எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, April 28, 2018

உணவே மருந்து! பாலக் பனீர்

தொடர்ந்து எழுத நினைக்கையில் தான் தடங்கல்கள்.  இம்முறை  இ கலப்பை பாடாய்ப் படுத்தினாலும் மீட்டதிலும் சில, பல பிரச்னைகள். நாம் ஷிஃப்ட் அழுத்தாமலேயே ஷிஃப்டில் உள்ள எழுத்துகள் வருகின்றன. ஈ போட்டு எழுத வேண்டியது அதுவரவில்லை. போடாமலேயே 'இ' சேர்த்து எழுதும்போது ணீ என மாறி  விடுகிறது. தேவையில்லாத இடங்களில் கால் வாங்கிச் சேர்கிறது. வேகமான தட்டச்சைச் செய்ய முடியலை! ஏதோ ஒரு சின்னப் பிரச்னை. என்னனு புரியலை!

பாலக் பனீர் செய்ய: பாலக் ஒரு கட்டு.

பனீர் சுமார் 100 கிராம் அல்லது அவரவர் விருப்பத்துக்குத் துண்டங்களாகச் சதுரமாக வெட்டி வைக்கவும். உப்புக் கலந்த வெது வெதுப்பான நீரில் கழுவி வைக்கவும்.

தனியே ஒரு கடாயில் வெண்ணேய் அல்லது நெய் ஊற்றீப் பனீர்த் துண்டங்களை  வறுத்துத் தனியாக வைக்கவும்.

பச்சை மிளகாய் 2, இஞ்சி ஒரு சின்னத் துண்டு, பூண்டு தேவையானால் 4

தக்காளி  இரண்டு பழமாக, வெங்காயம் ஒன்று

மிளகாய்ப் பொடி அரை டீஸ்பூன், மல்லித் தூள் ஒரு டீஸ்பூன், மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், கரம் மசாலா தேவைக்கேற்ப.

உப்பு, ஆம்சூர் பொடி ஒரு டீஸ்பூன்,  எண்ணெய்

தக்காளி  ப்யூரி அல்லது வீட்டில் எடுக்கப்பட்ட ப்யூரி

தாளிக்க ஜீரகம், சோம்பு, சர்க்கரை கொஞ்சம்

முதலில் பாலக்கைக் கழுவிப் பொடியாக நறுக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய்  ஊற்றி ப் பாலக்கைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும். ஆற வைக்கவும்.

தக்காளி , வெங்காயத்தைப் பச்சையாக நன்கு அரைத்துக் கொள்ளவும்.  அந்த ஜாரிலேயே வதக்கிய பாலக், இஞ்சி, ப.மி. பூண்டு போட்டு அரைக்கவும்.

இப்போது மறுபடி கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய்   ஊற்றி  ஜீரகம் சோம்பு தாளிக்கவும். முதலில் வெங்காயம் தக்காளிக் கலவையைப் போட்டு நன்கு எண்ணெய்   பிரியும் வரை வதக்கவும். சர்க்கரையைச் சேர்க்கவும். சீக்கிரம் வதங்கும். அதன் பின்னர் அரைத்த பாலக் விழுதைப் போட்டு வதக்கவும். வதக்கும்போதே மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி சேர்க்கவும். நன்கு வதக்கவும். மறுபடி எண்ணெய்  பிரியும் சமயம் உப்புச் சேர்க்கவும். தக்காளி  ப்யூரியை கெட்டியாக இருந்தால் கொஞ்சம் ஜலம் விட்டுக் கரைத்துச் சேர்க்கவும். அல்லது பெரிய தக்காளி  இரண்டை மிக்சி ஜாரில் நன்கு அரைத்துச் சேர்க்கவும்.

கொதிக்க விடவும். ரொம்ப கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் சேர்க்கலாம். கொதித்து வரும்போது கரம் மசாலாத் தூள், ஆம்சூர் தூள் இரண்டும் சேர்க்கவும். நன்கு கொதிக்கையில் வறுத்த பனீர்த் துண்டங்களைச் சேர்த்துக் கீழே இறக்கவும்.  புதுசாக எடுத்த க்ரீம் கிடைத்தால் மேலே அலங்காரமாக ஊற்றலாம்.  ஒரு சிலர் கொழுப்புச் சத்துள்ள பால் சேர்ப்பார்கள். அவரவர் விருப்பம்.

Image result for பாலக் பனீர்

இதிலேயே இன்னொரு முறாஇயும் இருக்கு. அது நாளாஇ

எழுத்துப் பிழை பொறூக்கவும். :(

8 comments:

 1. பாலக் பனீர் - நல்லதொரு சப்ஜி - சப்பாத்திக்கு சைட் டிஷ்! சாதத்துடன் சாப்பிட ஏற்றதல்ல.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், ஆதரவுக்கு நன்னி ஹை!

   Delete
 2. நீங்க வேகமா தட்டச்சு செய்யாதீங்க. அதுனாலதான் எழுத்துப்பிழை வருது. சாஃப்ட்வேர் இண்டெர்ப்ரெட் செய்ய கொஞ்சம் நேரம் எடுக்குது போலிருக்கு.

  நீங்க, உங்க எழுத்துப் பிழையை நாங்க 'பொறுக்கச் சொல்லியிருக்கீங்க. பொறுக்கினாலும் போகிற பிழையா.. அத்தனை பிழை இந்த இடுகையில் ஹா ஹா ஹா (இருந்தாலும் உங்க முயற்சியைப் பாராட்டறேன். கலாய்த்தல் ஜாலிக்குத்தான்)

  நான் வேறொரு பனீர் செய்முறை ஸ்ரீராமுக்கு அனுப்பவேண்டி இருக்கிறது. நிறைய வேலைகள். அதனால் இன்னும் செய்யலை.

  எனக்கு பொதுவா பாலக் பனீர் பிடிக்காது. எனக்கு எப்போவும் மட்டர் பனீர்தான்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, நான் பிறவித் தட்டச்சராக்கும்! ;))))) பாலக் பனீர் எனக்கும் பிடிக்காது. பாலக்கை விட்டுட்டுப் பனீர்த் துண்டங்கள் மட்டும் சாப்பிடுவேன்.

   Delete
 3. இதுல அம்சூர் பொடி என்பது புதிய செய்தி. அதனால் அடுத்த முறை அம்சூர் பொடி வாங்கி உபயோகித்துப் பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அம்சூர்ப் பொடி சேர்க்கலைனா தக்காளீ ப்யூரி பயன்படுத்தலாம்.

   Delete
 4. நான் பாலக் பனீர் செய்ததில்லை. யாராவது செய்திருந்தால் சாப்பிட்டுப் பார்க்கலாம்!

  ஒருநாள் முன்னதாக உங்கள் இடுகைகளை வாட்ஸாப்பிலோ, மெயிலிலோ எனக்கு அனுப்பினால் பிழைகளைச் சரி செய்து அனுப்பி விடுகிறேன். அப்புறம் வெளியிடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. என்னிக்கு எழுதுவேன்னு எனக்கே தெரியாதே! ஹெஹெஹெஹெ!பாலக் பனீர் சாப்பிட அண்ணா நகர் சுக் சாகர் என்னும் ஓட்டலில் சாப்பிட்டுப் பார்க்கவும். பொதுவாவே அங்கே எல்லாமும் நன்றாக இருக்கும்.

   Delete