எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, April 4, 2014

வடாம் திருடர்கள் ஜாக்கிரதை! :(

எங்க குடியிருப்பில் அநேகமாக எல்லாருமே நான் வடாம் போடுவதைப் பார்த்துட்டு இந்தவருஷம் போட்டாங்க.  முந்தாநாள் அரிசிமாவில் வெங்காயக் கறிவடாம் போட்டேன்.  முந்தாநாள் வைச்சதில் ரங்க்ஸ் ரொம்பவே உருண்டையாக உருட்டி விட அதெல்லாம் உள்ளே காயவில்லை.  அதனால் நேத்திக்கு எல்லாத்தையும் ஒரு பெரிய தட்டில் மாற்றிக் காய வைத்திருந்தேன். கிட்டத்தட்ட 2 கிலோ வடாம் இருக்கும். யாரோ வந்து அத்தனை வடாமையும் எடுத்துட்டுப் போயிட்டாங்க.  வெறும் காலித் தட்டு மட்டும் நாங்க வைச்ச இடத்திலேயே இருந்தது.  ரொம்பப் பெரிய தட்டு என்பதால் அதை எடுத்துட்டுப் போனாத் தெரிஞ்சுடும்னு எடுத்துட்டுப் போகலை போல!  இன்னொருத்தர் போட்டிருந்த வடாம்களில் கொஞ்சத்தை மட்டும் வைச்சுட்டு, (ருசி பிடிக்கலையோ?) மிச்சம் எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயிருக்காங்க. என்னத்தைச் சொல்றதுனு ஒண்ணும் புரியலை! போன வருஷம் அமெரிக்காவுக்கு அனுப்ப, மாமியாருக்குனு கொடுக்கிறதுக்காகனு நிறையவே போட்டேன். அப்போல்லாம் ஒண்ணுமே நடக்கலை.  இந்த வருஷம் இப்போத் தான் ஆரம்பிச்சேன். அதுக்குள்ளே திருட்டு! :((((

35 comments:

 1. அது என்ன வெங்காயக் கறி வடாம் ?

  நான் வெஜ் சமாச்சாரமா இருக்குமோ ?

  என்ன தான் இருந்தாலும் திருடனை சும்மா விடக்கூடாது.

  ஒன்னு இரண்டு யோசனை:

  1. அந்த இடத்திலே ஒரு சைலென்ட் சீக்ரெட் காமெரா பொருத்தி யார் எனக் கண்டு பிடிக்கலாம்.

  2. அந்த ஊர் தொகுதியிலே வடாம் கொடுத்து ஒட்டு கேட்க யாராவது முயற்சி பண்ணுகிறார்களா என்று தெரிந்து கொள்ள எலக்ஷன் கமிஷனுக்கு இன்பார்ம் செய்யலாம்

  3/. ஒரு 50000 பிட் நோட்டிஸ் அடித்து இந்த வடம் திருடனை கண்டு பிடித்து கொடுப்பவர்க்கு, 5000 வடம் இனாமாக தரப்படும் என்று சொல்லலாம்.

  4. அந்தப் பக்கம் இந்தப் பக்கம் ஆஞ்சநேயர் எங்கேயாவது இருக்காரா என்று பார்த்து அவருக்கு ஒரு வடமாலை சாத்தறேன் , இனிமேலாவது இந்த உபத்ரவம் இல்லாது பார்த்துக்கோ என்று பிரார்த்தனை செய்யலாம்.

