை அரைக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உப்புப் போட்டுக் கரைத்து வைத்துப் புளிக்க விட வேண்டும். இட்லி அல்லது தோசை எது வேண்டுமானாலும் செய்யலாம். சட்னி, சாம்பார், கொத்சு என எதுவேண்டுமானாலும் தொட்டுக்கலாம்.9 comments:

 1. அட... கம்புல அடை செய்து அதைப் படமும் எடுத்துப் போட்டுட்டீங்களே கீசா மேடம். கவிழ்ந்து கிடக்கும் அடையில் வெங்காயம் இருக்கான்னு தெரியலை. ஹாஹாஹா

  ReplyDelete
  Replies
  1. ஹையோ, ஹையோ, இது 2/3 வருஷம் முன்னாடி பண்ணின கம்பு அடையோட படம். எண்ணங்கள் பதிவிலிருந்து காப்பி, பேஸ்ட் பண்ணினேன். இஃகி, இஃகி, அவ்வளவு அழகாப் படிக்கிறீங்க! :)))))))))) இங்கே பாருங்க, நீங்க அப்போல்லாம் வந்ததில்லை! :)))))

   http://sivamgss.blogspot.com/2015/09/blog-post_27.html

   Delete
  2. நீங்க சமையல்லதான் திப்பிச வேலை பண்ணுவீங்கன்னா, இடுகையிலும் அதைத்தான் செய்யறீங்களா? என்னைப்போல் அப்பாவி வாசகர்கள் என்னதான் செய்யறது?

   Delete
  3. இது ஒண்ணும் திப்பிசம் பண்ணலையே! என்னோட பதிவிலே இருந்து தான் படத்தை மட்டும் எடுத்துப் போட்டிருக்கேன். :)

   Delete
 2. இதையெல்லாம் நா(ங்கள்)ன் செய்ததே இல்லை கேட்டீங்களா?!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், நாங்க இதை எல்லாம் செய்வோம்ட்டேளா! :)

   Delete
 3. கம்படை - அத்தைப் பாட்டி செய்து சாப்பிட்டதோடு சரி. இப்போதெல்லாம் செய்வதில்லை. இங்கே பாஜ்ரா கிடைக்கிறது - செய்து பார்க்கலாம்.... இந்த ஞாயிறில் செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், உங்க அத்தைப் பாட்டியும் ராமநாதபுரம் பக்கமோ? ஏன்னா எங்க தாத்தா வீட்டிலேயும் இதெல்லாம் அடிக்கடி சேர்ப்பார்கள். அதனால் எங்களுக்கெல்லாம் பழக்கம் ஆனது! :)

   Delete
 4. ஓ... கம்பு அடை செய்து பார்க்கிறேன், நிறையப் பருப்பு வகை சேர்த்திருப்பதால் நிட்சயம் சுவையாக இருக்கும்..

  ReplyDelete