எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, June 11, 2017

உணவே மருந்து! முருங்கை!

அநேகமாக முருங்கைக்காய் பிடிக்காதவங்க இருக்கமாட்டாங்க. ஆனால் எனக்குப் பிடிக்காது. அதைச் சாப்பிடவே அலுப்பாக இருக்கும். என்றாலும் முருங்கைக்கீரையைச் சமைப்பேன். முருங்கைப் பூவையும் சமைப்பேன். முருங்கைப்பூவைப் பாசிப்பருப்புச் சேர்த்துக் கூட்டுச் செய்யலாம்.முருங்கைக்கீரையையும் நெய் சேர்த்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கலாம். அல்லது பாசிப்பருப்புச் சேர்த்துக் கூட்டு, கறி செய்யலாம். எளிதில் ஒடிக்கக் கூடிய கிளைகள் இருப்பதால் இதற்கு முருங்கை என்று பெயர் என்று சொல்கிறார்கள். ஒரே ஒரு பிரச்னை என்னவெனில் முருங்கை மரத்துக்குக் கம்பளிப் பூச்சி வரும் என்பதால் இந்த மரத்தை வளர்க்கையில் அக்கம்பக்கத்தவர் ஆக்ஷேபணை கிளப்புவார்கள். கிளப்பி இருக்கிறார்கள். மரத்தை வெட்டிட்டோம். :)

Image result for முருங்கை


படத்துக்கு நன்றி கூகிளார்

முருங்கை மரம் 30 அடி வரை வளரும். பெரும்பாலும் தென்னிந்தியர்களே இதை அதிகம் சாப்பிட்டு வந்தாலும் இதன் பூர்விகம் இமயமலை அடிவாரம் என்கிறார்கள். வடக்கே ராஜஸ்தானில் நாங்க இருந்தப்போ முருங்கைப் போத்துத் தமிழ்நாட்டிலிருந்து எடுத்துச் சென்று நட்டு வளர்த்தோம். :) பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்காள தேசம், ஃபிலிப்பைன்ஸ், ஆஃப்ரிக்கா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன. இது அதிகம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில்காணப்பட்டாலும், இலங்கையிலும் உள்ளது.  தாய்லாந்து, தாய்வானிலும் காணப்படுவதாகச் சொல்கின்றனர்.

எல்லாவகை மண்ணிலும் வளரக் கூடிய முருங்கை வறண்ட, நீர்ப்பாசன வசதி குறைவாக உள்ள, வெப்பம் அதிகமான பகுதியிலும் கூட நன்கு வளரக் கூடிய இயல்பு உள்ளது.  இது ஓராண்டுப் பயிர் என்கின்றனர். நட்டு வளர்ந்து ஆறு மாதத்தில் பயன் கொடுக்கும். ஒரு மரத்திற்கு 200 முதல் 300 வரை காய்கள் கிடைக்கலாம்.  மூலிகை மருத்துவத்தில் முருங்கை அதிகம் பயன்படுத்தப் படுகிறது. இதன் இலை சத்து அதிகம் உள்ளது. நஞ்சு எதிர்ப்பு மற்றும்நீர் சுத்திகரிப்புக்குப் பயன்படும்.  இதன் இலைகளில் வைடமின் பி, சி, கே, புரோவிடமின் ஏ எனப்படும் பீட்டா கரோட்டின், மங்கனீசு மற்றும் புரதம் ஆகியவை அடங்கியுள்ளதால் உடல் தெம்புக்கும் சத்தான உணவுக்காகவும் இதைப் பரிந்துரை செய்கின்றனர்.  ரத்தத்தை சுத்திகரித்துக் கிருமிநாசினியாகச் செயல்படுவதால் தோலைப் பளபளப்பாக வைப்பதோடு அல்லாமல் முகப்பருக்கள் வராமல் தடுப்பதாகவும் சொல்கின்றனர். 

6 comments:

  1. நீங்க வேற. எங்களுக்கு முருங்கைக்காய், அதன் பிற ஐட்டங்கள் (இலை, பூ...) தடை செய்யப்பட்டவைகள். நீங்க, வெண்ணெயை உருக்கும்போது, முருங்கை இலை போடுவீங்க. நாங்க கருவேப்பிலை உபயோகப்படுத்துவோம்.

    எனக்கு முருங்கைக்காய் பிடிக்காது. அதுவும் சிலர், அவியலில் போட்டால், கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. அம்பேரிக்காவிலும் ஃப்ரோசன் முருங்கைக்காய்கள் கிடைக்கின்றன! :)ஆனாலும் எனக்கு என்னமோ அவ்வளவாப் பிடிக்கிறதில்லை!

      Delete
  2. நம்ம ஊர்ல வீட்டுக்கு வீடு தானா வளர்ந்த இந்த மர இலைகளை விதைகளை இங்கே பெரிய கடைகளில் காப்ஸ்யூல் போலவும் பவுடராகவும் ஹெர்பல் டீயாவும் அதன் விதைகளில் எண்ணெய் எடுத்தும் விக்கிறாங்கக்கா ..
    இங்கிருக்கிற ஸ்ரீலங்கன் தமிழ் கடைக்காரர் ஒருவர் சொன்னார் மொராக்கோவில் இந்த முருங்கையை பயிர் செஞ்சு இங்கே எக்ஸ்போர்ட் பண்றங்களாம் அவங்களுக்கு இதை சாப்பிட சமைக்க தெரில .

    ReplyDelete
    Replies
    1. அம்பேரிக்காவில் எல்லோரும் பயன்படுத்துகிறாங்க! அதாவது நம்மைப் போல் தமிழ், ஆந்திர, கர்நாடகக் கேரளத்தவர்! :)

      Delete
  3. முருங்கை மரம் எங்கள் வீட்டு வாசலில் இருக்கிறது. கம்பளிப் பூச்சி தொந்தரவைப் பொருட்படுத்துவதில்லை. சமீபத்தில் 13 காய்கள் அந்த மரத்தின் உச்சிக்கு கிளைகளுக்கு அருகே, உயரத்தில் காய்த்திருக்க அவற்றைப் பறிக்கப் பட்ட பாடு! ஆனாலும் விடவில்லை!!

    ReplyDelete
    Replies
    1. கம்பளிப் பூச்சி கடித்து அரிப்பு வந்தால் லேசில் போகாது! கவனமாக இருக்கவும். மேலே பட்டாலோ துணியில் இருந்தாலோ கூட அரிப்புத் தாங்காது!

      Delete