  5. இத்தனைக்கும் மேலாக, ஒரு யோசனை. எப்பவுமே பிரிவென்சன் இஸ் பெட்டர் . அதுனாலே, இனிமேல் வடாம் போடும்போது,ஆத்துக்காரரை, ஒரு கம்பை கையில் கொடுத்து, வடத்திற்கு பக்கத்தில் உட்கார்த்தி வைத்து, வெய்யில் போனப்பறம் எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு வாங்கோ, அது வரைக்கும் சமத்தா உட்கார்ந்து இருங்கோ இங்கேயே என்று விண்ணப்பித்து கொள்ளலாம்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. சூரி சார், சிசிடிவி எல்லாம் போடறது கஷ்டம். 54 குடும்பங்கள் இருக்கின்றன. :(

   வடாம் கொடுத்து ஓட்டுக் கேட்பதாக இன்றுவரை தினசரியில் தகவல் வரலை. :P :P :P

   கணினியிலே நோட்டிஸ் அடிச்சு சர்க்குலேஷன் விட இருந்தேன். ஆனால் குடியிருப்பு வளாகத்தின் துணைத் தலைவர் அதைச் செய்துவிட்டார் எங்கள் சார்பில்! :)))))

   ஆஞ்சநேயர் அம்மாமண்டபம் படித்துறையிலேயே இருக்காரே. ஆனால் இங்கே நாலாம் மாடி தாண்டி மொட்டை மாடிக்கெல்லாம் அவங்க வரதில்லை. அதோட அவங்கல்லாம் எடுத்தால் இப்படிச் சுத்தமா ஒண்ணுமே இல்லாம எடுக்க மாட்டாங்க. பிச்சுப் பிச்சுப் போடுவாங்க. தட்டும் வைச்ச இடத்திலே இருந்திருக்காது. இது இரண்டு கால் ஜீவன் தான் செய்திருக்கு. தட்டோடு எடுத்துக் கொட்டிக் கொண்டு தட்டை மட்டும் வைச்ச இடத்திலே திருப்பி வைச்சாச்சு. தட்டு ரொம்பப் பெரிசு; இல்லைனா அதுவும் போயிருக்குமோ???

   நீங்க வேறே மத்தியானம் வெயில் வீணாகாமல் நான் தான் முழிச்சுட்டுப் பார்த்துட்டு இருப்பேன். அப்போத் தான் அவசரமாத் தொலைபேசி அடிக்கும். எடுத்தால் அந்தப்பக்கம் இருக்கிறவங்க "தூங்கறீங்களா" னு விசாரிப்பாங்க. அதுக்கெல்லாம் யார் பதில் சொல்றது? நான் தான். :)

   Delete
 2. சூரி சார், ரொம்ப நாளா உங்களைக் காணோமேனு நேத்திக்கூட நினைச்சேன். வந்து கமென்டி என் கவலையைக் குறைத்ததுக்கு நன்றி. :))))

  ReplyDelete
 3. http://geetha-sambasivam.blogspot.in/2013/03/blog-post_20.html

  மேற்கண்ட சுட்டியில் பாருங்க, வெங்காயக் கறிவடாம்னா என்னனு தெரியும். :))) ஒரு சிலர் பூஷணிக்காய் கூடச் சேர்த்துப் போடுவாங்க. :))))

  ReplyDelete
 4. யோசனைகளுக்கெல்லாம் பதில் மெதுவா!

  ReplyDelete
 5. கீதா மேடம் , நீங்க நேரத்தை எங்கேயிருந்து திருடுகிறீர்கள். அதை சொல்லுங்கள் முதலில்.நான் உங்கள் வடாம் திருடனைக் கண்டு பிடித்துக் கொடுக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராஜலக்ஷ்மி, நான் எங்கே மத்தவங்க பதிவுக்கெல்லாம் வர முடியுது! அதிலிருந்தே தெரியலையா எனக்கு நேரத்தை நிர்வகிக்கத் தெரியலைனு! :))) மத்தியானம் கிடைக்கும் நேரம் முடிஞ்சதைப் பார்க்கிறதோடு சரி. காலை, மாலை வீட்டு வேலை போக ஒழிந்த நேரம் முக்கியமான மடல்கள் பார்ப்பேன். ராத்திரி ஏழு மணிக்குக் கணினியை ஏறக்கட்டிடுவேன். :))) அதுக்கப்புறமா உட்கார நேரமும் இருக்காது. வேலை எல்லாம் முடிய எட்டு ஆகிடும். ஒன்பது மணிக்குப் படுத்துடுவேன்.

