அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா! அடுத்தடுத்து இந்த வலைப்பக்கங்களில் எழுத முடியாமல் போகிறது. இன்னிக்கு எப்படியானும் எழுதிடணும்னு நினைச்சுப்பேன். முடியறதில்லை. பொதுவாக எல்லாக் கீரைச் சமையல்களும் ஒரே மாதிரி என்பதால் எல்லா வகைக்கீரையையும் சமைக்கும் விதம் குறித்துச் சொல்லப் போவதில்லை. அந்த அந்தக் கீரையின் மருத்துவ குணங்கள், பலன் பற்றி மட்டும் குறிப்பிடப் போகிறேன். போன பதிவில் கீரைப் பருப்பு உசிலி பற்றிப் பார்த்தோம். முருங்கைக்கீரை, மணத்தக்காளிக்கீரை உட்பட எல்லாக் கீரைகளிலும் இவ்வகைப் பருப்பு உசிலியைத் தயாரிக்கலாம்.
முதல்லே நெ.த. கேட்ட கீரைச் சுண்டல். சமீபத்தில் ஒரு ஓட்டலில் கூடச் சாப்பிட்டாலும் அதில் பூண்டு சேர்த்திருந்தார்கள். அது என்னமோ பூண்டு எங்க ரெண்டு பேருக்கும் ஒத்துக்கறதே இல்லை. நெஞ்செரிச்சல் வந்துடுது! ஒரு மாதிரியாக ஏப்பம் வரும்! ஆகவே பூண்டே வெளியே சென்றால் ஓட்டல் சாப்பாட்டில் தவிர்க்க முடியாமல் சாப்பிட்டால் தான். நான் பெரும்பாலும் ஓட்டலில் சாப்பாடு சாப்பிடுவதை இதனாலேயே தவிர்ப்பேன். ஆனால் அன்று காலை ஆகாரம் சாப்பிடாத காரணத்தினால் ஒருவேளையாவது சாப்பிடணுமே என மதியம் சாப்பிட நேர்ந்தது.
எந்தக் கீரையானாலும் ஒரு கட்டு எடுத்துக் கொண்டு நன்கு அலசிக் கழுவிப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொஞ்சம் பாசிப்பருப்பை எடுத்துக் கழுவிக் கொண்டு ஊற வைக்கவும். ஒரு கட்டுக்கீரைக்கு அரைக்கரண்டி பாசிப்பருப்பு போதும். தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன். உப்பு தேவைக்கு.
தாளிக்க
கடுகு, உளுத்தம்பருப்பு, மி.வத்தல். தேவையானால் கொஞ்சம் போல் சர்க்கரை
கீரையையும் பருப்பையும் சேர்த்து வேக வைக்கவும். பருப்பு நசுங்கும் பதம் வரும் வரை வேக வைத்துப் பின்னர் உப்புச் சேர்க்கவும். அதிகப்படி நீரை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டால் தக்காளிச் சாறு சேர்த்தோ சேர்க்காமலோ மிளகுத் தூள் தூவி சூப் மாதிரிச் சாப்பிடலாம். கீரையை வடிகட்டிய பின்னர் அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் கொண்டு கடுகு, உபருப்பு தாளிக்கவும். மி.வத்தலைக் கிள்ளிச் சேர்க்கவும். வெந்த கீரையைப் போட்டு நன்கு கிளறவும். தேவையானால் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். (எங்க வீட்டில் தேங்காய் போட்ட கறிகளுக்குச் சர்க்கரை கொஞ்சம் சேர்ப்போம்.) பின்னர் தேங்காய்த் துருவலையும் சேர்த்துவிட்டு நன்கு கிளறவும். நன்கு பொலபொலவென வந்ததும் எடுத்துப் பாத்திரத்தில் மாற்றிச் சாப்பிடும்போது பரிமாறவும்.
இதையே தேங்காய் போடாமல் தக்காளி வெங்காயம் சேர்த்தும் பண்ணலாம். தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு வதக்கிக் கொண்டு தக்காளியையும் சேர்த்து நன்கு தக்காளி குழையும் வரை வதக்கிப் பின்னர் கீரையைச் சேர்க்க வேண்டும். கீரையைச் சேர்த்து நன்கு கிளறியதும் கீழே இறக்கிப் பரிமாறவும். அடுத்து பாலக் பனீர் தயாரிக்கும் முறை பற்றிப் பார்ப்போம். பனீர் பையர் வருகைக்காகக் கொஞ்சம் வாங்கி வைச்சிருந்தேன். அவர் ஊருக்குக் கிளம்பும் முன்னர் கடாய் பனீர் செய்து கொடுத்தேன். ஆகவே பனீர் தீர்ந்து விட்டது. வாங்கலாம்னா நம்ம ரங்க்ஸுக்கு அது என்னமோ அலர்ஜி! :( வாங்க விட மாட்டார். என்றாலும் செய்முறை எழுதறேன். அடுத்து வரும்.