   Delete
 6. யாரோ வடாம் விக்கிறவங்கதான் எடுத்துட்டு போயிருக்கனும்... ம்... கஷ்டபட்டு போட்டு இப்படியே ஆயிடுச்சே.. வெங்காயம் அரியாமலே இப்ப கண்ணுல தண்ணி வருது...

  ReplyDelete
  Replies
  1. யாரா இருக்கும்னு ஒருமாதிரிக் கண்டு பிடிச்சாச்சு! :( என்ன செய்ய முடியும்!

   Delete
 7. முதல்ல ப்ளாக் நேமை மாத்துங்க... நீங்க சாப்பிடலாம் வாங்க ... ன்னு கூப்பிடவே அவங்களும் சாப்பிடத்தானே வச்சிருக்கீங்கன்னு ஆட்டைய போட்டுட்டாங்க.......
  ஹி... ஹி...

  ReplyDelete
  Replies
  1. நீங்க வேறே உஷா! முதல்லே சமைக்கலாம் வாங்கனு தான் கூப்பிட்டேன். யாருமே சமைக்கிறதா, நான் வரலைப்பானுட்டாங்க. அப்புறமாத் தான் பேரை மாத்தினேன். இப்போத்தான் யாரானும் எட்டியானும் பார்க்கிறாங்க. இன்னும் பேரை மாத்தணுமா? ம்ஹூம், வாய்ப்பே இல்லை! அது சரி, உங்களை எங்கே காணோம்? ரொம்ப பிசி?

   Delete
 8. இதென்ன அநியாயம் கீதா. வடாம் யாராவது திருடுவாங்களோ. உலக மஹா அநியாயமா இருக்கே.அதுவும் உங்க காம்பவுண்டுக்குள்ள இருக்கிறவங்க செய்த வேலைதானா. அது இன்னும் மோசம். காக்கையாவது வயிற்றுக்கு எடுத்துக்கும் இந்த இரண்டுகாள் மிருகங்களுக்கு என்னபெயர் வைக்கலாம். சாரிம்மா. கஷ்டமா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வெளி ஆட்கள் இங்கே வர முடியாது வல்லி. செக்யூரிடி இருக்காங்க.ஆகவே குடியிருப்பில் உள்ளவங்க வீட்டிலே வேலை செய்யும் இரு பெண்கள் தான் என்று எல்லாருமே சொல்லி விட்டனர். :( ஏற்கெனவே அவங்க இப்படிச் செய்திருக்காங்கனு கேள்விப் பட்டேன். :(

   Delete
 9. அடப்பாவிகளா... எதைத் திருடறதுன்னு விவஸ்தை இல்லையா? பிறர் உழைப்பைத் திருடுவது என்ன செயலோ!

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் நேரம். ஏழரைச் சனி! இத்தோடு விட்டதேனு நினைச்சுக்கணும். :))))

   Delete
 10. மிகவும் வருத்தமாக உள்ளது அம்மா...

  ReplyDelete
  Replies
  1. இன்னமும் வருத்தமாய்த் தான் இருக்கு டிடி. :(

   Delete
 11. உங்க கை மணம் அவங்களுக்கும் தெரிஞ்சுருச்சு கீத்தாம்மா.

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹிஹி, நல்லா இருக்கு. :))))ரசிச்சுச் சிரிச்சேன்.

   Delete
 12. திருட்டு வடாம் பொறியுமோ?

  ReplyDelete
  Replies
  1. பொ"ரி"யும் அப்பாதுரை. :))))

   Delete
 13. சூரி சார் பின்றாரு!

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, அவருக்கென்ன! பின்னறதுக்கு! :))))

   Delete
 14. உழைப்பின் பலன் கிடைக்காமலே காணாமல் போவது கொடுமை.

  ReplyDelete
  Replies
  1. அதான் ரொம்ப வருத்தம். :(

   Delete
 15. ரொம்ப வருத்தமா இருக்கு.. மத்தவங்க உழைப்பைத் திருடுறது எவ்வளவு பெரிய பாவம்?!!.. இனிமே என்ன செய்ய நினைச்சிருக்கீங்க அம்மா?!..

  ReplyDelete
  Replies
  1. அடாது திருடினாலும் விடாது வடாம் போடப்படும் பார்வதி. இம்முறை திருட்டைக் கையும் களவுமாக் கண்டுபிடிக்கலாம்னு ஒரு யோசனை. :)))

   Delete
 16. எப்ப வடாம் போடறிங்கன்னு சொல்லுங்க நான் வர்றேன்... உங்க வடாம் காயுற வரை திருடங்க வராதமாதிரி பத்திரமா பார்த்துக்கிறேன்.. அதுக்கு எனக்கு சின்ன உதவி மட்டும் செஞ்சா போதும்... என் பக்கத்தில் வெயில் தெரியாம இருக்க ஹேர் கூலர்... ஒரு மணி நேரத்துக்கு ஒரு தரம் ஜூஸு... நல்ல புக்ஸ்...(கோடைவிடுமுறையை இப்படில்லாம் கொண்டாடுவோமில்ல...)..

  ReplyDelete
  Replies
  1. உங்க கதையை இன்னிக்கு தினமலர் வாரமலரிலே படிச்சேன். நீங்க சொல்வது சரியே. உயிருடன் இருக்கும்போது ஒரு வாய்த் தண்ணீர் கொடுக்காமல் செத்தப்புறம் என்ன செய்தால் என்ன! :(

   Delete
  2. ஹிஹிஹி, கமென்டுக்கு பதில் சொல்லலையே! எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துடுங்க. போறச்சே ஏர் கூலரையும், புத்தகங்களையும் விட்டுட்டுப் போங்க. நல்லா இருக்கும்.:)

   Delete
 17. வடாம் திருடு போகாம இருக்க நான் வந்து பார்த்துக்கறேன்! ஃபீஸ் அதிகமா ஒண்ணும் இல்லை. போடற வடாம் பாதி எனக்கு பார்சல் கட்டி கொடுத்துடுங்க... மீதி பாதி பொரிச்சு அங்கேயே சாப்பிடக் கொடுத்துடுங்க! சரியா....

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, வீட்டுக்கு வாங்க இந்த முறை லீவில் வந்தால். அப்போப் போட்டிருந்தால் பொரிச்சுத் தரேன். போடறதா வேண்டாமானு ஒரு டைலமாவிலே இருக்கேன். :))))

   Delete
 18. கவலையே படாதீங்கோ மாமி! ருசிபாத்தவர் எப்பிடி ஆனாலும் ரெண்டு நாளைக்கு மேல தாக்குபிடிக்கமுடியாம ஆஸ்பத்திரிக்கு ஓட்டம் பிடிப்பார் அப்போ உண்மை தன்னால வெளிவரும்! :P

  ReplyDelete
  Replies
  1. அட!!! தாக்குடு, எங்கே இந்தப் பக்கம்??? தப்பாய் நுழைஞ்சுட்டீஙக்ளா? அதே ஆசாமி இனிமே எப்போப் போடப் போறாங்கனு கையிலே பையோட காத்திருக்கிறதாச் செய்தி கிடைச்சது. :) :P :P :P

   Delete
 19. புறாவோ காக்காயோ சாப்பிட்டு இருக்க வாய்ப்பு இருக்கா?. நான் பல தடவை மாடியில் கோதுமை காய வெச்சு, புறா ஒரு கோதுமை கூட வைக்காமல் மொத்தத்தையும் சாப்பிட்ட அனுபவம் இருக்கு.

  ReplyDelete