படங்கள் என்னிடம் எடுத்தது ஏதும் இல்லை. கூகிளில் தேடினால் காப்பிரைட் இருக்கிறது எனச் சொல்கிறது. ஆகவே படம் போட முடியலை!
படங்கள் என்னிடம் எடுத்தது ஏதும் இல்லை. கூகிளில் தேடினால் காப்பிரைட் இருக்கிறது எனச் சொல்கிறது. ஆகவே படம் போட முடியலை!
நல்ல குறிப்புகள்....
ReplyDeleteபாலக் பனீர் நல்லது. சிலருக்கு இது பிடிபபது இல்லை.
வாங்க வெங்கட், பனீரே உடலுக்கு நல்லது. ஆனால் என்னமோ இவருக்குப் பிடிக்காது! இப்போ ஒரே கவலை வாங்கி இருக்கும் சீஸைத் தீர்க்கணுமேனு! :)
Deleteபடம் இருந்தால் இன்னும் ரசிக்கலாம். சுண்டல் செய்முறை நன்றாக இருக்கிறது. சர்க்கரை சேர்த்ததில்லை இதுவரை. பெருங்காயம் வேண்டாமோ!
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், கீரைச் சுண்டல் மட்டுமில்லாது இம்மாதிரித் தேங்காய்+பருப்புச் சேர்க்கும் எந்தக் கறி வகைகளுக்கும் பெருங்காயம் தேவை இல்லை. சர்க்கரை சேர்த்தால் கொஞ்சம் தூக்கிக் காட்டும்.
Deleteஆஹா.. கீரைச் சுண்டலா. நன்றாகத்தான் இருக்கு.
ReplyDeleteபாலக் பனீர் நான் எப்போவாவது சாப்பிடுவது (அதன் கீரை நல்லது என்ற எண்ணத்தில்)
வாங்க நெ.த. எனக்குப் பிடிச்சால் அவருக்குப் பிடிக்காது, அவருக்குப் பிடிச்சால் எனக்குப் பிடிக்காது. இன்னிக்குப் பல வருஷங்கள் கழிச்சுப் புளி விட்ட கீரை ரங்க்ஸின் அனுமதியோடு பண்ணிச் சாப்பிட்டோம். சாதாரணமா இதெல்லாம் பண்ண விட மாட்டார். எப்போவானும் மோர்க்கீரை மட்டும் அலவ்ட்! :))))
Deleteஎங்கள் வீட்டில் (திருமணத்துக்கு முன்னால்) கீரைச் சுண்டலில் பாசிப்பருப்பு பார்த்த ஞாபகம் இல்லை. பூண்டு சான்சே இல்லை.
ReplyDeleteஎங்க வீடுகளிலும் பூண்டு பிரசவித்த பெண்களுக்கு மட்டுமே சேர்ப்பார்கள் நெ.த. அதைப் பார்க்கையிலேயே எனக்கு நாளைக்கு நமக்கும் இப்படிப் போடுவாங்களே என்ற பயம் வரும். நல்லவேளையா முதல்முறை பூண்டு சேர்த்தப்போவே எனக்கு ஒத்துக்காமல் போனது! :)
Deleteஇதில் ரெண்டு வகையும் செய்வேன் ..ஆனால் தாளிக்க கட்டாயம் தேங்காய் எண்ணெய்தான் எப்பவும் .கீரைக்கு தேங்கா எண்ணெய் குறிப்பா அரை முளை பொன்னாங்கண்ணி வகைகளுக்கு எக்ஸ்டரா சுவையூட்டும் ,
ReplyDeleteதேங்காய் சேர்த்து வதக்கி நெய் ஊற்றி ஒரு அப்பளம் பிசைந்து சாப்பிட ஆஹா !!ஆனா எனக்கே சமைச்சி போரடிச்சி யாராவது சமைச்சி கொடுக்க மாட்டங்களான்னு இருக்கு :)
ஆமாம் ஏஞ்சல், கீரைக்குத் தாளிதம் தேங்காய் எண்ணெயில் தான் நன்றாக இருக்கும். கீரைச் சுண்டல் பிசைந்தும் சாப்பிடலாம், நீங்க சொன்ன மாதிரியில்!
Deleteசர்க்கரை சேர்த்தா கீரை பச்சைநிறம் அப்டியே இருக்கும்னு படிச்சேன் எங்கியோ
ReplyDeleteஏஞ்சல், அது வேகும்போது சேர்க்கச் சொல்லுவாங்க. இது வெந்தபின் தாளிதத்தில் சேர்க்கச் சொல்றேன். :) சுவைக்காக மட்டும்!
Delete